80 புனித செபஸ்தியார் ஆலயம் கோட்டப்பாளையம்


புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : கோட்டப்பாளையம்.
வட்டம் : துறையூர்.

மாவட்டம் : திருச்சி
மறை மாவட்டம் : கும்பகோணம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனிதை மரிய மதலேனாள் திருத்தலம், கோட்டப்பாளையம்.

குடும்பங்கள் : சுமார் 80
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : இல்லை. அனைவரும் பங்கு ஆலயத்திற்கு செல்வார்கள்.

மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

பங்குத்தந்தை : அருட்பணி அகஸ்டின் அடிகளார்.

திருவிழா : ஜனவரி மாதத்தில்

வரலாறு:

கோட்டப்பாளையம் புனித செபஸ்தியார் ஆலய வரலாறு :

1901 ம் ஆண்டு சிறிய கூரை கோவில் ஆக கட்டப்பட்டது. 1903 ல் ஓட்டுக்கோவிலாகவும் பிறகு 1907 ல் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டது.

1917ம் ஆண்டு பின் பகுதி கோபுரத்தில் 6 அடி திருச்சிலுவை நிறுவப்பட்டது.

புனித செபஸ்தியார் கோவில் முக்கியமானது பீடமாகும் இது பழங்கால கட்டக் கலைக்கு ஒரு சான்று ஆகும்.

கோவிலின் வெளிப்புறம் சரியாக பராமரிக்கப் படாமல் பல காலமாக இருந்தது. அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி.தனராஜ் அவர்களின் முயற்சியாலும் செபஸ்தியார் கோவில் பகுதி இறைமக்களின் கடுமையான முயற்சியாலும் சீரும் சிறப்புமாக 2001 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ம் நாள் அப்போதைய பங்குதந்தை V.I.பீட்டர் அவர்களாலும் அப்போதைய கும்பகோணம் மறை ஆயர் மேதகு .பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு புதுமை படுத்தப்பட்டது.....

குறிப்பாக செபஸ்தியார் கோவில் பகுதி இறைமக்கள் ,இளைஞர்கள் மற்றும் சிலரின் நன்கொடையாலும் ஆலயம் கட்டப்பட்டது....

கடந்த ஆண்டு 2013 ல் இளைஞர்களின் முயற்சியால் கோவிலின் உட்புற சுவர்களில் வெள்ளை அடிக்கப்பட்டு அழகு படுத்தப் பட்டது.

2001 ம் ஆண்டு வரை திருவிழா பாஸ்கா காலத்திற்கு முதல் வாரத்தில் நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு வந்த பங்குதந்தை V.I.பீட்டர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 12 ம் தேதி கொடியேற்றப்பட்டு அதே மாதம் 18,19,20 ஆகிய தேதிகளில் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.......

புனித செபஸ்தியார் இளைஞர் அணி உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது

ஆண்டு திருவிழா:

கொடியேற்றம்: ஜனவரி 12ம் தேதி மாலை 06.00 மணிக்கு.

திருவிழா:
18 ம் தேதி நவநாள் திருப்பலி
19 ம் தேதி நவநாள் திருப்பலி திருப்பலி முடிந்த பிறகு இளைஞர்களின் நன்கொடையில் அன்புவிருந்து நடைபெறும்.

இரவு 10.00 மணியளவில் மின் விளக்கு மற்றும் மலர் அலங்காரத்துடன் தேர் பவனி நடைபெறும்.

20 ம் தேதி காலை 07.00மணிக்கு திருவிழா திருப்பலி மதியம் 02.00மணி அளவில் மலர் அலங்காரத்துடன் தேர்பவனி வீதியுலா நடைபெறும்.

24ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்......