813 தூய இதய அன்னை ஆலயம், மணியாரங்குன்று -அம்சி

  
   

தூய இதய அன்னை ஆலயம்

இடம்: மணியாரங்குன்று -அம்சி

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: குழித்துறை

மறைவட்டம்: வேங்கோடு

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்

1. தூய ஜாண் போஸ்கோ ஆலயம் பாத்திமாநகர்

2. தூய சகாய அன்னை ஆலயம், ஊற்றுக்குழி

பங்குத்தந்தை: அருட்பணி. காட்வின் சௌந்தர்ராஜ்

குடும்பங்கள்: 275

அன்பியங்கள்: 12

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

புதன் மாலை 06:00 மணி திருப்பலி

சனிக்கிழமை காலை 06:30 மணி திருப்பலி

திருவிழா: மே மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. சுஜின், குழித்துறை மறைமாவட்டம்

2. அருட்சகோதரி. ஜெனோபா

3. அருட்சகோதரி. கலா மேரி

4. அருட்சகோதரி.‌ மரிய ஜெமினிஷா

வரலாறு:

முக்கடலும் சங்கமித்து முத்தமிழும் மணம் பரப்பும் கன்னியாகுமரி மாவட்டத்தில், விளவங்கோடு வட்டம், தேங்காப்பட்டணம் ஊராட்சியில், பல்வேறு இயற்கை வளங்கள் நிறைந்த பெரிய குன்று தான் மணியாரங்குன்று.

மணியாரங்குன்று மற்றும் அம்சி பகுதிகளில் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை ஒருங்கிணைத்து, குழித்துறை மறைமாவட்டத்தின் ஓர் இணையற்ற அங்கமாக செயல்படும் பங்கு தான் இதய அன்னை ஆலயம் மணியாரங்குன்று -அம்சி‌.

1896 ஆம் ஆண்டு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அருட்பணியாளர் எலியாஸ் அடிகளாரால் திருக்குடும்ப ஆலயம் நிறுவப்பட்டது. தொடர்ந்து வேங்கோடு புனித சவேரியார் ஆலயத்தின் கீழ் இவ்வாலயம் செயல்பட்டு வந்தது. 

இந்த இடத்தின் இயற்கைச் சூழல்களையும், அருமை பெருமைகளையும் கண்ணுற்ற அருட்பணியாளர் வின்சென்ட் அடிகளார் 19.12.1944 அன்று ஆலயம் அமைக்க அனுமதி பெற்றார்.

1947 ஆம் ஆண்டு கருங்கல்லால் ஆன தூய இதய அன்னை ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

30.09.1955 அன்று புனித அந்தோனியார் குருசடி கட்ட அருட்பணியாளர் வின்சென்ட் அடிகளார் அனுமதி பெற்றார். 

1958 ஆம் ஆண்டு அம்சி மணியாரங்குன்று தூய இதய அன்னை ஆலயமானது, தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக, ஏற்கனவே இங்கே பணிசெய்து கொண்டிருந்த அருட்பணி. வின்சென்ட் அடிகளார் பொறுப்பேற்று வழிநடத்தினார்.

ஆண்டுகள் பல கடந்தன. அருட்பணியாளர்கள் பலர் பணியாற்றிச் சென்றனர். இயல்பான பணிகளை சமூக, பொருளாதார, ஆன்மீக வளர்ச்சிக்காக செய்தனர். 

ஊரின் வளர்ச்சிக்கு கல்வி நிலையம் ஒன்று தேவை என்பதை உணர்ந்து அருட்பணியாளர் ஜேக்கப் லோப்பஸ் அடிகளார் 01.06.1978 அன்று தூய இதய அன்னை ஆரம்பப்பள்ளி என்ற பெயரில் கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். இன்றளவும் இப்பள்ளிக்கூடம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. 

தொடர்ந்து அருட்பணி. ஜாண் ஜோசப் அடிகளார் பங்கு மக்களை ஆன்மீகப் பாதையில் தட்டியெழுப்பி, பங்கு ஈடுபாட்டிற்கு அடித்தளமிட்டார். 

அருட்பணி. லூக்காஸ் அடிகளார் ஆலய விரிவாக்கம், கன்னியர் இல்லம், மருந்தகம், சுற்றுச்சுவர் போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார்.

அருட்பணி.‌ ஏசுதாஸ் அடிகளார் ஓட்டுக்கூரையாக இருந்த ஆலயத்தைக் கான்கிரீட் கூரையாக மாற்றியதோடு, அருட்பணி. வின்சென்ட் கலையரங்கத்தை கட்டினார். 

பாசனத்திற்கான கிணறு, ஆலய வளாகத்தின் அருகில் கடைகள் முதலியவற்றை அமைத்து வருமானத்திற்கு வழிவகுத்தனர். 

அருட்பணி. பால் ரிச்சர்ட் ஜோசப் அவர்கள் தோரண வாயில்கள், பங்குப் பணியாளர் இல்லம், ஆலயத்தில் மொசைக் தரை போன்றவற்றை அமைத்து அழகு சேர்த்தார். 

