870 இருதய ஆண்டவர் ஆலயம், மதகொண்டப்பள்ளி

    

இருதய ஆண்டவர் ஆலயம்

இடம்: மதகொண்டப்பள்ளி

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: தேன்கனிக்கோட்டை

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை அருட்பணி. விஜய் அமிர்தராஜ்

குடும்பங்கள்: 350

அன்பியங்கள்: 13

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:30 மணி

திங்கள், புதன், வியாழன் திருப்பலி காலை 06:30 மணி

வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி திருப்பலி, நற்கருணை ஆராதனை

செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

சனிக்கிழமை மாலை 06:30 மணி தூய சகாய மாதா நவநாள் திருப்பலி 

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 06:30 மணி திருஇருதய ஆண்டவர் செபவழிபாடு, நற்கருணை பவனி 

மாதத்தின் மூன்றாவது செவ்வாய்க்கிழமை மாலை 06:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி தேர்பவனி, நற்கருணை ஆசீர்

திருவிழா: ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. ஆல்பர்ட் வில்லியம்

2. அருட்பணி. அமல், PIM

மற்றும் பல அருட்சகோதரிகள்.

வழித்தடம்: ஓசூர் தளி வழித்தடத்தில், ஓசூரிலிருந்து 16கி.மீ தொலைவில் மதகொண்டப்பள்ளி அமைந்துள்ளது. 

Location map: https://g.co/kgs/kxPGbB

பங்கு வரலாறு:

ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த இடங்கள் திப்புசுல்தானின் படையெடுப்புக்கு பின் மறைந்துபோயின. கெலமங்கலம் அருகே இருந்த கப்பினாகத்தி, எடப்பள்ளி ஆகிய ஊர்களில் வாழ்ந்த கிறிஸ்துவர்கள் அங்கிருந்து வெளியேறினர். திப்புவுக்கு பிறகு பல புதிய கிறிஸ்தவ குடியிருப்புகள் உருவாகின.

மதகொண்டப்பள்ளியில் கிறிஸ்துவர்கள் குடியேற்றம், 1794-இல் உருவாகியிருக்கலாம் என தந்தை எம்.எஸ். ஜோசப் இதனை குறிப்பிடுகிறார். 1799 ஆம் ஆண்டு பாரிஸ் மறைபரப்பு சபையைச் சார்ந்த அருட்பணி. அபேதுபே மைசூர் செல்லும் வழியில், மதகொண்டப்பள்ளிக்கு வந்தார். அருட்பணி. அந்தோனி அடிகளார், வந். ஷம்பனூவாவின் கட்டளையின் மேல் ஸ்ரீரங்கப்பட்டிணத்திலுள்ள கிறிஸ்தவர்களைக் கண்காணிக்கச் சென்றார். போகும் வழியில் முதலில் பாலக்காட்டிலுள்ள மதகொண்டப்பள்ளிக்கு வந்தார். அங்கு வேதகலாபனை காலத்தில் பிறமத்தினரால் காப்பாற்றப்பட்ட விசுவாசிகளை கண்டார் (தந்தை எம்.எஸ். ஜோசப், பக் 81), இக்கருத்தை தந்தை ஜான் மாந்தடம் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்விலும் உறுதிப்படுத்துகிறார். (பாலக்காட் - ஓசூர் பகுதியை குறிப்பது.)

1845 ஆம் ஆண்டு மைசூர் மறைமாநிலம் உருவாக்கப்பட்டது. பெங்களூருவை உள்ளடக்கிய இந்த மறைமாவட்டத்தோடு ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகள் இணைக்கப்பட்டன. மைசூர் முதல் ஆயராக புதுவையில் திருநிலைப்படுத்தப்பட்ட மேதகு ஷார்போனா, மைசூர் செல்லும் வழியில், தனது மறைமாவட்ட பகுதியான

மதகொண்டப்பள்ளிக்கு முதலில் வந்தார். பெங்களுருவில் பணியாற்றி வந்த மறைப்பணியாளர்களின் கண்காணிப்பில் மதகொண்டப்பள்ளி உள்ளடக்கிய ஒரு பகுதிகள் இருந்தன. 

மறைப்பணியாளர்களின் பற்றாக்குறையால் சில காலங்களில் தருமபுரி, கோவிலூர் மறைப்பணியாளர்கள் இப்பகுதியை கவனித்து வந்தனர். கோவிலூரில் இருந்த தந்தை கூயோன் ராயக்கோட்டை, எடப்பள்ளி, மத்திகிரி, மதகொண்டப்பள்ளி, தாசரப்பள்ளி, மருதனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை முதலிய விசாரணைகளைக்

கவனிக்க வேண்டியிருந்தது. (தந்தை எம்.எஸ்.ஜோசப், பக் 132)

தொடர்ந்து ஆனேக்கல், மத்திகிரி, பேகூர் போன்ற இடங்களில் வாழ்ந்த மறைப்பணியாளர்களின் கண்காணிப்பில் மதகொண்டப்பள்ளி இருந்தது. 1930 ஆம் ஆண்டு வரை மைசூர் மறை மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்த மதகொண்டப்பள்ளி, 1930-ல் சேலம் மறைமாவட்டம் உதயமானபோது, சேலம் மறைமாவட்டத்தோடு இணைக்கப்பட்டது. 

1930ஆம் ஆண்டு வரை மத்திகிரியில் தங்கியிருந்த மறைப்பணியாளர்கள் மதகொண்டப்பள்ளியை கவனித்து வந்தனர். 1930ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் தந்தை புலியார்டு மதகொண்டப்பள்ளியில் தங்கினார். மதகொண்டப்பள்ளி பங்கு இன்றைய தேன்கனிக்கோட்டை மறைவட்டம் 

முழுவதையும் உள்ளடக்கியதாக இருந்தது.

