716 புனித பார்பரா ஆலயம், பார்பரம்மாள்புரம்

     

புனித பார்பரா ஆலயம்

இடம்: பார்பரம்மாள்புரம், முனைஞ்சிப்பட்டி அஞ்சல், 627355

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்: 

1. புனித அந்தோனியார் ஆலயம், காடன்குளம்

2. புனித லூர்து மாதா ஆலயம், கீழக்கோடன்குளம்

பங்குத்தந்தை: அருட்பணி. P. அந்தோனி டக்ளஸ்

தொடர்புக்கு: +91 94865 53336

குடும்பங்கள்: 150

அன்பியங்கள்: 5

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணிக்கு

சனிக்கிழமை மாலை 06:15 மணிக்கு நவநாள் திருப்பலி நோயாளிகள் குணமளிக்கும் மன்றாட்டு

ஆங்கில மாதம் முதல் சனிக்கிழமை மாலை 06:30 மணிக்கு தெற்கூர் பார்பரம்மாள் ஆலயத்திற்கு சப்பர பவனியும், நவநாள் திருப்பலி, நோயாளிகளுக்கான குணமளிக்கும் வழிபாடு, தொடர்ந்து அசனம்

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி செப்டம்பர் மாதம் 06-ம் தேதி வரை புனித பார்பரம்மாள் திருத்தல பெரிய திருவிழா.

புனித பார்பரம்மாள் இறையடி சேர்ந்த டிசம்பர் மாதம் 04-ம் தேதியை மையமாக வைத்து தெற்கூர் புனித பார்பரம்மாள் திருத்தலத்தில் சிறிய திருவிழாவாக கொண்டாடப் படுகிறது.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Rev.Fr.  மைக்கிள் வின்சென்ட், தூத்துக்குடி மறைமாவட்டம் (பார்பரம்மாள்புரம்)

2. Rev.Sr. லூர்து, FIHM, (கீழக்கோடன்குளம்)

3. Rev.Sr. பொன்மேரி,  FIHM, (கீழக்கோடன்குளம்)

வழித்தடங்கள்:

1. திருநெல்வேலி- திசையன்விளை, வழி- முனைஞ்சிபட்டி, காரியான்டி

2. நாங்குநேரி- பார்பரம்மாள்புரம், வழி- மூலக்கரைப்பட்டி, முனைஞ்சிபட்டி or பரப்பாடி, கழுவூர் 

3. சாத்தான்குளம்- திருநெல்வேலி, வழி- வெங்கட்ராயபுரம், காரியான்டி, முனைஞ்சிபட்டி.

4. வள்ளியூர்- பார்பரம்மாள்புரம், வழி- கள்ளிகுளம், மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், காரியான்டி. 

5. திருச்செந்தூர்- பார்பரம்மாள்புரம், வழி- திருவைகுண்டம், பேய்க்குளம், முனைஞ்சிபட்டி

Location map:

Church of St. Barbara

Barbara Ammal Puram, Kadangulam Thirumalaipuram, Tamil Nadu 627355

https://maps.app.goo.gl/tEfEch6M6nXJUotD8

வரலாறு:

இடி, மின்னல் இயற்கை சீற்றங்கள் இவற்றில் இருந்து பாதுகாக்கும் பார்போற்றும் பார்பரம்மாள்புரம் புனித பார்பரம்மாள் திருத்தல வரலாற்றைக் காண்போம்....

திருநெல்வேலி -யில் இருந்து 35கி.மீ தெற்காகவும், நாங்குநேரியில் இருந்து 25கி.மீ கிழக்காகவும், சாத்தான்குளத்தில் இருந்து 17கி.மீ மேற்காகவும், விஜயநாராயணபுரம் கப்பற்படை தளத்திற்கு 10கி.மீ வடக்காகவும் பார்பரம்மாள்புரம் அமைந்துள்ளது.

