468 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மணியங்காளிப்பட்டி


புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம் : மணியங்காளிப்பட்டி, மோகனூர் அஞ்சல், 637015

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்

பங்குத்தந்தை : அருட்பணி. பிரகாஷா

குடும்பங்கள் : 20
அன்பியம் : 1

15 நாட்களுக்கு ஒரு முறை, ஞாயிறு : மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29 -ம் தேதி.

வழித்தடம் : நாமக்கல்- (மோகனூர் செல்லும் வழி)- மணியங்காளிப்பட்டி.

வரலாறு :

சேலம் மறைமாவட்டத்தில், RC பேட்டப்பாளையம் பங்கில், மணியங்காளிப்பட்டியில் அமைந்துள்ளது புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்.

2006ம் ஆண்டில் இவ்வூர் கிறிஸ்துவ மக்களின் வேண்டுதலுக்கிணங்க, அன்றைய RC பேட்டப்பாளையத்தின் பங்குத்தந்தை அருட்பணி. த. ஜான் கென்னடி அவர்கள், மக்களுக்கு வீடு கட்டி கொடுத்து, ஆலயத்திற்கு நிலத்தை வாங்கினார்.

தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி அவர்களின் பணிக்காலத்தில் (2007-2008), ஆலயத்திற்கென வாங்கிய நிலத்தில் புனித ஆரோக்கிய அன்னைக்கு அழகான ஆலயம் ஒன்று கட்டப்பட்டு 29.08.2007 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப் பட்டது.

இவ்வாலயத்தின் மக்கள் பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆன்மீகப் பாதையில் சிறப்புற செயல்பட்டு வருகின்றனர்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரகாஷா மற்றும் ஆலய இளையோர்.