தூய இடைவிடா சகாய அன்னை ஆலயம்
இடம்: விக்கிரவாண்டி, 605652
மாவட்டம்: விழுப்புரம்
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: விழுப்புரம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித அந்தோனியார் ஆலயம், R. C மேலக்கொந்தை
2. புனித சூசையப்பர் ஆலயம், V. S அடைகலாபுரம்
3. அற்புத குழந்தை இயேசு ஆலயம், முண்டியம்பாக்கம்
4. திருஇருதய ஆண்டவர் ஆலயம், பனையபுரம்
5. புனித பாத்திமா அன்னை ஆலயம், வீடூர்
பங்குத்தந்தை: அருட்பணி. ஆ. அற்புதராஜ்
குடும்பங்கள்: 300+
அன்பியங்கள்: 5
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணி
திங்கள், புதன், வியாழன் திருப்பலி: காலை 06.30 மணி
வெள்ளி மாலை 06.30 மணி நற்கருணை ஆராதனை
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை
மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு தேர்பவனி, தொரந்து நவநாள் ஜெபம், திருப்பலி
திருவிழா: மே மாதம் 19-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 24-ம் தேதி திருவிழா
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. Rev. Fr. Peter, OCD
2. Rev. Fr. John Victor, SJ
3. Rev. Fr. Zampier Gabriel
4. Rev. Fr. Amirtharajan
1. Rev. Sr. Victoria
2. Rev. Sr. Shanthi
3. Rev. Sr. Moksha Rakkini
4. Rev. Sr. Gracy
5. Rev. Sr. Salome
6. Rev. Sr. Merita
7. Rev. Sr. Jaculine Mary
8. Rev. Sr. Yesuin Pushpam (Little)
9. Rev. Sr. Lydia
வழித்தடம்: சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி அமைந்துள்ளது.
Location map: https://goo.gl/maps/VdtvdDaWPLeTFMXB6
வரலாறு:
அருட்பணி. அருள் மரியநாதர் 1874-ஆம் ஆண்டு நங்காத்தூர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற பின்னர் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள கிராமங்களில் மறைப்பரப்பு பணியில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.
மேதகு ஆயர் லவுனான் ஆண்டகை பணிக்காலத்தில், அருட்பணி. அருள் மரியநாதர் அவர்கள் விக்கிரவாண்டியில் தங்கி மறைப்பணியாற்றினார். ஆனால் பிற சமய சகோதரர்களால் விக்கிரவான்டியில் தொடர்ந்து பணிசெய்ய முடியாமல் போகவே, மேலக்கொந்தை ஊரில் தங்கி மறைப்பணியாற்றினார்.
1875 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மேதகு ஆயர் லவுனான் ஆண்டகை விக்கிரவாண்டியில் தங்கியிருந்து, இறைமக்களுக்கு உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கினார்.
1876- ம் ஆண்டு விக்கிரவாண்டி தனிப்பங்கானது. அப்போது விக்கிரவாண்டியில் 700 இறைமக்களும், கிளைப்பங்குகளில் சுமார் 500 இறைமக்களும் வாழ்ந்து வந்தனர்.
மேதகு ஆயர் லவுனான் ஆண்டகையிடம் நிதியுதவி பெற்று, அருட்பணி. அருள் மரியநாதர் அவர்கள் 1880 ஆம் ஆண்டில் ஓலைக் கொட்டகை ஆலயத்தைக் கட்டினார்.
15.11.1881 அன்று நள்ளிரவில் சில சமூகவிரோதிகளால், ஓலைக்கொட்டகை ஆலயத்திற்கு தீ வைக்கப்பட்டது.
அருட்பணி. அருள் மரியநாதர் 21 ஆண்டுகள் விக்கிரவாண்டியில் பணி செய்து, இப்பங்கு மக்களின் ஆன்மீக பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபட்டு, 1895 ஆம் ஆண்டு பணிமாற்றம் பெற்றுச் சென்றார்.
அருட்பணி. மரிய சூசைநாதர் (1896-1902) அவர்கள் வீடூரில் சிற்றாலயம் கட்டினார். முண்டியம்பாக்கம் ஊரில் மறைப்பணியாற்றி ஆலயம் அமைக்க நிலம் வாங்கினார்.
அருட்பணி. மரிய லாசர் (1902-1905) அவர்கள் முண்டியம்பாக்கம், பனையபுரம், ஆசூர், வாக்கூர் ஆகிய கிராமங்களில் 20 நாட்கள் தங்கியிருந்து மக்களை சந்தித்து மறைப்பணி செய்து, பலருக்கு திருமுழுக்கு கொடுத்தார்.