சேலம் மறைமாவட்டம் உருவானபோது, அன்றைய ஆயர் மேதகு புரூனியரின் அழைப்பை ஏற்று, சேலம் மறைமாவட்டத்தில் பணிபுரிய வந்த கேரளாவைச் சேர்ந்த முதல் குரு அருள்தந்தை தலச்சீரா. 17-07-1902 இல் பிறந்த இவர் 21-12-1929 குருப்பட்டம் பெற்று 1930இல் சேலம் வந்தார். மதகொண்டப்பள்ளியில் பணியாற்றியபோது 24-12-1960 அன்று இறைவனடி சேர்ந்தார். இவரது கல்லறை இன்றைய ஆலய முற்றத்தில் உள்ளது.

இன்றைய ஆலயம் அருட்பணி. சீனியர் ஐசக் அடிகளாரால் கட்டப்பட்டு, 1976 இல் புனிதப்படுத்தப்பட்டது. 

மதகொண்டப்பள்ளியின் கிளைபங்கான கோபசந்திரம் என்ற ஊரிலும் நீண்டகாலமாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 1937ஆம் ஆண்டு 0.65 சென்ட் நிலம் வாங்கப்பட்டு சிற்றாலயம் கட்டப்பட்டது. பின்னர் இன்றைய புதிய ஆலயம் தந்தை ஆரோக்கியசாமி அவர்களால் துவங்கப்பட்டு, தந்தை. யேசுதாஸ் அவர்களால் கட்டி முடிக்கப்பட்டு 2014 ஜனவரி 13 அன்று புனிதப்படுத்தப்பட்டது.

மரியாயின் ஊழியர்கள் சபை கன்னியர்கள் (FSM) மதகொண்டப்பள்ளியில் 1935ஆம் ஆண்டு தங்கள் பணியைத் தொடங்கினார். 1955 ஆம் ஆண்டு துவக்கப்பள்ளியை தொடங்கி, இன்று மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தங்கள் கல்விப்பணியை சிறப்புடன் செய்து வருகின்றனர். மாதா மேல்நிலைப்பள்ளி இப்பகுதியின் சிறந்த பள்ளியாகும். மருத்துவ பணியிலும் சிறந்து விளங்கிய சகோதரிகள் 1970ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றையும் புதிதாகக் கட்டி திறந்தனர்.

பங்கின் கெபி:

தூய லூர்து மாதா கெபி

பங்கில் உள்ள நிறுவனங்கள்:

1. Our Ladys of Primary School

2. Our Ladys Higher Secondary School

3. லூர்து மருத்துவமனை

பங்கில் பணியாற்றும் அருட்சகோதரிகள்:

Franciscan Sisters of Mary (FSM)

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. பீடப்பூக்கள்

3. பாடற்குழு

4. புனித வின்சென்ட் தே பவுல் சபை

மதகொண்டபள்ளி பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

சேலம் மறைமாவட்டம் உதயமான பின்னர்

1. அருட்பணி.‌ புளியார்டு (1930-1932)

2. அருட்பணி.‌ மத்தேயு (1932மார்ச் -டிசம்பர்)

3. அருட்பணி. ஜெஸ்ஸோ (1932-1940)

4. அருட்பணி. பால் தாழதட் (1939)

5. அருட்பணி.‌ ராபர்டெல் (1941-1943)

6. அருட்பணி. ரோக்கி நரகாட் (1943-1945)

7. அருட்பணி.‌ நலே (1946-1948)

8. அருட்பணி. கிங்கெனல் (1948)

9. அருட்பணி.‌ நலே (1949-1954)

10. அருட்பணி. நரகாட் (1954-1955)

11. அருட்பணி. கிரேவியர் (1955-1957)

12. அருட்பணி.‌ தலச்சீரா (1957-1960)

13. அருட்பணி.‌ டி. சி. தாமஸ் (1961 ஜனவரி -மே)

14. அருட்பணி. வர்கீஸ் (1961-1963)

15. அருட்பணி.‌ குரிசுங்கல் (1963-1969)

16. அருட்பணி.‌ அந்தோனி கலத்தில் (1959-1974)

17. அருட்பணி.‌ ஜோசப் ஐயங்கோலில் (1974-1975)

18. அருட்பணி. சீனியர் ஈசாக் (1975-1985)

19. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (1985-1987)

20. அருட்பணி. S. சவரிமுத்து (1987-1988)

21. அருட்பணி.‌ ஹென்றி ஜார்ஜ் (1988-1989)

22. அருட்பணி.‌ மைக்கேல் (1989-1992)

23. அருட்பணி. N. S. இருதயநாதன் (1992-1995)

24. அருட்பணி. S. யேசுதாஸ் (1995-2000) (1997 ஆம் ஆண்டு தருமபுரி மறைமாவட்டம் உதயமானது)

25. அருட்பணி. S. கிறிஸ்டோபர் (2000-2004)

26. அருட்பணி. J. ஆரோக்கியசாமி (2004-2009)

27. அருட்பணி. S. யேசுதாஸ் (2009-2014)

28. அருட்பணி. G. பாக்கியநாதன் (2014-2015)

29. அருட்பணி. A. இருதயராஜ் (2015-2016)

30. அருட்பணி. லூக்காஸ் (2016-2019)

31. அருட்பணி. A. வில்லியம் ஜான்சன் ராஜா (2019-2021)

32. அருட்பணி. ஆரோக்கிய ஜேம்ஸ் (2021-2022)

33. அருட்பணி. விஜய் அமிர்தராஜ் (2022---)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. விஜய் அமிர்தராஜ் அவர்கள்.

ஆலய புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி