787 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், தும்பூர்

  

புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம்: தும்பூர், 605601 

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விழுப்புரம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், விழுப்புரம்

பங்குப்பணியாளர்: அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ்

Contact no: +91 95009 25744

குடும்பங்கள்: 20

ஞாயிறு திருப்பலி மாலை 06:30 மணி

திருவிழா: செப்டம்பர் மாதம் 08-ம் தேதி

வழித்தடம்:  விழுப்புரம் -செஞ்சி வழித்தடத்தில், விழுப்புரத்தில் இருந்து 10கி.மீ தொலைவில் தும்பூர் அமைந்துள்ளது.

Location map: AROKIA MADAHA KOVIL

https://maps.google.com/?cid=11677625651415901489&entry=gps

வரலாறு:

தும்பூர் ஊரைச் சேர்ந்த திரு.‌ C. சவரிமுத்து - S. அன்னமேரி அம்மாள் தம்பதியரின் நிதியுதவியால், மண் சுவர் சீமை ஓடுகள் வேயப்பட்ட புனித ஆரோக்கிய மாதா ஆலயமானது கட்டப்பட்டு 07.09.1969 அன்று விழுப்புரம் பங்குத்தந்தை அருட்பணி.‌ A. மரியசூசை  அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

திருவிழாவின் போது அருகில் உள்ள அனைத்து மக்களும் சாதி சமய வேறுபாடின்றி பங்கேற்று சிறப்பிக்கின்றனர். 

பழைய ஆலயமானது மிகவும் பழுதடைந்து போனதால், வெளிநாட்டு உதவி மற்றும் தனிநபர் உதவியுடன் தற்போது புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவும், வெறும் 20 குடும்பங்களை மட்டுமே கொண்ட மக்களால் ஆலய கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் கடும் சவால் நிறைந்ததாக உள்ளது.‌ கடந்த சில ஆண்டுகளாக ஓலைக் குடிசையில் தான் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஆகவே இவ்வாலய கட்டுமானப் பணிகளைத் தொடர உதவிகளுக்காக காத்திருக்கும் தும்பூர் இறைசமூகத்தினருக்கு, தேவையான நிதியுதவிகள் கிடைத்திட இறைவனிடம் ஜெபிப்போம்... உதவி செய்ய முன்வருபவர்கள் அருட்பணி ஆல்பர்ட் பெலிக்ஸ் +9195009 25744 அவர்களை தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. A. ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்கள்