681 தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம், காந்திநகர்

      
தூய மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம்: காந்திநகர், நெல்லை டவுன், 627008

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: பாளையங்கோட்டை

மறைவட்டம்: பாளையங்கோட்டை 

நிலை: கிளைப்பங்கு

பங்கு: தூய அடைக்கல மாதா ஆலயம், திருநெல்வேலி டவுன்

பங்குத்தந்தை: அருள்பணி. மை.‌ பா. சேசுராஜ்

குடும்பங்கள்: 19

அன்பியம்: 2

மாதத்தின் முதல் புதன்கிழமை மாலை 06:30 மணி மற்றும் நான்காவது வியாழக்கிழமை மாலை 06:30 மணிக்கும் திருப்பலி

திருவிழா: மே மாதம் 06-ம் தேதியை மையமாகக் கொண்ட மூன்று நாட்கள்

வழித்தடம்: நெல்லை டவுன் -தென்காசி சாலையில், இராணி அண்ணா அரசு மகளிர் கலைகல்லூரி அமைந்துள்ள பகுதியில் காந்திநகரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/j3RwFv

வரலாறு:

பேட்டை பங்குத்தந்தை அருள்பணி. சகாயஜான் அவர்களின் தலைமையில், திரு. அ. ஜான் ஜெயகுமார் அவர்களின் ஒத்துழைப்புடன் காந்திநகர் பகுதியில் வசிக்கும் 6 கத்தோலிக்க குடும்பங்கள் கண்டடைந்து, ஒருங்கிணைக்கப்பட்டு 13.02.2005 அன்று, முதல் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மாதந்தோறும் அன்பியக்கூட்டம் நடத்தப்பட்டது.

05.06.2005 அன்று நெல்லை டவுன் தூய அடைக்கல மாதா ஆலயம் தனிப்பங்கான போது, காந்திநகர் அதன் கிளைப்பங்காக ஆனது.

03.07.2005 அன்று காந்திநகர் சாந்தமரியா பள்ளிக்கூடத்தில் வைத்து நெல்லை டவுன் பங்குத்தந்தை அருள்பணி. அந்தோணி சேவியர் அவர்களால் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

2004 ஆம் ஆண்டு முதல் ஆலயம் கட்ட குடும்பத்திற்கு தலா ரூ.50 மாதச்சந்தா பெறப்பட்டு, 2008 ஆம் ஆண்டுவரை சேமிக்கப்பட்டது. 

31.05.2008 அன்று பங்கு விசாரணைக்கு வந்த ஆயர் அவர்களிடம், காந்திநகரில் ஆலயம் கட்டுவதற்கான கோரிக்கை வைக்கப்பட்டது.

அருள்பணி. அருள் அம்புரோஸ் பணிக்காலத்தில் ஆலயம் கட்ட நிலம் வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்காக நிர்வாக பொறுப்பாளர்களை நியமித்தார்.

அருள்பணி. அந்தோணி அ. குரூஸ் பணிக்காலத்தில், காந்திநகரின் 12 குடும்பங்களும் இணைந்து ஆலயம் கட்ட 10 சென்ட் நிலத்தை 02.09.2011 அன்று வாங்கினர். இதில் திரு.‌ காசிராஜன் 5 சென்ட் நிலம் இலவசமாகவும், 5 சென்ட் நிலம் இறைமக்களின் பங்களிப்புடனும் வாங்கப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்ட 2010 செப்டம்பர் மாதம் முதல், பணிகள் நிறைவு பெற்ற 2015 மே மாதம் வரை மாதச்சந்தா ரூ. 100 இறைமக்களிடம் பெறப்பட்டது.

அருள்பணி. அந்தோணி அ. குரூஸ் பணிக்காலத்தில் ஆலயம் கட்ட புனித மிக்கேல் அதிதூதரின் நாளாகிய 29.09.2012 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

அடிக்கல் நாட்டப்பட்டது முதல் ஆலயம் கட்டி முடிக்கும் வரை நிர்வாகிகளின் அயராத முழு உழைப்புடன், ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 06.05.2015 அன்று மறைமாவட்ட முதன்மைகுரு அருள்பணி. ஜோமிக்ஸ் அடிகளாரால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

தினமும் மாலையில் ஜெபமாலை நடைபெறுகிறது. மாதத்தின் முதல் புதன்கிழமை நடைபெறும் திருப்பலியானது, ஆலய கட்டுமானப் பணிகளுக்காக உதவிய, பங்களிப்பு செய்த அனைத்து குடும்பங்களின் நலன்களுக்காக ஒப்புக் கொடுக்கப்படுகிறது. நான்காவது வியாழன் தூய மிக்கேல் அதிதூதர் நவநாள் திருப்பலி சிறப்புடன் நிறைவேற்றப்படுகிறது.

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மை.பா. சேசுராஜ்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலயத் தலைவர் திரு. அ. ஜான் ஜெயகுமார்