676 இடைவிடா சகாய மாதா ஆலயம், குன்னூர், மவுண்ட் பிளசன்ட்

   

இடைவிடா சகாய மாதா ஆலயம்

இடம்: குன்னூர், மவுண்ட் பிளசண்ட்

மாவட்டம்: நீலகிரி

மறைமாவட்டம்: ஊட்டி

மறைவட்டம்: குன்னூர்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை: அருள்திரு. C. ரொசாரியோ

குடும்பங்கள்: 270

அன்பியங்கள்: 12

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07.00 மணி (ஆங்கிலம்), காலை 09.00 மணி (தமிழ்)

வாரநாட்களில் திருப்பலி: காலை 07.00 மணி

சனி மாலை 05.30 மணி சகாய மாதா நவநாள், திருப்பலி

மாதத்தின் முதல் சனி: மாலை 05.30 மணி திருப்பலி, நவநாள், நற்கருணை ஆசீர்

மாதத்தின் முதல் வெள்ளி: மாலை 05.30 மணி திருப்பலி நவநாள்

திருவிழா: மே மாதம் நான்காவது வாரம்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்திரு. ஜோசப் அந்தோணிசாமி

2. அருள்திரு. பெனடிக்ட் சுவாமிநாதன், SJ

3. அருள்திரு. ஆடம் பெர்னாண்டஸ்

4. அருள்திரு. A. ரெனால்ட் பிரபு

5. அருள்சகோதரி. ஆன்டனி பெல்லா

6. அருள்சகோதரி. ரெஜினா இராஜரத்தினம்

7. அருள்சகோதரி. ஜெசிந்தா வின்சென்ட்

8. அருள்சகோதரி. கலாமேரி இம்மாகுலேட்

வழித்தடம்: குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து, 2கி.மீ தொலைவில் மவுண்ட் பிளசண்ட் அமைந்துள்ளது.

Location map: Sagaya Matha Church

Balaclava, Coonoor, Tamil Nadu 643102

https://maps.app.goo.gl/cM7G11wy9JVqmy2B6

வரலாறு:

கி.பி 1955 ஆம் ஆண்டு மேதகு ஆன்றனி படியரா அவர்கள் உதகை மறைமாவட்ட ஆயராக பணிப்பொறுப்பேற்ற போது கட்டப்பட்ட முதல் ஆலயமாகிய குன்னூர் மவுண்ட் பிளசண்ட் -ல் அமைந்துள்ள இடைவிடா சகாய மாதா ஆலய வரலாற்றைக் காண்போம்..

கி.பி 1958 ஆம் ஆண்டு தாளாளராக பொறுப்பில் இருந்த அருள்திரு.‌ ஜேம்ஸ் மேல்வட்டம் அவர்களால், திருமதி. புக்கவல்லி தேவகி அம்மாள் என்பவரின் தேவகி காட்டேஜ் என்றழைக்கப்படும், தற்போதைய பங்குத்தந்தை குடியிருப்பு உள்பட 69.05 சென்ட் நிலத்தை ரூ. 14,500 விலைக்கு வாங்கி, அதனை குன்னூர் புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருள்திரு. ஹம்பர்ட் டிசோசா அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. 

1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருள்திரு.‌ C. குன்னத் அடிகளார் மவுண்ட்பிளசண்ட் பகுதியில் ஒரு ஆலயம் கட்ட முயற்சிகள் மேற்கொண்டு வந்தார். 1959 -ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு கார் ஷெட் (தற்போது பங்குத்தந்தை வசிக்குமிடம்) அமைக்கப்பட்டு, மேதகு ஆயர் அந்தோணி படியாரா அவர்களால் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. அப்போது தாளாளராக பொறுப்பேற்ற அருள்திரு.‌ பால் வல்லூரான் அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு திருப்பலி நிறைவேற்றி வந்தார். இவ்வாலயத்திற்கு இடைவிடா சகாய மாதா எனப் பெயரிட அருள்திரு. பால் கல்லூரான் அடிகள் அனுமதிகோர, ஆயர் அதற்கு அனுமதியளித்தார்.

அவ்வேளையில் பங்குத்தந்தை அருள்திரு. C. குன்னத் அடிகள், ஓய்வில் இருந்த அருள்திரு.‌ தாமஸ் தெள்ளி அவர்களை அழைத்து வந்து, பிளசண்ட் மவுண்ட் -ல் நாள்தோறும் திருப்பலி நிறைவேற்ற பொறுப்பளித்தார். 

பங்குத்தந்தை அருள்திரு.C. குன்னத் அடிகளாரின் பணிக்காலத்தில் 25.10.1959 அன்று மேதகு ஆயர் அந்தோணி படியாரா அவர்களால் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று 16.10.1960 அன்று அர்ச்சிக்கப்பட்டது. கரோலினா எஸ்டேட் உரிமையாளர் திரு. T. V. கொச்சு வரீது, அருள்திரு. லியோன் பீச்சு, மறைமாவட்டம் மற்றும் பங்கு மக்களின் நிதியுதவியுடன் ஆலயம் கட்டப்பட்டது. 1960 ஆம் ஆண்டு முதல் பங்குத்தந்தையாக அருள்திரு. தாமஸ் தெள்ளி அடிகளார் பணிப் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் ஆலயமணி வாங்கப்பட்டது. மணிக்கூண்டு அடித்தளமிடப்பட்டது. 

