தூய தமத்திரித்துவ ஆலயம்
இடம் : மேல்மிடாலம், உதயமார்த்தாண்டம் அஞ்சல், 629178
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டார்
மறைவட்டம் : ஆலஞ்சி
நிலை : பங்குத்தளம்
பங்குத்தந்தை : அருட்பணி. ஹென்றி பிலிப் குவின்
தொலைபேசி: 04651 254028
குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 17
மண்டலங்கள் : 4
மத்தேயு மண்டலம் (அன்பியம் 1 -4)
மாற்கு மண்டலம் (அன் 5 -8B)
லூக்கா மண்டலம் (அன் 9-12)
யோவான் மண்டலம் (அன் 13-16)
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி காலை 07.00 மணிக்கு
திங்கள், செவ்வாய், வியாழன், சனி காலை 06.30 மணிக்கு திருப்பலி.
புதன் மாலை 06.00 மணிக்கு சகாய மாதா நவநாள், திருப்பலி.
வெள்ளி மாலை 06.00 மணிக்கு குழந்தை இயேசு நவநாள், திருப்பலி
எல்லா சனிக்கிழமையும் திருப்பலி முடிந்தவுடன் நோயாளிகளுக்கு நற்கருணை வழங்கப்படும்.
மாதத்தின் முதல் புதன் மாலை 05.30 மணிக்கு : ஜெபமாலை பவனி, குணமளிக்கும் திருப்பலி (தூய சகாய மாதா குருசடி)
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு திருப்பலி, இறைஇரக்க ஜெபமாலை, நற்கருணை ஆசீர்.
மாதத்தின் இரண்டாவது செவ்வாய் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள், திருப்பலி (புனித அந்தோனியார் குருசடி)
மாதத்தின் மூன்றாவது வியாழன் மாலை 06.00 மணிக்கு நற்செய்தி கொண்டாட்டம்.
ஜெபமாலை
1. தினமும் காலை 05.00, மதியம் 12.00, இரவு 07.30 மணி (சகாயமாதா குருசடி)
2. தினமும் பிற்பகல் 03.30 மணி (அந்தோணியார் குருசடி)
3. தினமும் மாலை 06.30 மணி (பங்கு ஆலயம்)
திருவிழா : மூவொரு இறைவன் ஞாயிறு திருவிழா மூன்று நாட்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை 10 நாட்கள் நடைபெறும்.
அந்தோனியார் குருசடியில் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் இரண்டு நாட்கள்.
சகாயமாதா குருசடியில் செப்டம்பர் மூன்றாவது வாரத்தில் இரண்டு நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்பணியாளர்கள்
1. அருட்பணி. கிரகோரி, பெங்களூரு
2. அருட்பணி. ஆன்றனி கிளாரட், கோட்டார்
3. அருட்பணி. மகேஷ், இரட்சகர் சபை
4. அருட்பணி. சலீன், ரேய்பூர்
5. அருட்பணி. கிளிட்டஸ், இறைவனின் திருவுள சபை
6. அருட்பணி. ஜெய பாஸ்கர் மென்றோ, கோட்டார்
7. அருட்பணி. கிறிஸ்டோ டாபின், கோட்டார்
8. அருட்பணி. சகாய ஜாண் பிரிட்டோ, அமல மரி தூதுவர்கள் சபை
9. அருட்பணி. அம்புரோஸ், கோட்டார்
10. அருட்பணி. ஜெல்பரின், கோட்டார்
11. அருட்பணி. சைமன், கோட்டார்
12. அருட்பணி. ரஞ்சித் குமார், கோட்டார்
13. அருட்பணி. ஜாண் பிரிட்டோ, கோட்டார்
14. அருட்பணி. ஜோஸ் ஜே. பெஸ்க், கோட்டார்.
15. அருட்பணி. ஜெய சீலன், அன்பின் பணியாளர் சபை
16. அருட்பணி. ஆன்றனி விஜீ, அமலமரி தூதுவர்கள் சபை
17. அருட்பணி. சகாய ரோஸ்லின், அமலமரி தூதுவர்கள் சபை.