அருட்பணி. மைக்கேல் ராஜ் அவர்களால் தொடங்கப்பட்டு, அருட்பணி. கில்பர்ட் லிங்சன் அவர்களால் முடிக்கப்பட்டு, அருட்பணி. கலிஸ்டஸ் அவர்களால் மெருகூட்டப்பட்ட மாதா அரங்கம் என்ற சமூக நலக்கூடம் கம்பீரமாக எழுந்து நின்று, சுற்றிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

அருட்பணி. கலிஸ்டஸ் அவர்களின் அயராத முயற்சியினால் சொத்தின் சுற்றுச்சுவர், கல்லறைத் தோட்டத்திற்கான பாதை, பங்குப் பணியாளர் இல்லம் பராமரிப்பு, மகளிருக்கான கழிப்பறை வசதி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது பங்குப் பணியாளர் அருட்பணி. காட்வின் சௌந்தர்ராஜ் அவர்களின் வழிகாட்டலாலும், ஈடுபாடுகளாலும், பங்கு அருட்பணிப் பேரவை மற்றும் பக்த சபைகள் இயக்கங்களின் அளப்பரிய செயல்பாடுகளினாலும், 12 அன்பியங்களின் ஈடு இணையற்ற உடனிருப்பாலும், எல்லாவற்றிற்கும் மேலாக ஆலய பாதுகாவலி தூய இதய அன்னையின் பரிந்துரையாலும், பாதுகாப்பாலும் நூற்றாண்டைக் கடந்த இந்த ஆலயம், வாழ்ந்து வளர்ந்து, வேண்டிய வரங்களை ஈந்து குன்றின் மேலிட்ட விளக்காக ஜொலிக்கிறது.

குருசடிகள்& கெபி:

1. புனித அந்தோனியார் குருசடி, கும்பகோடு

2. புனித அந்தோனியார் குருசடி, அம்சி தெரு

3. தூய ஆரோக்கிய மாதா குருசடி, ஆலய வளாகம்

4. தூய லூர்து மாதா கெபி, ஆலய வளாகம் 

மாதா அரங்கம் உள்ளது.

Francisca Sister's of St Joseph (FSJ) சபை அருட்சகோதரிகள் இல்லம் அமைத்து, IHM Hospital, Amsi நடத்தி வருகின்றனர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர் சபை

2. சிறார் இயக்கம்

3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

4. இளைஞர் இயக்கம்

5. கத்தோலிக்க சங்கம்

6. கத்தோலிக்க சேவா சங்கம்

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. கோல்பிங் இயக்கம்

9. வாழை விவசாயிகள் சங்கம்

10. KIDS சுய உதவி குழுக்கள்

11. மரியாயின் சேனை

12. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

13. மறைக்கல்வி

14. திருவழிபாட்டுக் குழு

15. அன்பிய ஒருங்கிணையம்

16. சபைகள் இயக்க ஒருங்கிணையம்

17. பங்கு அருட்பணிப் பேரவை

18. நிதிக்குழு

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி.‌ வின்சென்ட் (1944-1955)

2. அருட்பணி. கிறிஸ்டியன் (1955 பொறுப்பு சில மாதங்கள்)

3. அருட்பணி. வின்சென்ட் (1955-1959) (1958 ஆம் ஆண்டு தனிப்பங்கானது. பங்கின் முதல் பங்குத்தந்தை.) 

4. அருட்பணி. S. ஜோசப் (12.06.1959 -15.05.1961)

5. அருட்பணி. J. ஜார்ஜ் (15.05.1962 -27.11.1971)

6. அருட்பணி. சூசை (27.11.1971 -16.05.1976)

7. அருட்பணி.‌ லோப்பஸ் (16.05.1976 -05.07.1980)

8. அருட்பணி. A. M. செபாஸ்டின் (05.07.1980 -01.06.1982)

9. அருட்பணி. ஜாண் ஜோசப் (01.06.1982 -22.05.1985)

10. அருட்பணி. லூக்காஸ் (22.05.1985 -06.11.1989)

11. அருட்பணி. செல்லையன் (06.11.1989 -31.05.1990)

12. அருட்பணி. S. பிரான்சிஸ் (31.05.1990 -01.06.1993)

13. அருட்பணி. J. G. ஜேசுதாஸ் (01.06.1993 -06.06.1999)

14. அருட்பணி. பால் ரிச்சர்ட் ஜோசப் (06.06.1999 -02.06.2006)

15. அருட்பணி. ததேயு லியோன் ஜோஸ் (02.06.2006 -19.10.2006)

16. அருட்பணி. B. மைக்கேல் ராஜ் (19.10.2006 -08.02.2013)

17. அருட்பணி. கில்பர்ட் லிங்சன் (08.06.2013 -07.11.2017)

18. அருட்பணி. கலிஸ்டஸ் (07.11.2017 -09.08.2021)

19. அருட்பணி. M. காட்வின் சௌந்தர்ராஜ் (09.08.2021...)

வழித்தடம்: மார்த்தாண்டம் -தேங்காய்பட்டணம் சாலையில், அம்சி சந்திப்பில் இருந்து இடது புறமாக 1கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map:Thuya Iruthaya Annai Church https://maps.app.goo.gl/1hTsp1z1a1gS1Nec7

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி.‌ காட்வின் சௌந்தர்ராஜ் அவர்கள்

புகைப்படங்கள்: பங்கு உறுப்பினர்