756 மூவரசர்கள் ஆலயம், முத்துச்செல்லபுரம்

     

மூவரசர்கள் ஆலயம்

இடம்: P. முத்துச்செல்லபுரம்

மாவட்டம்: இராமநாதபுரம்

மறைமாவட்டம்: சிவகங்கை

மறைவட்டம்: பரமக்குடி

நிலை: கிளைப்பங்கு

பங்கு: இயேசுவின் திரு இருதய ஆலயம், திருவரங்கம்

பங்குத்தந்தை: அருட்பணி. S. செபாஸ்டின்

குடும்பங்கள்: 150

அன்பியங்கள்:6

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி அல்லது காலை 08:00 மணி

திருவிழா: ஜனவரி மாதத்தில் முதல் சனி, ஞாயிறு

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. பல்தசார், (late) மதுரை உயர் மறைமாவட்டம்

2. அருட்பணி. மிக்கேல், மிசோரம் மறைமாவட்டம்

3. அருட்பணி. இராபர்ட் ஆரோக்கியசாமி, SJ

4. அருட்பணி. ஜெயசீலன், மிசோரம் மறைமாவட்டம்

5. அருட்பணி. ஜான் அந்தோணிதாஸ், சிவகங்கை மறைமாவட்டம்

6. அருட்பணி. செபஸ்தியான், OCD (late)

7. அருட்பணி. ஆரோக்கியம் டேவிட் ராஜன், OCD

8. அருட்பணி. மரியவளன், SMA

9. அருட்பணி. அருள் பிரிட்டோ, அகமதாபாத் மறைமாவட்டம்

10. அருட்பணி. அந்தோணி சேசுராஜ், SVD

11. அருட்பணி. ஆரோன் (இறை இரக்க சபை)

12. Br. டோமினிக், SDM

1. Sr. ஜெயந்தி

2. Sr. சமாதானம்

3. Sr. ரெஜினா

4. Sr. ஜீவா

5. Sr. ஜெயராணி

6. Sr. ஜெனட்

7. Sr. சேவியர் மேரி

8. Sr. ஆரோக்கிய செல்வி

9. Sr. சரிதா

10. Sr. அன்னம்மாள்

11. Sr. ஜோதி

12. Sr. ஜோஸ்பின் ராணி

13. Sr. சூசைமேரி

14. Sr. ராணி

15. Sr. செல்வராணி

16. Sr. டெய்சி

17. Sr. இருதய மேரி பாப்பா

18. Sr. குழந்தை தெரசா செங்கோலம்மாள்

19. Sr. லீமா

20. Sr. குழந்தையம்மாள்

21. Sr. உஷா

22. Sr. பாத்திமா

23. Sr. ஆரோக்கியமேரி

24. Sr. திரேஸ்

25. Sr. ஜோன்ஸ்

வழித்தடம்: பரமக்குடி -முத்துச்செல்லபுரம்

இராமநாதபுரம் -முத்துச்செல்லபுரம்

Location map: Holy Magi Church https://maps.app.goo.gl/ZnmxukS6bvUeN3iy6

வரலாறு:

புத்தூர் முத்துச்செல்லபுரம் என்று அழைக்கப்படும் இந்த கிராமம், சுமார் 200 ஆண்டுகள் வரலாறும் பாரம்பரியமும் கொண்டது. உழுதுண்டு வாழும் இக்கிராமத்தின் மக்கள் பல இடங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள். இதனை இம்மக்களின் வீட்டுப் பெயர்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

முதலில் குடியமர்ந்த இடம்:

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இப்போதுள்ள ஊரின் தென்கிழக்கே அய்யனார் கோயில் அருகே, குடிசை அமைத்து உழவுத் தொழில் செய்து மக்கள் வாழ்ந்து வந்தனர். முதற்குடியாக மரியபவுல் வகையார் இங்கு குடியமர்ந்ததாக வழிவழியாக சொல்லப்படுகிறது. நாளடைவில் அன்றைய சேதுபதி மன்னர், முத்துச்செல்லம் சேதுபதி அவர்கள், இப்போது குடியமர்ந்து வாழும் நிலப்பரப்பை தானமாக வழங்கியதால் இவ்வூர் முத்துச்செல்லபுரம் எனப் பெயர் பெற்றது. அரியகுடி புத்தூர் கண்மாய்  உட்பகுதிக்குச் சற்று அருகில் இருப்பதால், புத்தூர் முத்துச்செல்லபுரம் என்றானது. இருப்பினும் இது கிறித்தவ குடியிருப்பு என்று பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வந்தது.

ஊர் அமைவிடம்:

பரமக்குடி வட்டம், அரியகுடி புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது முத்துச்செல்லபுரம். 

