இடம் : பரத்தவயல், இளையான்குடி தாலுகா
மாவட்டம் : சிவகங்கை
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : பரமக்குடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம்
பங்குத்தந்தை : அருள்பணி. M. ரமேஷ்
குடும்பங்கள் : 11
திருப்பலி : மாதத்தில் ஒருநாள்
திருவிழா : ஜூன் மாதத்தில்
வழித்தடம் : சாலைக்கிராமம் -RS மங்கலம் வழித்தடத்தில் பரத்தவயல் அமைந்துள்ளது.
வரலாறு :
பரத்தவயல் பகுதியில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
பரத்தவயல் கிராம மக்களால் ஆலயம் கட்டுவதற்கு நிலம் வாங்கி கொடுக்கப்பட்டு, சாலைக்கிராமம் பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணிசாமி அவர்களின் முயற்சியாலும் மக்களின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு 2005 -ம் ஆண்டு மேதகு ஆயர் சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
தற்போது புனித அந்தோனியார் தேர் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.
தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஜெபம் நடைபெறும். கிறிஸ்து பிறப்பு திருப்பலி, இறந்தோர் திருப்பலி, நவம்பர் 2ம் தேதி ஆத்துமாக்கள் திருப்பலி மற்றும் மக்களின் தேவைகளுக்கேற்ப திருப்பலி பங்குத்தந்தையால் நிறைவேற்றப் படுகின்றது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. M. ரமேஷ்