381 புனித அந்தோணியார் ஆலயம், குறிச்சி


புனித அந்தோணியார் ஆலயம்.

🏵இடம் : குறிச்சி

🌸மாவட்டம் : கோவை
🌸மறை மாவட்டம் : கோவை
🌸மறை வட்டம் : கோவை

🍇நிலை : கிளைப்பங்கு
🍇பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், போத்தனூர்.

💐பங்குத்தந்தை : அருட்பணி ஜோசப் டேவிட்
💐இணை பங்குத்தந்தை : அருட்பணி இம்மானுவேல் பீட்டர்

🌳குடும்பங்கள் : 70
🍀அன்பியங்கள் : 2

🔥ஞாயிறு திருப்பலி : காலை 09.30 மணிக்கு

🔥செவ்வாய் மாலை 07.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள், திருப்பலி.

🔥மாதத்தின் முதல் செவ்வாய் மாலை 07.00 மணிக்கு நற்கருணை ஆசீர், நவநாள், திருப்பலி.

🎉திருவிழா : ஜூன் 13 ம் தேதியை ஒட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்து வரும் ஞாயிறு.

👉Kurichi location map :
https://maps.app.goo.gl/cinsn34tmZ188a1L7

குறிச்சி ஆலய வரலாறு :

🌹சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர் குறிச்சி குளக்கரையில் இருந்த கிறிஸ்தவ விசுவாசிகள், சிலுவை திண்ணை அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். நாளடைவில் மண்ணால் சுவர் எழுப்பி, கூரை அமைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். இவ்வாலயமானது சரியான பராமரிப்பு இல்லாததால் மது விற்பவர்கள் தவறாக பயன்படுத்தினர். பின்னர் இறைமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இத்தகைய சமூக சீர்கேட்டினை இறைவனின் துணையுடன் முறியடித்து, அன்றைய போத்தனூர் பங்குத்தந்தை அருட்பணி மரிய சூசை அவர்களின் முயற்சியால் மண் சுவராக இருந்த ஆலயத்தை மாற்றி, கருங்கல் சுவர் எழுப்பி சிமென்ட் ஷீட் கூரை அமைக்கப்பட்டு 1953 ம் ஆண்டில் மேதகு ஆயர் சவரிமுத்து அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

🌷இறை மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அருட்பணி மரிய சூசை அவர்கள் வார நாட்களில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

🍀தொடர்ந்து அருட்பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி நிறைவேற்றி வந்தனர்.

🍇அருட்பணி C. S மதலைமுத்து அவர்களின் முயற்சியால் ஆலயத்திற்கு கான்கிரீட் கூரை அமைக்கப்பட்டு 03-02-2002 அன்று மேதகு ஆயர் M ஆம்புறோஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

🦋தற்போது பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் டேவிட் மற்றும் இணை பங்குத்தந்தை அருட்பணி இம்மானுவேல் பீட்டர் ஆகியோரின் வழிகாட்டுதலில் சிறப்பாக வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது குறிச்சி இறை சமூகம்.

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் டேவிட் அவர்களின் அனுமதியுடன், இணை பங்குத்தந்தை அருட்பணி இம்மானுவேல் பீட்டர் அவர்கள்.