778 இயேசுவின் திரு இருதய ஆலயம், டி.சிந்தலைச்சேரி

             

இயேசுவின் திருஇருதய ஆலயம்

இடம்: T.சிந்தலைச்சேரி, தேவாரம் வழி, உத்தமபாளையம் தாலுகா, T.சிந்தலைச்சேரி அஞ்சல், 625530

மாவட்டம்: தேனி

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: தேனி

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித சவேரியார் ஆலயம், T. பொம்மிநாயக்கன்பட்டி

2. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், T. தேவாரம்

3. லட்சுமி நாயக்கன்பட்டி

4. சமத்துவபுரம்

5. சங்கராபுரம்

6. தம்மிநாயக்கன்பட்டி

7. பண்ணைபுரம்

8. மேலச்சிந்தலைச்சேரி

பங்குத்தந்தை அருட்பணி.‌ R. மரிய பிரபு

Mob: +9199426 40385

உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. பிரிட்டோ கிளின்டன், MSFS

குடும்பங்கள்: 1800 (கிளைப்பங்குகள் சேர்த்து 2100)

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

திங்கள், புதன், வியாழன்  காலை 05:30 மணி திருப்பலி

செவ்வாய், வெள்ளி, சனி மாலை 06:30 மணி திருப்பலி

வெள்ளி மாலை 06:30 மணி இயேசுவின் திருஇருதய நவநாள் திருப்பலி

மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை திருஇருதய நற்செய்தி பணிக்குழு வழங்கும், நற்செய்தி தியானம், திருப்பலி

பங்குத் திருவிழா: ஜுன் 24 ஆம் தேதி

ஊர்த் திருவிழா: தை 3-ம் தேதி (ஜனவரி மாதம்) மூன்று நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. FR. LUCAS, CSSR

