673 புனித சூசையப்பர் ஆலயம், வெய்க்காலிப்பட்டி

       

புனித சூசையப்பர் ஆலயம்

இடம்: வெய்க்காலிப்பட்டி, மேட்டூர் அஞ்சல், ஆலங்குளம் தாலுகா, 627808

மாவட்டம்: தென்காசி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: தென்காசி

நிலை: பங்குத்தளம் 

ளைப்பங்குகள்:

1. புனித காவல் தூதர்கள் ஆலயம், புலவனூர்

2. குழந்தை இயேசு திருத்தலம், ஆசீர்வாதபுரம்

ஆலயம் இல்லாத கிளைகிராமங்கள்

1. திரவியநகர்

2. சபரிநகர்

3. மேட்டூர்

4. சிவசைலனூர்

5. கானாவூர்

6. மாதாபுரம், புனித லூர்து மாதா கெபி

பங்குத்தந்தை: அருள்பணி. F. லியோ

தொடர்பு எண்: 9629108608

குடும்பங்கள்: 103

அன்பியங்கள்: 6

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08.00 மணி

வாரநாட்களில் திருப்பலி மாலை 07.00 மணி

தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் மாலை 06. 30 மணி செபமாலை 07.00 மணி திருப்பலி (பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம்) முடிந்தவுடன் புனித அந்தோணியார் அசனம்

புதன் மாலை 06.30 மணி செபமாலை, புனித சூசையப்பர் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்...

வெள்ளி மாலை 06.30 மணி செபமாலை, திருப்பலி, குணமளிக்கும் ஆராதனை

ஆண்டுத்திருவிழா: ஏப்ரல் 22-ம் தேதி கொடியேற்றம்.மே 01-ம் தேதி திருவிழா

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருள்பணி. பீட்டர் குழந்தை, (late), Madurai Arch diocese

அருட்சகோதரிகள்: 

அருட்சகோதரி. செசிலியா, CIC 

விண்ணில்...

1. அருட்சகோதரி. எவாஞ்சலின், CIC

2. அருட்சகோதரி. மரிய செல்வம், CIC

3. அருட்சகோதரி. ஹொனோரியுஸ் மேரி, OSM

4. அருட்சகோதரி. சில்வியா மேரி, OSM

5. அருட்சகோதரி. D. கிளாரா மார்கிரேட், IC

வழித்தடம்: அம்பை -தென்காசி வழித்தடத்தில், கடையம் -பாவூர்சத்திரம் சாலையில் வந்தால் வெய்க்காலிப்பட்டி வந்து சேரலாம்.

Location map: https://g.co/kgs/pFLngi

வரலாறு: 

"கற்றபின் பேசு; நோய் வருமுன் உடல்நலம் பேணு" சீராக்கின் ஞானம் 18:19

வெய்க்காலிப்பட்டி புனித சூசையப்பர் திருத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் அருகிலும், குற்றாலச் சாரலின் தென்றலிலும் தவழ்ந்து வரும் ஒரு அற்புதமான சூழலில் அமைந்துள்ளது... 

இந்தப் பங்கில் உள்ளவர்கள் தங்களை பூர்விக கிறிஸ்தவர்கள் என்று சொல்லி பெருமைப்படுகிறார்கள். புனித சூசையப்பருடைய பிள்ளைகளாக மக்கள் பக்தியில் சிறந்து விளங்குவதைக் கண்டு மக்களின் வாழ்க்கைத்தரம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. தொடக்க காலத்தில் நடுநிலைப் பள்ளி மற்றும் ஆசிரியர் பயிற்று பள்ளியும் இங்கு சிறந்து விளங்கியது. மற்ற ஊர்களில் இருந்தும் இங்கு வந்து கல்வி கற்றார்கள் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது. இந்த பகுதியில் படித்த பலர் ஆசிரிய பெருமக்களாக பணியாற்றி வருகிறார்கள். சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு இங்கிருந்துதான் அருட்தந்தையர்கள் பழைய காலத்தில் தங்கிருந்து பணி செய்ய சென்றிருக்கிறார்கள்.   இங்குள்ள மக்களின் தொழில் விவசாயம், பீடித்தொழில் மற்றும் ஒரு சிலர் ஆசிரியராக பணி செய்து வருகிறார்கள். 

தொடக்கத்தில் தென்காசி பங்கின் கிளைப் பங்காக வெய்க்காலிப்பட்டி செயல்பட்டு வந்தது. 1981-ம் ஆண்டில் தென்காசியிலிருந்து பிரிந்து ஆவுடையானூர் தனிப்பங்காக உயத்தப்பட்ட போது, வெய்க்காலிப்பட்டி புனித சூசையப்பர் ஆலயமானது, ஆவுடையானூர் பங்கின் கிளைப்பங்கானது.