அருட்சகோதரர்கள்:
1. ஆருட்சகோ. ஸ்டெபின் ரஸ்லின் ராஜ், கோட்டார்
2. அருட்சகோ. லதின், OMD
3. அருட்சகோ. கில்கிறிஸ்ட், OFM
அருட்சகோதரிகள்:
1. Sr. மேரி கிரேசியாள், மரியாவின் மாசற்ற வேதபோதக சபை
2. Sr. மிக்கேலம்மாள், மரியாவின் மாசற்ற வேதபோதக சபை
3. Sr. ஹேமலதா, மகா புனித மீட்பர் சபை
4. Sr. பிரிஜிட் லிசிமோள், மீட்பரின் சகோதரிகள் சபை
5. Sr. மேரி ஐலிசாள்
6. Sr. ரொமிளா லூட்ஸ் ஏஞ்சல், மனுவுருவான இயேசுவின் மறைபோதக கன்னியர் சபை
7. Sr. நிர்மலா ஜோதி, மனுவுருவான இயேசுவின் மறைபோதக கன்னியர் சபை
8. Sr. நதியா, மனுவுருவான இயேசுவின் மறைபோதக கன்னியர் சபை
9. Sr. மேரி ஸ்வீட்டி, இறை பராமரிப்பு மரியன்னை கன்னியர் சபை
10. Sr. மேரி கேரோஸ், மனுவுருவான இயேசுவின் மறைபோதக கன்னியர் சபை
11. Sr. ஹெலன் சீற்றா, இயேசுவின் திருஇருதய சபை.
வழித்தடம் :
நாகர்கோவில் -திங்கள்நகர் -மேல்மிடாலம்.
மார்த்தாண்டம் -நட்டாலம் -கருங்கல் -மேல்மிடாலம்.
பேருந்துகள் :
நாகர்கோவில்> 5D, 5E, 7F, 9A, 9F.
முள்ளூர்துறை>5B, 5M.
மார்த்தாண்டம்>87B, 88H, 88J.
குலசேகரம்>89F
தக்கலை>46D
ஆரோக்கியபுரம்>302A
நீரோடிகாலனி>302
தூத்துகுடி>572
பேருந்துகள்
குளச்சல்>9G
Location map : Holy Trinity church MELMIDALAM Melmidalam, Tamil Nadu 629178
https://maps.app.goo.gl/nghvbtVZ2ocpse8G9
வரலாறு :
புனித பிரான்சிஸ் சவேரியார் குமரி மாவட்டத்தில் நற்செய்தி அறிவித்த இடங்களில் ஒன்று தான் மேல்மிடாலம்.
கி.பி 1616 ல் கொச்சி மறைமாவட்டத்தின் கீழ் இருந்த மேல்மிடாலம், 1930 இல் கோட்டார் மறைமாவட்டம் உருவான போது இனையம் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.
1932 இல் மிடாலம் தனிப்பங்கான போது அதன் கிளைப் பங்காக மேல்மிடாலம் மாற்றப்பட்டது.
1988 ஆம் ஆண்டில் மூவொரு இறைவன் ஆலயமும், பங்குத்தந்தை இல்லமும் அருட்பணி. யூஜின் பச்சேரி அவர்களால் கட்டப்பட்டது. 1990 இல் அருட்பணி. ஜாண் அம்புறோஸ் அவர்கள் மேல்மிடாலம் பங்குத்தந்தை இல்லத்தில் இருந்து கொண்டு பணிகளை நிர்வகித்து வந்தார்.
24.05.1992 இல் மிடாலத்திலிருந்து, மேல்மிடாலம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. A. M. செபாஸ்டின் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.
அருட்பணி. ஜான் டாசின் பணிக்காலத்தில் புனித அந்தோனியார் குருசடி கட்டப்பட்டது. பங்கேற்பு அமைப்புகள், இயக்கங்கள் வலுப்படுத்தப் பட்டன. புதிய ஆலயத் தேவை உணரப்பட்டு, மறைமாவட்ட உதவிகள் பெறப்பட்டன.
அருட்பணி. ஜினோ மேத்யூ பணிக்காலத்தில் ஆலய வேலைக்கென கட்டுமானக் குழு உருவாக்கப் பட்டது. இந்திய மணல் ஆலையோடு சேர்ந்து மணல் வேலை ஊரில் அறிமுகப் படுத்தப் பட்டது.