2. FR. AROCKIASAMY, JAMAICA

3. FR. INNACI MUTHU, SJ

4. FR. MARIA VALAN, SJ

5. FR. MARIA PAKIAM, SJ

6. FR. JEYARAJ J, MADURAI

7. FR. SAVARI MUTHU AUGUSTINE, SJ

8. FR. JOHN BRITTO, OSM

9. FR. MARIA ANTONY, OFM Cap

10. FR. MARIA SINGARAYAR, SJ

11. FR. GEORGE STEPHEN, MADURAI

12. FR. UVARI ANTONY, OSM

13. FR. LUCAS  RAYAPPAN, SJ

14. FR. JUSTIN  DIRAVIAM, MSFS

15. FR. AROCKIA RAJ, OFM Cap

16. FR. ARULANADAM, OFM Cap

17. FR. JOSEPH ANTONY, MADURAI

18. FR. AROCKIASAMY, MSFS (LATE)

19. FR. IGNATIUS (B.N.PATTY), Marianists

20. FR. EDWARD, MSFS

21. FR. ANTONY (B.N.PATTY), MSFS

22. FR. PETER PANDI, SMA (LATE)

23. FR. UVARI ANTONY (PAPPAIYA), SJ

24. FR. TONY UVARI (Rayarmani), SJ

25. FR. IRUDAYARAJ, INDORE

26. FR. GNANAPRAKASAM, PALLOTINE (LATE)

27. FR. MARTIN, SJ

28. FR. AROCKIASAMY (MANIYAR), GUWAHATI

29. FR. JESURAJ, HGN

30. FR. JOHN BRITTO RAYAPPAN, MSFS

31. FR. MARIA ANTONY, OSM

32. FR. ARULANANDU, OSM

33. FR. SHANKAR SAVARIMUTHU, DELHI

34. FR. PAUL PRAKASH, SJ

35. FR. RAJKUMAR, MSFS

36. FR. MAHIMAI RAJ, JHABUA

37. FR. SALETH MARIA DASS, HGN

38. FR. FRANCIS XAVIER, HGN

39. FR. ALBERT, MMI

40. FR. K. SAHAYARAJ, MADURAI

41. FR. ALBERT ( B.N.PATTY), CHENNAI

42. FR.ALEXANDER YAGAPPA, JHANSI

43. FR.S. SELVANATHAN, HGN

44. FR. COLUMBUS DANIEL, MC FATHERS

45. FR. AMAL CHARLES, CPPS

46. FR. ANTONY SUSAI RAJ, SVD

47. FR. JUSTIN DIRAVIAM, SDM

48. FR. GEORGE MARIARAJ, MSFS

49. FR. ALEXANDER (ATHIYADI), SCHOENSTATT

50. FR. RAJASEKAR, HGN

51. FR. ARUL SEKAR, CSSR

52. FR. ARUL VIJAY KUMAR, MMI

53. FR. GNANAMUTHU, OFM Cap

54. FR. MUTHUSELVAM, SVD

55. FR. PAPPY  VALAN, CSC

56. FR. LOUIS RAJ, CSSR

57. FR. ANTONY CHARLES, CSSR

58. FR. AROCKIA PRABHU, MSC

59. FR. A. LAWRENCE, OMD

60. FR. L. AROCKIASAMY, OMD

61. FR. SATHIYARAJ, OFM Cap

62. FR. JEYARAJ IGNATIOUS S, JAMSHEDPUR

63. FR. ANTONY RAJ, MSFS

64. FR. PACKIA SATISH KUMAR, MSFS

65. FR. ARUL JYOTHI (B.N.PATTY), GERMANY

66. FR. ARUL SATISH KUMAR, SVD

67. FR.MICHAEL RAJ, MSFS

68. FR. ANTONY ARUL, SJ

69. FR. ANBARASU, MSFS

70. FR. SELVAKUMAR, MMI

71. FR. PAUL RAJ, SJ

72. FR. SANTOSH (B.N.Patty), Marianist

73. DN. SOOSAI MANICKAM, AFFRICA

BROTHERS:

74. BRO. ANTONY (MAAN) SJ (LATE) 

75. BRO. JESUDOSS, SJ (LATE),

76. BRO. TONY, SJ   

77. BRO. ANTONY SIMON, SJ   

78. BRO. GNANA SEKAR, CSC

79. BRO. MARIA SOOSAI, MONFORT

80. BRO. S. UVARI ANTONY, SHJ

81. BRO.ARUL JEEVAN, CSC

82. BRO. ALEX SOOSAI, DE LA SAL

83. BRO. GNANA SEKAR, SHJ

84. BRO. REX XAVIER SAVARI, SHJ

85. BRO. N. ANTONY RAJA

86. BRO. C. ANTONY REX

87. BRO. YESU PRABHAKARAN (BNP),

MONFORT

88. BRO. UVARY ANTONY (BN PATTY), DE LE SAL

🌹மற்றும் 200-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்.

வழித்தடம்: மதுரை தேனி சின்னமனூர். சின்னமனூர் -போடி வழித்தடத்தில் T. சிந்தலைச்சேரி அமைந்துள்ளது.

Location map: Sacred Heart Church

https://maps.app.goo.gl/kA7vYrcdCosqSQEGA

வரலாறு:

சிந்தலைச்சேரி, தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில், சின்னமானுரிலிருந்து 8கி.மீ தொலைவில் உள்ளது. ஆரம்பத்தில் சித்தில்கரை அதாவது மான்கரை என்று அழைக்கப்பட்ட ஊர், பின்னர் டி.சிந்தலைச்சேரி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து வந்த காலகட்டங்களில், மக்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்காக கோம்பை, ராயப்பன்பட்டி, அனுமந்தன்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

திருச்சி மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட போது, பஞ்சம்பட்டியின் கிளைப்பங்காகவும், பின்பு சிலுக்குவார்பட்டியின் கிளைப்பங்காகவும் சிந்தலைச்சேரி இருந்தது. அதன்பின்பு 1924 வரை அனுமந்தன்பட்டியின் கிளைப்பங்காகவும் இருந்தது.

1924 இல் சிந்தலைச்சேரியை தனிப்பங்காக மேதகு ஆயர் பெய்சாண்டியர், SJ அறிவித்தார். முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை அட்ரியன் பொறுப்பேற்றார். டி.சிந்தலைச்சேரியில் முதலில் புனித அந்தோனியாருக்காக சிறு தேவாலயம் கட்டப்பட்டது. பின்பு ஒரு பெரிய தேவாலயம் கட்டப்பட்டு, இயேசுவின் திரு இருதய ஆலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அருட்தந்தை மேர்ஸ் (SJ) மாணவ மாணவியருக்கு தனித்தனியாக பள்ளிகளை ஆரம்பித்தார். அருட்தந்தை கொன்சால்வெஸ் (SJ), பெண்கள் மேல்நிலைப்பள்ளியை நிர்வாகம் செய்ய அமலவை அருட்சகோதரிகளை அமர்த்தினார். மேலும் தேவாரத்தில் ஒரு பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு மிகவும் பேராதரவு அளித்த செட்டியார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஆரம்பத்தில் அருட்சகோதரிகளால் நிர்வகிக்கப்பட்ட பள்ளி, பின்பு ஆசிரியப்பெருமக்களுக்கே நிர்வகிக்கும் பொறுப்பை அளித்தது.

ஒரு கத்தோலிக்க மதபோதகர் ஊர் பஞ்சாயத்து தலைவராக முடியுமா?

முடியும்!!! இது நடந்த இடம் சிந்தலைச்சேரி. 

அருட்தந்தை மத்தேயு - டி - முட்டம், SJ அவர்கள் பங்குத்தந்தையாக (1960-1975) பணியாற்றிய போது, அருட்தந்தை மத்தேயு "சமூக சேவை மையம்" ஒன்றை ஆரம்பித்தார். அருட்தந்தை மத்தேயு அவர்கள் ஊரில் 73 கிணறுகளை "Food for Work" என்ற திட்டத்தின் மூலம் தோண்டி, 53 பம்பு செட்டுகளை நிறுவினார். ஜெர்மனியிலிருந்து நன்கொடை பெற்று ஊரில் மாவு அரைக்கும் ஆலையையும், சேமிப்பு கிடங்கு மற்றும் வீடுகளை கட்டினார். இவர் காலத்தில் சிந்தலையிலிருந்து குச்சனுர், கீழசிந்தலைச்சேரி  மற்றும் பொம்மிநாயக்கன்பட்டி ஊர்களுக்கு சாலை வசதி அமைத்தார். 

அருட்தந்தை மத்தேயு உருவாக்கிய அனைத்து கிணறுகளும் உப்புத்தன்மை உடையதாய் இருந்தது, பின்பு அரசாங்கத்தின் உதவியுடனும், மக்களின் உதவியுடனும் நன்னீர் கிணறு தோண்டினர். அது இன்றளவும் குடிநீருக்காக பயன்பாட்டில் உள்ளது. 

முதலமைச்சராக காமராஜர் ஐயா பணியாற்றியபோது, 28 ஏப்ரல் 1963 அன்று மேல்நிலை தண்ணீர் தேக்க தொட்டிக்கு அடிக்கல் நாட்டினார். அருட்தந்தை மத்தேயு எல்லோராலும் ஒருமனதாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வாழ்வு நிறைய இளைஞர்களுக்கு உந்துதலாக இருந்தது. எனவே இறைவனுக்கும், மனிதர்களுக்கும் பணியாற்றும் வகையில் இறையழைத்தல்களை அதிகமாக தேர்ந்தெடுத்தனர்.

இம்மக்கள் ஆழ்ந்த இறைபக்தி உடையவர்கள். இவர்கள் பாதயாத்திரையாகவோ, திருயாத்திரையாகவோ; வேளாங்கண்ணி, மாரம்பாடி, கொடைக்கானல் சலேத்து அன்னை ஆலயம் இவற்றிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு புனிதரை பாதுகாவலராக வைத்து, அவர்களின் திருவிழாக்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

அருட்தந்தை சார்லஸ் கெஸ்டென், 2005 இல் கணினி மையத்தை ஆரம்பித்தார். அருட்தந்தை ஜெரோம் எரோணிமூஸ் அவர்கள், மழலையர் பள்ளிக்கென்று ஆழ்துளை கிணறு ஒன்று அமைத்தார்.

