838 புனித வனத்து அந்தோனியார் ஆலயம், புல்லக்கவுண்டன்பட்டி

   

புனித வனத்து அந்தோனியார் ஆலயம்

இடம்: புல்லக்கவுண்டன்பட்டி, சாத்தூர் தாலுகா, சங்கரபாண்டியபுரம் அஞ்சல், விருதுநகர் -626201

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்

பங்குத்தந்தை அருட்பணி. L. ஜெயராஜ், MSFS 

குடும்பங்கள்: 75

அன்பியங்கள்: 3

1. புனித லூர்து மாதா அன்பியம்

2. புனித பெரிய அந்தோனியார் அன்பியம் 

3. புனித செபஸ்தியார் அன்பியம்

ஞாயிறு திருப்பலி காலை 10:00 மணி

செவ்வாய்க்கிழமை மாலை 07:00 மணிக்கு புனித வனத்து அந்தோனியார் ஜெப வழிபாடு

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை 07:00 மணிக்கு, புனித வனத்து அந்தோனியார் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்

திருவிழா: ஜனவரி மாதம் 17 ஆம் தேதி (தை 1,2,3 ஆகிய தேதிகளில்)

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. A. ஜெகநாதன், MSFS

2. அருட்பணி.‌ A. மெசியா, CMF

3. அருட்சகோதரி. M. ஜோஸ்பின் வினிதா, SMMI

வரலாறு:

மதுரை உயர் மறைமாவட்டம், ஒத்தையால் பங்கின் கிளைப்பங்காக விளங்கும், புல்லக்கவுண்டன்பட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலயமானது நூற்றாண்டைக் கடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் ஆகும். இதன் வரலாற்றைக் காண்போம்.. 

புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தில் தெற்கு திசையில் புல்லர் இனத்தவரும், மேற்கு திசையில் கவுண்டர் இனத்தவரும் வாழ்ந்து வந்தனர். ஆகவே இவ்வூர் புல்லக்கவுண்டன்பட்டி என்ற பெயர் பெற்றது. ‌ஊரின் வட கிழக்குப் பகுதியில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த 75 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர்.‌ இவர்கள் வாழ்ந்த வடகிழக்குப் பகுதியானது அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. அப்பகுதியில் 1911 ஆம் ஆண்டு பனை ஓலை குடிசையில் புனித வனத்து அந்தோனியார் ஆலயம் அமைத்து இறைவனைப் வழிபட்டு வந்தனர். தொடர்ந்து சாத்தூர் பங்கின் கீழ் இவ்வாலயம் செயல்பட்டு வந்தது.

இயற்கைச் சீற்றங்கள் காரணமாக பனை ஓலை ஆலயம் சேதமடைந்து போகவே, தற்போது காணப்படும் ஓடு வேய்ந்த ஆலயமானது புதிதாக கட்டப்பட்டு, 28.04.1919 அன்று அருட்பணி. தலோன் முடியப்பநாத சுவாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

காலங்கள் நகர்ந்தன... வேலைவாய்ப்பு, தொழில் இவற்றின் காரணமாக புல்லக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பல கத்தோலிக்க மக்கள் வெளியூர்களில் குடிபெயர்ந்து சென்றனர்.  1999 ஆம் ஆண்டில் ஒத்தையால் தனிப்பங்காக ஆன போது, புல்லக்கவுண்டன்பட்டி அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

1919 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமானது, 112 ஆண்டுகளைக் கடந்து மீட்பின் அடையாளச் சின்னமாய், பாதையாய் திகழ்கிறது. 

நூற்றாண்டைக் கடந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் அற்புதங்களும், அதிசயங்களும் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக பில்லி சூனியக் கட்டுகள், மாந்த்ரீகம், அலகையின் போராட்டங்கள், தீராத நோய்கள் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது. மேலும் திருமண வரன்கள் அமையப் பெறாதவர்கள், வரன்கள் பெறுகின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாதோர், குழந்தை பாக்கியம் பெறுகின்றனர்.

இவ்வாறு எண்ணற்ற புதுமைகள் புரிகின்ற புனித வனத்து அந்தோனியாருக்கு நன்றி செலுத்தும் விதமாக, தை மாதம் 1,2,3 தேதிகளில் இறைமக்கள் இணைந்து பெருவிழாவாக கொண்டாடிய மகிழ்கின்றனர். நூற்றாண்டைக் கடந்த (112) பழைமை வாய்ந்த, புல்லக்கவுண்டன்பட்டி புனித வனத்து அந்தோனியார் ஆலயம் வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

இங்கு ஆர்.சி தொடக்கப்பள்ளி உள்ளது.

ஒத்தையால் பங்கின் பங்குத்தந்தையர்கள் பட்டியல் (MSFS):

1. அருட்பணி. ஜேம்ஸ் ஆனந்தராஜ் (1999-2002)

2. அருட்பணி. சகாயராஜ் (2002-2004)

3. அருட்பணி. நிக்கோலஸ் (2004-2007)

4. அருட்பணி. ஜோசப் சேவியர் (2007-2009)

5. அருட்பணி. சகாய செல்வன் (2009-2010)

6. அருட்பணி. ஸ்டீபன் சேவியர் (Asst.PP) (2009-2010)

7. அருட்பணி.‌ எபின் (2010-2013)

8. அருட்பணி.‌ பாஸ்கர் (Asst.P.P) (2011-2012)

9. அருட்பணி. ஆரோக்கியம் (Co-PP) (2012-2013)

10. அருட்பணி. தார்சியுஸ் (2013-2019)

11. அருட்பணி.‌ அந்தோனிராஜ் (Asst.PP) (2017-2018)

12. அருட்பணி. பிரான்சிஸ் தேவதாஸ் (2019-2020)

13. அருட்பணி. பிரிட்டோ (Asst.P.P) (2019-2020)

14. அருட்பணி. ஜெயராஜ் (2020---)

வழித்தடம்: சாத்தூர் -ஏழாயிரம்பண்ணை -புல்லக்கவுண்டன்பட்டி.

சாத்தூர் -வல்லம்பட்டி

கோவில்பட்டி -புல்லக்கவுண்டன்பட்டி

ஏழாயிரம்பண்ணை -வெம்பக்கோட்டை.

Map location: https://maps.app.goo.gl/BnhwKVtxihoiCAJh6

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஜெயராஜ் அவர்களின் வழிகாட்டலில் ஆலய உபதேசியார் சசி (எ) சாலமோன் ராஜா.