ஆலயங்கள்:

தொடக்கத்தில் ஒரு ஆலயம் கட்டப்பட்டு புனித சூசையப்பருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. (விபரம் கீழே)

அதன் பிறகு பழைய ஆலயம் பராமரிப்பின்றி இருந்ததால், சற்று பெரிய ஆலயமாக கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் ஊருக்கு வெளியே இரண்டாவதாக ஓடு வேய்ந்த ஆலயம் ஒன்றைக் கட்டினர். 

பின்னர் இரண்டாவதாக கட்டப்பட்ட ஆலயத்தை இடித்து விட்டு,

ங்கு ஒரு பெரிய புதிய ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று சொல்லி தங்களுடைய பொருளாதாரத்தை அதற்காக கொடுத்திருக்கிறார்கள்.  மக்களின் நன்கொடைகளோடு இணைந்து எழுப்பிய ஆலயம் தான் இந்த புதிய ஆலயம். ரூபாய் 90 லட்சத்திற்கு மேலாக அவர்களே உருவாக்கி எடுத்தது தான் இந்த புதிய ஆலயம். ஜாதி, மத, இன வேறுபாடின்றி மக்கள் புனித சூசையப்பரிடம் வருகிறார்கள்.  நம்பிக்கையோடு செபித்து பலவிதமான அற்புதங்களை அதிசயங்களை காணுகிறார்கள். இங்கு பணியாற்றிய அருட்தந்தையர்கள் இங்கு வந்து தங்கி ஜாதி, மதம், இனம் பாராமல் பல்வேறு தரப்பட்ட மக்களுக்கும் திருச்சபையிலிருந்து உதவி செய்து இருக்கிறார்கள். அவர்களும் இன்றைய நாட்களிலே புனித சூசையப்பர் ஆலயத்திற்கு நன்றி உணர்வோடு இருப்பது சாலச் சிறந்தது. ஆவுடையானூர் பங்குத்தந்தையாக அருட்திரு. P. தேவராஜன் அடிகள் பணிபுரிந்த காலத்தில் புதிய புனித சூசையப்பர் ஆலயத்திற்கு அருட்திரு. V. K. S. அருள்ராஜ் அடிகளாரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 01.05.2015 அன்று பாளை மறை மாவட்டத்தின் இரண்டாவது ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் D.D ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, புதிய திறந்து வைக்கப்பட்டது.  

மக்களினுடைய ஆன்மீகத் தேவைகளை கருத்தில் கொண்டு, மறைமாவட்ட ஆயர் மேதகு A. ஜூடு பால்ராஜ் D.D ஆண்டகை அவர்கள்  ஆவுடையனூர் பங்கிலிருந்து பிரித்து 29.04.2018 அன்று மறை மாவட்டத்தின் 55-வது பங்காக வெய்க்காலிப்பட்டியை  உயர்த்தினார். முதல் பங்குத்தந்தையாக அருட்திரு. லியோ அவர்கள் பொறுப்பெடுத்து மிகச் சிறப்பாக பங்கை வழி நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றப் படுகின்து. மக்கள் ஆர்வமாக பங்கின் வளர்ச்சியிலும் ஆன்மீக வாழ்விலும் ஈடுப்பட்டு வருகிறார்கள்...

பழைமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலயம்:

சுமார் 180 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட புனித சூசையப்பர் ஆலயமானது பங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய பங்கு ஆலயம் கட்டப்பட்டதால், கடந்த 38 ஆண்டுகளாக இந்த ஆலயம் அடைபட்டுக் கிடந்தது. தற்போதைய பங்குத்தந்தை அருள்பணி. லியோ அவர்களின் அரிய முயற்சியால் மீண்டும் திறக்கப்பட்டு, புனித அந்தோனியார் பெயரில் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 08-ம் தேதி முதல் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 08-ம் தேதி மாதா திருவிழாவும் புனித அந்தோணியார் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்த ஆலயத்திற்கு அருகில் மூன்று வெளிநாட்டு மிஷனரிகளின் கல்லறைகள் காணப்படுகின்றது. 

ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் மாலையில் திருப்பலி நடைபெறுகிறது. ஏராளமான இறைமக்கள் இதில் பங்கேற்று ஆசீர் பெறுகின்றனர். மேலும் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதால் பிற சமயத்தவர்கள் பலர் இவ்வாலயம் வந்து நன்றி செலுத்தி செல்கின்றனர்.

பங்கில் உள்ள சபைகள்/ இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை

3. பீடப்பூக்கள்

4. பாடகற்குழு

5. மாதாசபை இளம்பெண்கள்

6. இளையோர் இயக்கம்

7. திருவழிபாட்டுக்குழு

8. பாலர்சபை

9. பங்குப்பேரவை

10. மறைக்கல்வி

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ குருமடம்:

1. ஆர்‌.சி தொடக்கப்பள்ளி

2. புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி

3. புனித ஜோசப் கல்வியல் கல்லூரி

4. புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

5. தூய மரியன்னை குருமடம்

பங்கில் புனித சூசையப்பர் கெபி ஒன்றும் உள்ளது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்திரு. F. லியோ