இந்தியாவில் புனித பார்பரம்மாள் பெயரில் விளங்கும் மிகச் சிறந்த ஆலயம் இதுவாகும். இவ்வூரில் வாழ்ந்து வந்த முன்னோர்கள், சிறு வழிபாட்டு இடம் புனித பார்பரம்மாள் பெயரில் அமைத்தனர். அவ்விடம் தெற்கூர் என்று அழைக்கப்பட்டது. இங்கு பல்வேறு புதுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஆயிரமாயிரம் இறைமக்கள் வந்து வழிபடுவதும், தங்கி இருந்து ஜெபிப்பதும் அதிகரித்து கொண்டே வருவது இறைபிரசன்னம் நிறைந்த ஆலயம் என்பதை பறைசாற்றி வருகிறது.‌ விவசாயபூமி என்றாலும், புண்ணிய பூமியாக கருதப்படுகிறது.

ஒருசில சமூக காரணங்களால் இரண்டு தலைமுறைக்கு முன்னர், மக்கள் தெற்கூரில் இருந்து குடிபெயர்ந்து, புல்மேடு (தற்போது பார்பரம்மாள்புரம்) என்று அப்போது அழைக்கப்பட்டு வந்த இடத்தில் வாழத்தொடங்கினர். இங்கு ஓலைக் கொட்டகை ஆலயம் அமைத்து, இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் ஓட்டு கட்டிடமாகவும், தற்போது வானுயர்ந்த ஆலயமாகவும் இறைமக்களின் முயற்சியால் உயர்ந்து நிற்கிறது. 

சோமநாதபேரி பங்கில் இருந்து 2004 ஆம் ஆண்டு பார்பரம்மாள்புரம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ரெமிஜியூஸ் S. லியோன் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

புதிய ஆலயமானது 18.04.2017 அன்று மேதகு ஆயர் யுவான் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தெற்கூர் புதிய ஆலயமானது பங்குத்தந்தை அருட்பணி. P. அந்தோனி டக்ளஸ் பணிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இடி, மின்னல், இயற்கைச் சீற்றங்கள், அலகையின் சக்தியில் இருந்தும் பல்வேறு நோய்களில் இருந்தும் விடுதலை தரும் இந்த புதுமை நகருக்கு வந்து, புனித பார்பரம்மாள் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கும், பங்குத்தந்தை அருட்பணி. அந்தோனி டக்ளஸ் மற்றும் பங்கு இறைசமூகம்

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. திருக்குடும்ப சபை

2. மாதா சபை

3. பாலர் சபை

4. மரியாயின் சேனை

5. பாடகற்குழு

6. மறைக்கல்வி

7. திருவழிபாட்டுக்குழு

8. நற்கருணை வீரர் சபை

9. பீடப் பூக்கள்

10. ஊர் நிர்வாக கமிட்டி

பங்கில் உள்ள கல்விக் கூடங்கள்:

R.C. Primary School, Barbarammalpuram – 627 355, Ramakrishnapuram P.O.

St. Joseph’s Primary School, Keezhakodangulam – 627 355, Thirumalapuram Via

St. Joseph’s Orphanage, Keezhakodankulam – 627 355, Munanjipatti P.O

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லம்:

Sister of Immaculate Heart of Mary (Puducherry) (IHM)

Immaculate Heart of Mary Convent, Keezhakodankulam

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. ரெமிஜியூஸ் S. லியோன்  (2004–2009)

2. அருட்பணி. விக்டர் சாலமோன் (2009-2015)

3. அருட்பணி. அருள் தனசீலன் (2015-2017)

4. அருட்பணி. அந்தோனி டக்ளஸ் (2017 முதல்..)

புனித பார்பரம்மாளின் புதுவைகள் பாரெங்கும் பரவ, ஏராளமான இறைமக்கள் இவ்வாலயம் வந்து வேண்டுதல் செய்து, தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் நன்றி செலுத்தி வருகின்றனர். ஆகவே பங்கில் சிறிய மற்றும் பெரிய என இரண்டு ஆலயங்கள் உள்ளன..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. P. அந்தோனி டக்ளஸ் அவர்கள்.