850 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், அனந்தன்நகர்

          

தூய ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம்: அனந்தன்நகர், நாகர்கோவில், 629003

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: கோட்டார்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் ஏஞ்சலூஸ்

குடும்பங்கள்: 240

அன்பியங்கள்: 8

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு காலை 06:45 மணி ஜெபமாலை, காலை 07:15 மணி திருப்பலி

திங்கள், வியாழன், சனி காலை 06:00 மணி ஜெபமாலை, 06:30 மணி திருப்பலி

புதன் மாலை 06:00 மணி ஜெபமாலை, 06:30 மணி சகாய மாதா நவநாள், திருப்பலி

வெள்ளி மாலை 06:00 மணி ஜெபமாலை, திருப்பலி

முதல் வெள்ளி மாலை 06:00 மணி ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர்

திருவிழா: செப்டம்பர் மாதம் 08 ஆம் தேதியை அடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்சகோதரி. லீலா ரோஸ்லின் ராணி, SHS

2. அருட்சகோதரி. ஆஷா, SHS

3. அருட்சகோதரி. ஆன்றோ ஜெனி டெல்சியா, SHS

4. அருட்சகோதரி. லூர்து மேரி, SHS

வரலாறு:

அனந்தன் நகர் பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களின் முயற்சியாலும், அப்போதைய குருசடி பங்குத்தந்தை அருட்பணி. கபிரியேல் அவர்களின் முழு முயற்சியாலும், மேதகு ஆயர் மரியானூஸ் ஆரோக்கிய சாமி அவர்களின் பொருளுதவியாலும் 27.06.1978 அன்று 49 சென்ட் நிலம் வாங்கப்பட்டு (தற்போது ஆலயம் அமைந்துள்ள இடம்), ஓலைக் கூரை வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது.

அனந்தன் நகர் புனித ஆரோக்கிய அன்னையை பாதுகாவலியாகக் கொண்டு, 1979 ஆம் ஆண்டு குருசடி பங்கின் கிளைப் பங்காக அறிவிக்கப்பட்டது.

19.11.1989 அன்று மேலராமன்புதூர் (புனித தேவசகாயம் சிறைவைக்கப்பட்ட இடம்) பரிசுத்த திருக்குடும்ப ஆலயமானது தனிப் பங்காக உயர்த்தப்பட்ட போது, அனந்தன் நகர் ஆலயமானது மேலராமன்புதூரின் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

ஆலயம்:

23.04.1995 அன்று அருட்பணி. வி. மரிய ஜேம்ஸ் அவர்களால் தற்போதைய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பங்குத்தந்தை அருட்பணி. எஸ். சேவியர் பெனடிக்ட் பணிக்காலத்தில், அனந்தன் நகர் மக்களின் முழு ஒத்துழைப்புடன் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, 

21.09.1998 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பின்னர் 30.05.2004 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அனந்தன்நகர் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது.‌ அருட்பணி. மெல்கியாஸ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று சிறப்புற வழிநடத்தினார்.

பங்குப் பணியாளர் இல்லத்திற்கு 18.10.2004 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்று 28.03.2005 அன்று திறந்து வைக்கப்பட்டது.

பங்கு அலுவலகத்துடன் கூடிய தியான இல்லமானது பங்குத்தந்தை அருட்பணி. அருள் ஜோசப் பணிக்காலத்தில், முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. மெல்கியாஸ் அவர்களால் 02.10.2011 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி. வ. மரியதாசன் அவர்களால் 30.12.2012 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி இப்பங்கின் எல்லையில் அமைந்துள்ளதாலும், தூய ஆரோக்கிய அன்னையின் ஆலயம் நகரப் பகுதியில் இருப்பதாலும், ஏராளமான அற்புதங்கள் நடந்து வருவதாலும், ஞாயிறு திருப்பலி மற்றும் இதர விழாக்களில் போதும் ஏராளமான இறைமக்கள் பங்கேற்று இறைஆசீர் பெற்றுச் செல்கின்றனர்.

மேலும் பங்கின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பிற சபை ஆலயங்கள், பிற சமய கோயில்கள் இருந்தாலும், சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக ஒற்றுமையுடன் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஏழையர் தினம், மூத்தோர் விழா, கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் ஏழைகள் நலம் சார்ந்த ஆடை பகிர்வுகள், திருமணமாகி வெள்ளி விழா மற்றும் பொன்விழா தம்பதியர்களுக்கு பாராட்டு விழா எனப் பல்வேறு விழாக்கள் அர்த்தமுள்ள வகையில் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. அன்பிய ஒருங்கிணையம்

2. மறைக்கல்வி மன்றம்

3. சிறார் பணிக்குழு

4. இளம் மாணாக்கர் இயக்கம்

5. இளையோர் இயக்கம்

6. திருவழிபாட்டு குழு

7. பாடகர் குழு

8. பீடச் சிறார்கள்

9. மரியாயின் சேனை

10. குடும்ப நலக்குழு

11. மகளிர் கிராம முன்னேற்ற சங்கம்

12. புனித வின்சென்ட் தே பவுல் சபை

13. கத்தோலிக்க சேவா சங்கம்

14. அருள்பணிப் பேரவை

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. மெல்கியாஸ் (30.05.2004 -18.05.2010) 

2. அருட்பணி. அருள் ஜோசப் (19.05.2010 -22.06.2015) 

3. அருட்பணி. பிரபு (23.06.2015-23.08.2020) 

4. அருட்பணி. தே. அல்போன்ஸ்(24.08.2020 -11.07.2021)

5. அருட்பணி. மைக்கேல் ஏஞ்சலூஸ் (12.07.2021....)

அல்லல்படும் மக்களை, அரவணைத்து பாதுகாக்கும் அனந்தன்நகர் தூய ஆரோக்கிய அன்னையின் ஆலயத்திற்கு வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

வழித்தடம்: நாகர்கோவில் -ஆசாரிபள்ளம் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் அனந்தன்நகர் வழியாகச் செல்லும்.

இராணித்தோட்டம் அரசு பணிமனைக்கு அரை கி.மீ தொலைவில் அனந்தன்நகர் உள்ளது.

Location map:

Our Lady of Good Health Church

https://maps.app.goo.gl/RCF8iCBSsT1YUjt6A

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ மைக்கேல் ஏஞ்சலூஸ் அவர்கள்

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திரு. கிளாடின் அவர்கள்.