இடம் : புக்கீஸ், சிங்கப்பூர்
நாடு : சிங்கப்பூர்
மறை மாவட்டம் : சிங்கப்பூர்
ஆயர் : மேதகு வில்லியம் கோ
பங்குத்தந்தை : அருட்பணி நித்திய சகாய ராஜ்
ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு (தமிழ்)
மாலை 06.15 மணிக்கு (தமிழ்)
சனிக்கிழமை திருப்பலி : மாலை 07.00 மணிக்கு (தமிழ்)
சிறப்புகள் :
1888 -ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம்.
இந்த ஆலயத்திற்கு வருகின்ற மக்களில் சுமார் 80% மக்கள் நமது தமிழகத்தின் தஞ்சாவூர் மறை மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
ஆகவே தஞ்சாவூர் மறை மாவட்டத்தில் இருந்து, மூன்று வருடத்திற்கு ஒருமுறை அருட்பணியாளர்கள் இங்கு அனுப்பப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.
ஞாயிறு திருப்பலி முடிந்த பின்னர் மறைக்கல்வி வகுப்புகள் நடந்து வருகிறது. பல்வேறு சபைகள் இயக்கங்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
சிங்கப்பூரில் தமிழில் திருப்பலி நடைபெறும் ஒரே ஆலயம் இது என்பது தனிச்சிறப்பு. ஆங்கிலத்திலும் திருப்பலி நடைபெறும்.
புனித லூர்து மாதா கெபி, புனித ஆரோக்கிய மாதா கெபியும் உள்ளது.
கடல்கடந்து இந்தியாவிலிருந்து வரும் அனைத்து மக்களையும் தூய லூர்து அன்னை பாதுகாத்து, அவர்கள் வாழ்வை வளம் பெறச் செய்து வருவதால் அனைத்து தமிழர்களின் உள்ளத்தில் நீங்கா இரம்பெற்றுள்ளது இவ்வாலயம்.