1906 ஆம் ஆண்டில் அருட்பணி. அல்போன்ஸ்நாதர் அவர்கள் கிளைப்பங்குகளில் இருந்த ஓலைக்கூரை ஆலயங்களை அகற்றிவிட்டு, புதிய ஆலயங்களை கட்டுகிற பணியைத் தொடங்கினார். முதலில் அடைக்கலாபுரம் புனித சூசையப்பர் ஆலயம் கட்டப்பட்டு 29.11.1911 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
1933 ஆம் ஆண்டு அருட்பணி. காஸ்தோன் அவர்கள் பங்குத்தந்தை இல்லத்தோடு சேர்ந்து புதிய ஆலயத்தை கட்டும் பணியைத் தொடங்கினார். பின்னர் தற்போதுள்ள ஆலயத்தை கட்டும் பணியைத் தொடங்கினார்.
அருட்பணி. மகிமைநாதர், அருட்பணி. சாமிக்கண்ணு ஆகியோர் 1963 ஆம் ஆண்டில் ஆலய கட்டுமானப்பணிகளை நிறைவு செய்தனர்.
ஆலய நுழைவாயில் அருட்பணி. A. நாயகம் பணிக்காலத்தில் கட்டப்பட்டு, புதுவை -கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி அனந்தராயர் D.D, DCL அவர்களால் 20.07.2015 அன்று திறந்து வைக்கப்பட்டது.
பயணிகளை ஆசீர்வதிக்கும் ஆண்டவர் கெபி:
திருச்சி -சென்னை நெடுஞ்சாலை வழியாக தினமும் பயணிக்கும் மக்களுக்காக, பங்குத்தந்தை அருட்பணி. A. அற்புதராஜ் பணிக்காலத்தில் இந்த கெபி கட்டப்பட்டு, 24.05.2021 அன்று செங்கல்பட்டு, மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, அருட்பணி. K. A. ஜேசு நசரேன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வழியாக பயணிக்கும் பயணிகள் இந்த கெபியில் வந்து மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, ஜெபித்து காணிக்கை செலுத்தி செல்கின்றனர்.
பங்கில் உள்ள துறவற இல்லங்கள்/ நிறுவனங்கள்:
1. CSST Sisters convent
2. St Joseph's Sisters convent
3. Sacred Heart Sisters convent
4. St Mary's Matric Higher Secondary School
5. St Joseph's Convent CBSC School
6. Sacred Heart women's college
7. Sagaya Matha Interfaith boys home
(புனித சகாய அன்னை பல்சமய மாணவர் விடுதி)
பங்கில் உள்ள சபைகள்/ இயக்கங்கள்:
1. மரியாயின்சேனை
2. இளையோர் இயக்கம்
3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
4. பாடகற்குழு
5. மறைக்கல்வி
6. பங்குப்பேரவை
பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. அருள் மரிநாதர் (1873-1895)
2. அருட்பணி. ஜொர்னோ (1895-1896)
3. அருட்பணி. மரியசூசைநாதர் (1896-1902)
4. அருட்பணி. அருட்பணி. மரிய லாசர் (1902-1906)
5. அருட்பணி. அல்போன்ஸ்நாதர் (1906-1914)
6. அருட்பணி. லமாத் (1914-1915)
7. அருட்பணி. மரி அடைக்கலநாதர் (1915-1922)
8. அருட்பணி. அருட்பணி. ரபேல் (1922)
9. அருட்பணி. காஸ்தோன் (1930-1936)
10. அருட்பணி. மரிய குழந்தை (1936-1939)
11. அருட்பணி. மரிய ஜோசப் (1940-1941)
12. அருட்பணி. தேவன்னா (1941-1949)
13. அருட்பணி. K. P. அந்தோணிசாமி (1949-1955)
14. அருட்பணி. நோயேல் (1955-1961)
15. அருட்பணி. மகிமைநாதர் (1961-1963)
16. அருட்பணி. சுவாமிக்கண்ணு (1963-1965)
17. அருட்பணி. டெஸ்கவரிஸ் (1965-1967)
18. அருட்பணி. இக்னேஷியஸ் (1967-1971)
19. அருட்பணி. பால் புத்தனங்காடி (1971-1973)
20. அருட்பணி. D. சவரிமுத்து (1973-1974)
21. அருட்பணி. D. ஜான் ஜேம்ஸ் (1974-1979)
22. அருட்பணி. லாசர் மோன்போர்ட் (1979-1984)
23. அருட்பணி. C. சூசைநாதர் (1984-1992)
24. அருட்பணி. M. இருதயராஜ் (1992-1997)
25. அருட்பணி. A. அந்தோணி (1997-2004)
26. அருட்பணி. C. பிரான்சிஸ் ஜோசப் அகர்வால் (2004-2010)
27. அருட்பணி. அமலோர் புஷ்பராஜ் (2010-2012)
28. அருட்பணி. S. ஆனந்தராஜ் (2012-2013)
29. அருட்பணி. A. நாயகம் (2013-2016)
30. அருட்பணி. V. சின்னப்பன் (2016-2017)
31. அருட்பணி. C. சவரிமுத்து (2018)
32. அருட்பணி. A. அற்புதராஜ் (2018 -முதல் தற்போது வரை)
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. அற்புதராஜ்