ஆரம்பத்தில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் 1965 க்கு பின்பு பெரும்பாலோனோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை செய்தனர். மேலும் சிலர் வர்த்தகம் செய்யவும் ஆரம்பித்தனர். அதன் விளைவு பொருளாதாரம் முன்னேற்றம் அடைய ஆரம்பித்தது. இங்கு 5 காணிகளும் 31 கும்புகளும் உள்ளன. 

சிந்தலைச்சேரி வரலாற்றை அறியும் போது கத்தோலிக்க கிறிஸ்தவம் எந்த அளவு வேரூன்றி உள்ளது என்பதை நாம் அறிகிறோம். சிந்தலைச்சேரி பங்கு கிறிஸ்தவ மதத்திற்கு ஒரு பாரம்பரிய பின்னணி கொண்டதாய் நமக்கு சாட்சியாய் விளங்குகிறது. இங்கிருந்து நிறைய ஆண்கள் மற்றும் பெண்கள் இறையழைத்தல்களை தேர்ந்து கொண்டு மறைமாவட்டங்களுக்காகவும், மற்ற துறவற சபைகளுக்காகவும் குருக்களாகவும், கன்னியர்களாகவும் பணியாற்றுகின்றனர். இங்கு குருத்துவ அருட்பொழிவு நிகழ்வு வழக்கமாகவும், மிகவும் அதிகமாகவும் நடைபெறும் விழாவாக அமைந்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் இறையழைத்தல் இருப்பது தனிச்சிறப்பு.

தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி. எட்வர்ட் பிரான்சிஸ் பணிக்காலத்தில் அப்போதைய மதுரை உயர் மறைமாவட்ட துணை ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி அவர்களால் 19.03.2000 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பங்கு மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் பணிகள் நிறைவு பெற்று, மதுரை மறைமாவட்ட முன்னாள் பேராயர் மேதகு M. ஆரோக்கிய சாமி மற்றும் துணை ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி ஆகியோரால் 27.06.2003 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

தனிப்பங்கானதன் நூற்றாண்டு விழாவை, 2024 ஆம் ஆண்டில் சிறப்பாக கொண்டாடி மகிழ இருக்கின்றனர் டி.சிந்தலைச்சேரி இறைசமூகத்தினர்.

பங்கின் கும்பு (குடும்பங்கள்):

1. கோவில்பிள்ளை

2. நாட்டாண்மை

3. மணியம், முதலாளி

4. தேவபக்தி

5. தரகர்

6. கீழவீடு

7. கொழுப்பட்டி, கிழக்கத்தி

8. பொதியன்

9. பெரியசவரி

10. சின்னசவரி

11. வல்லம்

12. தச்சன்குறிச்சி

13. கூத்தன்

14. நம்புரிச்சி

15. தைரியம்

16. சஞ்சன்

17. அருளப்பன்

18. தோமையர்

19. தொண்டான்

20. பழைய கோவில்பிள்ளை

21. ஞானி

22. வேந்தன்

23. வெங்காயம் பிள்ளை

24. பள்ளிக்கூடம்

25. அத்தியடி

26. முள்ளுப்பட்டி

27. ஊமையன்

28. பட்டியான்

29. மஞ்சப்பட்டி

30. கருத்தன்

31. உலகதி.