அருள்திரு. பால் வல்லூரான் பணிக்காலத்தில் 1964 டிசம்பர் மாதத்தில் மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1964 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 65 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, முள்வேலி அமைக்கப்பட்டது. பங்கு மண்டபம் கட்டப்பட்டு 04.07.1965 அன்று பங்குத்தந்தையால் திறந்து வைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டு ஆலயத்தைச் சுற்றி கற்சுவர் எழுப்பப்பட்டது. மறைமாவட்டத்திலேயே முதன்முதலாக மேய்ப்புப்பணி அறிவுரைக்குழு (Parstoral council) அமைக்கப்பட்டது. 1969 ஆம் ஆண்டு பாலக்கிளாவில் முதியோர் இல்லம் துவக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு ஆலய வளாகம் முழுவதும் தார்ச்சாலை போடப்பட்டது. 

அருள்திரு. குரியன் நடுத்தடம் அவர்கள் கத்தோலிக்க மறைப்பரப்பு மன்ற கட்டிடம் கட்ட நிதி பெற்றுத்தந்தார். 

1977 ஆம் ஆண்டு சிறிய ஆன்மாக்கள் சேனை மறைமாவட்டத்திலேயே முதன்முதலாக இப்பங்கில் ஆரம்பிக்கப்பட்டது.

அருள்திரு. சிரில் லாசரஸ் பணிக்காலத்தில் 1986 ஆம் ஆண்டு ஆலய வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அருள்திரு. அந்தோணி இருதயராஜ் பணிக்காலத்தில் அன்பியங்கள் துவக்கப் பட்டது. மக்கள் வங்கியும் துவக்கப்பட்டது.

அருள்திரு. F. பெனடிக்ட் பணிக்காலத்தில் மாதா கெபி கட்டப்பட்டது.

அருள்பணி. பி. தனிஸ்லாஸ் பணிக்காலத்தில் ஆலயப் பொன்விழாவை முன்னிட்டு ஆலயபீடம் புதுப்பிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஆலயத்தில் அனைவரும் அமர்ந்து திருப்பலியில் பங்கேற்க சாய்வு பெஞ்சுகள் அமைக்கப்பட்டது. பங்கு மண்டபம் புதுப்பிக்கப்பட்டது.

அருள்திரு. ம. லியோன் பிரபாகரன் பணிக்காலத்தில் 16.10.2010 அன்று ஆலய பொன்விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொன்விழா நினைவாக புனித வின்சென்ட் தே பவுல் சபையினர் 50 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினர்.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவ்வாலயமானது 60 வது ஆண்டை நிறைவு செய்கிறது.

பங்கில் உள்ள இல்லங்கள்/ நிறுவனங்கள்:

1. மறைமாவட்ட குருக்களின் ஓய்வு இல்லம்: தாபோர் இல்லம்

2. சகாய மாதா மருத்துவமனை

(Sisters of the Destitute)

3. முதியோர் இல்லம்

(Little Sisters of the Poor)

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்குப்பேரவை

2. நிதிக்குழு

3. புனித வின்சென்ட் தே பவுல் சபை

4. சகாய மாதா இளையோர் குழு

5. வழிபாட்டுக்குழு

6. மரியாயின் சேனை 

7. பெண்கள் பணிக்குழு

8. பாடகற்குழு (தமிழ்)

9. பாடகற்குழு (ஆங்கிலம்)

10. பீடச்சிறார்

11. மறைக்கல்வி

12. Burial board

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்திரு. தாமஸ் தெள்ளி (1960-1964)

2. அருள்திரு. பால் வல்லூரான் (1964-1974)

3. அருள்திரு. குரியன் நடுத்தடம் (1974-1977)

4. அருள்திரு. தாமஸ் தெள்ளி (1977-1984)

5. அருள்திரு. சிரில் லாசரஸ் (1984-1987)

6. அருள்திரு.‌ பால் வல்லூரான் (1987-1994)

7. அருள்திரு. A. ஜான் (1994-1995)

8. அருள்திரு. C. A. ஆன்டனி (1995-1996)

9. அருள்திரு.‌ அந்தோணி இருதயராஜ் (1996-1999)

10. அருள்திரு. மரியலூயிஸ் (1999-2002)

11. அருள்திரு. F. பெனடிக்ட் (2002-2004)

12. அருள்திரு. பி. தனிஸ்லாஸ் (2004-2009)

13. அருள்திரு. ம. லியோன் பிரபாகரன் (2009-2014)

14. அருள்திரு. ஹென்றி மரியலூயிஸ் (2014-2019)

15. அருள்திரு. சி. ரொசாரியோ (2019 -ஜூன் முதல்..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்திரு. சி. ரொசாரியோ அவர்கள்