அருட்பணி. ஆன்றோ விஜயன் பணிக்காலத்தில் புதிய ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டு, அருட்பணி. சேவியர் ராஜா பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று 24.06.2011 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
அருட்பணி. ஜேசுதாசன் பணிக்காலத்தில் தூய சகாய மாதா குருசடிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் புதிய ஆலய வளாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
அருட்பணி. செல்வன் பணிக்காலத்தில் தூய சகாய மாதா குருசடி கட்டப்பட்டது. பங்கின் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.
தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. ஹென்றி பிலிப் அவர்கள் 2018 இல் பொறுப்பேற்று, புதிய கல்லறைத் தோட்டமான புதிய தமத்திரித்துவ கல்லறைத் தோட்டத்தை அமைத்தார். தொடர்ந்து பங்கு மக்களை ஒருங்கிணைத்து ஆன்மீகப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.
புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள் :
புனித அன்னாள் சபை அருட்சகோதரிகள், ஆன்மீகக் காரியங்களில் உறுதுணையாக செயல்பட்டு வருவதுடன் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு மேல்மிடாலம் பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
பங்கில் பணியாற்றும் அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. மரிய கொரட்டி
2. அருட்சகோதரி. இஞ்ஞாசியம்மாள்
3. அருட்சகோதரி. சூசன் பீட்டர்
4. அருட்சகோதரி. ஹெலன் மேரி.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்கு அருட்பணிப் பேரவை
2. அன்பிய ஒருங்கிணையம்
3. தூய தமத்திரித்துவ திருத்தூது கழக ஒருங்கிணையம்
4. மரியாயின் சேனை
5. பிரான்சிஸ்கன் 3-ம் சபை
6. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
7. இயேசுவின் திருஇருதய சபை
8. புனித வின்சென்ட் தே பவுல் சபை
9. கத்தோலிக்க சேவா சங்கம்
10. கோல்பிங் இயக்கம்
11. திருவழிபாட்டு குழு
12. பீடப்பூக்கள்
13. பாடகற்குழு
14. மறைக்கல்வி மன்றம்
15. கல்விக்குழு
16. சிறார் பணிக்குழு
17. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
18. இளையோர் இயக்கம்
19. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் (ஆண்கள் & பெண்கள்)
20. தோழமை பெண்கள் இயக்கம்
21. சாந்திதான் இயக்கம்
22. நற்செய்தி பணிக்குழு
23. குடும்ப நலப் பணிக்குழு.
பங்கின் சேவை கட்டிடங்கள்:
1. பங்குத்தந்தை இல்லம்
2. தூய அன்னாள் கன்னியர் இல்லம்
3. தூய அன்னாள் மருத்துவ இல்லம்
4. தூய தமத்திரித்துவ திருமண மண்டபம்
5. தூய தமத்திருத்துவ கலையரங்கம்
6. மீனவர் மேம்பாட்டு கட்டிடம்
7. கூட்டுறவு சங்க கட்டிடம்
8. அரசு துவக்கப் பள்ளி
9. நேதாஜி படிப்பகம்
10. தூய தமத்திரித்துவ சமத்துவ கல்லறை தோட்டம்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. Rev. Fr. A. M. செபாஸ்டின் (1992-1994)
2. Rev. Fr. மரிய ஆரோக்கியம் (1994-1997)
3. Rev. Fr. A. செல்வராஜ் (1997)
4. Rev. Fr. ஆன்றனி அல்காந்தர் (1997-1999)
5. Rev. Fr. ஜான் டமாசின் (1999-2001)
6. Rev. Fr. ஜினோ மேத்யூ (2001-2003)
7. Rev. Fr. ஆன்றோ விஜயன் (2003-2008)
8. Rev. Fr. சேவியர் ராஜா (2008-2012)
9. Rev. Fr. ஜேசுதாசன் (2012-2016)
10. Rev. Fr. செல்வன் (2016-2018)
11. Rev. Fr. ஹென்றி பிலிப் குவின் (2018 முதல் தற்போது வரை..)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஹென்றி பிலிப் குவின் அவர்கள்.