பங்கில் உள்ள குருசடிகள்:

ஆலய வளாகத்தில் (4)

1. புனித சவேரியார் குருசடி

2. புனித செபஸ்தியார் குருசடி

3. குழந்தை இயேசு குருசடி

4. புனித ஞானப்பிரகாசியார் குருசடி

ஆலயவளாகத்திற்கு வெளியே (5):

1. புனித அருளானந்தர் குருசடி

2. புனித சந்தியாகப்பர் குருசடி

3. வேளாங்கண்ணி மாதா குருசடி

4. புனித வனத்து அந்தோனியார் குருசடி

5. தேவமாதா குருசடி

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லங்கள்:

1. அமலவை அருட்சகோதரிகள், T. சிந்தலைச்சேரி

2. திருச்சிலுவை அருட்சகோதரிகள், T. பொம்மிநாயக்கன்பட்டி

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. அமல அன்னை ஆரம்பப் பள்ளி, T.சிந்தலைச்சேரி

2. புனித தெரசாள் நடுநிலைப் பள்ளி, T.தேவாரம்

3. அமல அன்னை மேல்நிலைப் பள்ளி, T.சிந்தலைச்சேரி

பங்கில் உள்ள சபைகள் இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. ஊர் பெரியதனக்காரர்கள்

3. C.VS. சங்கம்

4. புனித சூசையப்பர் சபை

5. புனித வின்சென்ட் தே பவுல் சபை

6. இயேசுவின் கண்மணிகள்

7. பீடப்பணியாளர்கள்

8. பாலர் சபை 

9. திருஇருதய நற்செய்திக்குழு

10. இதயம் திருவழிபாட்டுக்குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி.‌ அட்ரியன் (1922-26)

2. அருட்பணி.‌ குயினி (1926-31)

3. அருட்பணி.‌ பிரின்ஸ் (1931-33)

4. அருட்பணி.‌ இருதயம் (1934-36)

5. அருட்பணி.‌ P. S. அருள்சாமி (1936-38)

6. அருட்பணி.‌ G. சிகார்ட் (1938 ஜூன்)

7. அருட்பணி.‌ தியோடோநாட் (1938-39)

8. அருட்பணி.‌ கொன்சால்வஸ், SJ (1939-46)

9. அருட்பணி.‌ பில்லிங், SJ (1946-49)

10. அருட்பணி.‌ M. S.  அருளானந்தம் (1949-51)

11. அருட்பணி.‌ அந்தோணி சிமோ (1951-52)

12. அருட்பணி.‌ M. A. அருளானந்தம் (1952-1961)

13. அருட்பணி.‌ மத்தேயு தே முட்டம், SJ (1961-75)

14. அருட்பணி.‌ A. பல்த்தசார் (1975-76)

15. அருட்பணி.‌ G. அல்போன்ஸ் (1976-78)

16. அருட்பணி.‌ D. குழந்தைசாமி, SJ (1978-82)

17. அருட்பணி.‌ S. செபஸ்தியான் (1982-88)

18. அருட்பணி.‌ லாரன்ஸ் சேவியர் (1988-89)

19. அருட்பணி.‌ சில்வெஸ்டர் டிகுரூஸ் (1989-91)

20. அருட்பணி.‌ அருள்சாமி (1991-96)

21. அருட்பணி.‌ D. ஞானப்பிரகாசம் (1996-97

22. அருட்பணி.‌ எட்வர்ட் பிரான்சிஸ் (1997-2004)

23. அருட்பணி.‌ சார்லஸ் கெஸ்டன் (2004-2005)

24. அருட்பணி.‌ B. அருளானந்தம் (2005-2009)

25. அருட்பணி.‌ S. ஜெயராஜ் (2009-2010)

26. அருட்பணி.‌ J. R. ஜெரோம் எரோணிமூஸ் (2010-2015)

27. அருட்பணி.‌ P. சிலுவை மைக்கேல் ராஜ் (2015-2020)

28. அருட்பணி.‌ R. மரிய பிரபு (2020 முதல்...)

அதிசயங்களும், அற்புதங்களும் கொண்டதும், இறைவிசுவாசம் நிரம்பப் பெற்றதுமான, டி.சிந்தலைச்சேரி இயேசுவின் திரு இருதய ஆலயத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்:

பங்குப்பணியாளர் அருட்பணி.‌ R. மரிய பிரபு அவர்கள்

தகவல்கள் சேகரிப்பில் உதவி: டி.சிந்தலைச்சேரி பங்கு உறுப்பினர் திரு. சந்தியாகு அரசு