448 புனித இஞ்ஞாசியார் ஆலயம், இ. காட்டூர்


புனித இஞ்ஞாசியார் ஆலயம்

இடம் : இ. காட்டூர், இலந்தகுட்டை அஞ்சல்.

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு
பங்கு : பாதுகாக்கும் பள்ளிபாளையம் புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்.

பங்குதந்தை : அருட்பணி. ஆனந்த ராஜ்

குடும்பங்கள் : 40
அன்பியங்கள் : 2

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு
வியாழன் மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : மே மாதம் முதல் ஞாயிறு

வழித்தடம் : சேலம் -சங்ககிரி -வெப்படை -இ. காட்டூர்.

Location map :
St. Ignatius church, New colony, Pallipalayam Agraharam, Tamil Nadu 638008
https://maps.app.goo.gl/DBuuJLUWiRKQmoKe8

வரலாறு :

இ.காட்டூர் கிராமத்து அழகை தன்னகத்தே கொண்ட அழகிய கிராமம். காட்டூர் என்கிற பெயரில் இரண்டு கிராமங்கள் இப் பகுதியில் காணப்பட்டதால், இலந்தகுட்டை பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த ஊருக்கு இ.காட்டூர் எனப் பெயர் ஆனது.

1992 ம் ஆண்டு காலகட்டத்தில், SPB காலனியின் கிளைகிராமமாக இ. காட்டூர் செயல்பட்டு வந்தது. பங்கு ஆலயத்தில் இருந்து இ. காட்டூர் மிகத் தொலைவில் இருந்ததால், SPB காலனியின் பங்குதந்தை அருட்பணி. தேவசகாயம் அடிகளார், இ. காட்டூர் இறைமக்களின் வேண்டுதலுக்கிணங்க திரு. ஜெயமாணிக்கம் (கோவில்பிள்ளை) அவர்கள் இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்.

தொடர்ந்து இறைப் பணியாற்றிய அருட்பணி. எட்வர்ட் ராஜன் அவர்களால் ஆலயம் கட்டுவதற்காக நிலம் வாங்கப்பட்டு, திருப்பலி நிறைவேற்றுவதற்கு நிழற்கூடம் கட்டப்பட்டது.

அவருக்கு பிறகு இறைப் பணியாற்றிய அருட்பணி. லூர்துசாமி அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வந்தது. மக்களின் நன்கொடைகளாலும், அருட்பணி. மரிய ரொடீசினி அவர்களின் உதவியாலும், அருட்பணி. லூர்துசாமி அவர்களின் விடாமுயற்சியாலும் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 20.08.2002 அன்று அன்றைய சேலம் மறை மாவட்ட ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இந்த காலக்கட்டத்தில் அருட்சகோதரர். லூயிஸ் ஆரோக்கியராஜ் (தற்போது அருட்பணியாளர்) அவர்கள், இ. காட்டூரில் அறை வீட்டில் தங்கியிருந்து மறைக்கல்வி போதித்து, இளைஞர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தி, அனைத்து இல்லங்களையும் சந்தித்து சிறப்பாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.

இதன்பிறகு, 2004 ஆம் ஆண்டு பள்ளிபாளையம், SPB. காலனியிலிருந்து பிரிக்கப்பட்டு, பள்ளிபாளையம் தனிப்பங்காக உயர்ந்தபோது இ. காட்டூர் அதன் கிளைப்பங்காக செயல்பட்டு வருகிறது.

பள்ளிபாளையத்தின் முதல் பங்குதந்தையாக அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் இருந்தபோது, இ. காட்டூரில் லூர்து மாதா கெபியும், ஆலயத்தை சுற்றி சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது.

பள்ளிபாளையத்தின் இரண்டாவது பங்குதந்தையாக அருட்பணி. சகாயராஜ் அவர்களின் பணிக்காலத்தில் தேர் வைப்பதற்கு நிழற்கூடமும், ஆலயத்தை புதுப்பித்தல் முயற்சியையும் மேற்கொண்டார்.

தற்போது, பள்ளிபாளையத்தின் மூன்றாவது பங்குதந்தையாக பணியாற்றி வருகிற அருட்பணி. ஆனந்தராஜ் அவர்கள் இ. காட்டூர் இறை சமூகத்தை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குதந்தையின் வழிகாட்டுதலில் கோவில்பிள்ளை திரு. ஜெயமாணிக்கம்.