கிழக்கில் அரியகுடி புத்தூர் 3கி.மீ, மேற்கில் செம்பொன்குடி, கொளுந்துரை 2கி.மீ,  வடக்கில் கீழாம்பல் 2கி.மீ, தெற்கில் உலையூர் 2கி.மீ. ஆகியன எல்லைகளாக அமைந்துள்ளன.

ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக மாதிரியில் ஐந்து நேரான தெருக்களுடன்,  செவ்வனே கட்டப்பட்டுள்ள அழகிய வீடுகள் இவ்வூரில் அமைந்துள்ளன. கனரக வாகனங்கள் செல்லுமளவிற்கு  தெருக்கள் நேராகவும் பரந்தும் அமைந்துள்ளது காண்போரை கவர்கிறது.

தொழில்:

இவ்வூரைச் சேர்ந்த மக்களில் சிலர் தொழில் காரணமாக சென்னை, பரமக்குடி, இராமநாதபுரம் மற்றும் மதுரை போன்ற இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். வேளாண்மையை முக்கியத் தொழிலாக கொண்டு மக்கள் நெல், மிளகாய் மற்றும் பருத்தி ஆகியவற்றை விளைவிக்கின்றனர். வானம் பார்த்த பூமி என்பதால் பெரும்பாலும் கிணற்று நீர் பாசனத்தை நம்பியே வாழ்கின்றனர். மேலும் காவல்துறை, பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை, வங்கி, கணிணி மென்பொருள் துறை, ஆசிரியர்கள், போக்குவரத்துத்துறை என பல்வேறு துறைகளிலும் முத்துச்செல்லபுரம் மக்கள் சிறந்து விளங்குகின்றனர்.

ஆலயம்:

இப்போதுள்ள ஆலயத்தின் தென்கிழக்குப் பகுதியில் ஊர் மக்கள் குடியேறிய காலத்திலிருந்து 1966 ஆம் ஆண்டு வரை ஓடு வேயப்பட்ட மூவரசர்கள் சிற்றாலயம் அமைந்திருந்தது. 

1964 ஆம் ஆண்டு அருட்பணி.‌ துரைராஜ் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, எவ்விதமான வெளிநாட்டு பங்களிப்போ நன்கொடையோ இல்லாமல், முழுக்க முழுக்க ஊர் மக்களின் கடின உழைப்பால் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1968 ஆம் ஆண்டு மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு இப்போது காண்கிற உயர்ந்த கோபுரம் கட்டப்பட்டது. 1984 ஆம் ஆண்டு ஆலய முகப்பு பகுதியில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு அருட்பணி.‌ S. R. இக்னேஷியஸ் அவர்களின் ஊக்கம் மற்றும் உதவியால் ஆலய சுற்றுச்சுவர் பூசப்பட்டு, கோபுரத்தில் வெண்கல மணியும் பொருத்தப் பட்டது.

24.05.1992 அன்று ஆலய வெள்ளிவிழா கொண்டாடப் பட்டது. 

1999 ஆம் ஆண்டு ஆலய மேற்கூரை மாற்றப்பட்டு, கான்கிரீட் கூரை அமைத்து, ஆலய உட்புறம் கிரானைட் பதிக்கப்பட்டு, மூவரசர்களுக்கு தனிப்பீடம் மற்றும் புதிய பலிபீடம் அமைத்தும் ஆலயத்திற்கு பொலிவூட்டப் பட்டது. இதற்கு ஆக்கமும் பெரும் பங்களிப்பும் தந்து உதவிய அருட்பணி. மதுரை ஆனந்த் அவர்களை முத்துச்செல்லபுரம் இறைசமூகம் நன்றியுடன் நினைவு கூர்கின்றது. 

ஆலய பொன்விழா (1968-2018) 19.05.2018 அன்று மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

புனித ஆரோக்கிய மாதா கெபி உள்ளது.

வாசகர் சாலை உள்ளது.

ஆர்.சி தொடக்கப்பள்ளி உள்ளது.

சமூக நலக்கூடம் ஒன்று உள்ளது.

தவக்கால நாட்களிலும் மற்றும் பிற நாட்களிலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இவ்வாலயம் வந்து ஜெபித்து இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர். மூவரசர்கள் பெயரில் மிகவும் உயரமான கோபுரத்தைக் கொண்ட, அழகிய இவ்வாலயத்திற்கு வாருங்கள்... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்...

இந்த ஆலயத் தொடர்பு எண்கள்: 

+91 97517 69986

+9191590 98588

ஆலய வரலாறு: ஆலய பொன்விழா மலர்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள்