புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம்
இடம் : சேர்ந்தமரம்
மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : பாளையங்கோட்டை
நிலை : பங்குதளம்
கிளைக்கிராமங்கள்:
1) திருமலாபுரம்
2) தன்னூத்து
3) கோவிலாண்டனூர்
4) கள்ளம்புளி
5) இஞ்ஞாசிநாடாரூர்
6) வெள்ளான்குளம்
7) தருமத்தூரணி
8) வேப்பன்குளம்
9) புதுக்கிராமம்
10) ரெங்கநாதபுரம்
பங்குத்தந்தை : அருட்தந்தை S. A அந்தோணிசாமி
குடும்பங்கள் : 4508 (கிளைகிராமங்களையும் சேர்த்து)
அன்பியங்கள் : 9
ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு
திங்கள் புதன் , வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 05.30 மணிக்கு திருப்பலி
அற்புத குழந்தை இயேசு நவநாள் ஒவ்வொரு வியாழன் மாலை 06.00 மணிக்கு செபமாலையோடு திருப்பலியும் நடைபெறுகின்றது
திருவிழா : ஜூன் மாதம் 20 ம் தேதி முதல் 29 ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
சேர்ந்தமரம் ஆலய வரலாறு :
மிகப் பழமையான பாரம்பரியமும், வரலாற்றையும் கொண்ட புனிதமிக்க ஆலயம் புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம்.
இவ்வாலயத்தை சர்வேசுரன் ஆலயம் என்ற சிறப்பு பெயரால் அழைக்கின்றனர்.
சேர்ந்தமரம் மட்டுமல்லாது சுற்றிலும் உள்ள கிராமங்களில் வாழும் மக்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும் ஆலயம்.
கி.பி 1638 ம் ஆண்டு முதல் கூரைக் கோயிலில் புனித இராயப்பர் சின்னப்பர் சுரூபங்களை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். பின்னர் 1798 ல் புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
1853 ம் ஆண்டில் பெரிய தேர் செய்யப்பட்டு, கல்லால் ஆன கொடி மரமும் வைக்கப்பட்டது
1878 ம் ஆண்டு முதல் சேர்ந்தமரத்தில் கத்தோலிக்க குருக்கள் வந்து பணிபுரிந்தனர்.
1884 ம் ஆண்டு முதல் 1887 -ம் ஆண்டு வரை ஆலயம் விரிவு படுத்தப்பட்டது.
1894 ம் ஆண்டில் ஆலய முன்மண்டபம் புதிதாக எழுப்பப்பட்டது.
1905 ல் அழகிய பலிபீடம் புதுப்பிக்கப் பட்டது. இது கோவா மற்றும் மங்களூர் போன்ற இடங்களில் உள்ள பலிபீடம் போன்று கம்பீரமாக அழகுற காட்சி தருகின்றது.
அன்னை காட்சி கொடுத்த நூற்றாண்டை நினைவுகூறும் வகையில் 1954 -ம் ஆண்டு அழகிய மாதா கெபி கட்டப்பட்டது.
அன்னையின் கெபி ஆலயத்தை நோக்கி அமைந்திருப்பது அன்னை தன்பிள்ளைகளுக்காக பரிந்து பேசுகிறார் எப்பொழுதும் இறைவனிடம் நமக்காக பரிந்துரை செய்பவர் அன்னை மட்டும் தான்.. என்பதை உணர்த்துகிறது..!
இந்த கெபியில் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளிலும், ஆண்டு தோறும் மே மாதத்தின் சனிக்கிழமைகளிலும், மே 31 -ம் தேதி அன்னையின் புகழ் பரப்பும் திருப்பலிகள் நடைபெறுவது சிறப்புக்குரியது.
அருட்தந்தை இஞ்ஞாசியார் சுவாமிகள் 1878 முதல் 1917 வரை சேர்ந்தமரத்தின் முதல் பங்குத்தந்தையாக இருந்து 39 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றினார்கள். இவரது பணிக்காலத்தில் பல்வேறு வகையான வளர்ச்சி மற்றும் ஆன்மீக மறுமலர்ச்சிகள் ஏற்பட்டன.
அருட்தந்தையவர்கள் தமது 76 ம் வயதில் இறந்த போது, அவரது உடல் இந்த ஆலயத்தில் அடக்கம் செய்யப் பட்டது.
புகழ் பெற்ற புனித லூர்து மாதா திருத்தலம் திருமலாபுரம் மற்றும் தன்னூத்து மின்னல் மாதா திருத்தலம் ஆகிய இரண்டு திருத்தலங்கள் இப்பங்கின் கிளைகளாக இருப்பது தனிச்சிறப்பு.
பக்த சபைகள்:
1) வீரவாள் சின்னப்பர் அணி
2) வின்சென்ட் தே பவுல் சபை
3)அமலோற்பவ மாதா சபை
4) திருக்குடும்ப மாதா சபை
5) தூய மிக்கேல் அதிதூதர் அணி
6) மறைக்கல்வி மன்றம்
ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு சுமார் 400 ஆண்டுகள் புனிதமும், சிறப்புமிக்க இவ்வாலயம் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போது அருட்தந்தை S. A அந்தோணிசாமி அவர்கள் இப்பங்கை சிறப்பாக வழி நடத்தி வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி அழைத்து செல்கிறார்.
வழித்தடம் :
நாகர்கோவிலில் இருந்து வரும் போது:
நாகர்கோவில் - திருநெல்வேலி - ஆலங்குளம் - வீரகேரளம்புதூர்- சுரண்டை - சேர்ந்தமரம்.
சென்னையிலிருந்து வரும் போது:
சென்னை- திருச்சி - மதுரை -இராஜபாளையம்- சங்கரன்கோவில்-நடுவக்குறிச்சி- வீரசிகாமணி- சேர்ந்தமரம்.
கேரளாவிலிருந்து வரும் போது :
(திருவனந்தபுரம் - புனலூர் - புளியரை - தென்காசி- இடைகால்-பொய்கை - சேர்ந்தமரம்)
தூத்துக்குடியிலிருந்து வரும் போது :
தூத்துக்குடி - திருநெல்வேலி- ஆலங்குளம்- வீரகேரளம்புதூர்- சுரண்டை- சேர்ந்தமரம்.