தூய கார்மல் அன்னை ஆலயம்.
இடம் : நுள்ளிவிளை.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.
குடும்பங்கள் : 250
அன்பியங்கள் : 10
ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு.
பங்குத்தந்தை : அருட்பணி. முனைவர் ராபர்ட் பென்னி.
திருவிழா : ஜூலை மாதம் 16ம் தேதி தூய கார்மல் அன்னை விழாவை சார்ந்த பத்து நாட்கள்.
சிறப்புகள்:
நூறாண்டுகள் பழமையான இவ் ஆலயமானது முதலில் காரங்காடு புனித அலோசியஸ் ஆலயத்தின் கிளைப்பங்காக இருந்தது. பின்னர் 2012 ம் ஆண்டு தனிப்பங்கு ஆனது. தற்போதைய புதிய ஆலயமானது 2000 -மாவது ஆண்டில் அர்ச்சிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
நுள்ளிவிளை வரலாறு :
நுள்ளிவிளை :
நுள்ளிவிளை பகுதியில் 15 ஆம் நூற்றாண்டில் குடியிருப்புப் பகுதியான கோவில்விளையில், கிறிஸ்தவ மறையைத் தழுவியவர்கள் குடியேறி மாதாவின் பெயரில் ஓலைக்குடிசை ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.
கி.பி 1772 ஆம் ஆண்டுக்கு முன் அருளப்பன் திருப்பாப்பு வழித்தோன்றலான தேவசகாயம் என்பவருக்கு மகப்பேறின்மையால் கோவில்விளைப் பகுதியில் தமக்குரிய சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை ஆலயத்திற்கு தானமாகக் கொடுத்தார். வழிபாட்டு கூடமாக ஓலை வேய்ந்த செபக்கூடமும், குருசடியும் இந்த நிலத்தில் அமைக்கப் பட்டது. குருசடியில் இருந்த இரட்டைக் குருசு (சிலுவை) தோமையார் கிறிஸ்தவர்கள் இவர்கள் என்பதற்கு சான்று.
கி.பி 1772 ஆம் ஆண்டு துவக்கத்தில் மக்கள் மத்தியில் கார்மெல் அன்னை பக்தி அதிகரிக்க கூண்டு வடிவில் ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.
பின்னர் சிற்றாலயம் வழிபாட்டிற்கு போதாமையால் 1945 ஆம் ஆண்டு அருட்பணி. மரியலூயிஸ் அடிகளாரின் வழிகாட்டுதலில் மக்களின் ஒத்துழைப்புடன் கற்களாலான ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு ஓடு வேயப்பட்ட ஆலயமாக பணிகள் நிறைவு பெற்றது.
பழைய ஆலயம் பழுதடைந்தும், மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே 2001 ஆம் ஆண்டு ஆலயத்தை விரிவாக்கம் செய்ய அருட்பணி. ஆன்றனி ஜெயா அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அனைவரின் ஒத்துழைப்புடன் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று 16.07.2003 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
2012 ஆம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.
மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. மரிய வில்லியம்
2. அருட்பணி. ஜெகன்போஸ்
3. அருட்சகோதரி மேரி பிரான்சிஸ்காள்
4. அருட்சகோதரி சார்லஸ் புஷ்பம்