689 தூய பரிந்துரை மாதா ஆலயம், தும்பூர்

    
தூய பரிந்துரை மாதா ஆலயம்

இடம்: தும்பூர், தும்பூர் அஞ்சல், சேத்துப்பட்டு தாலுகா.

மாவட்டம்: திருவண்ணாமலை

மறைமாவட்டம்: வேலூர்

மறைவட்டம்: சேத்துப்பட்டு

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு தாலுகா

பங்குத்தந்தை: அருள்பணி. அ. மோட்சநாதன்

குடும்பங்கள்: 157

அன்பியங்கள்: 3

ஞாயிறு திருப்பலி காலை 05.30 மணிக்கு

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை தேர்பவனி, திருப்பலி

நாள்தோறும் மாலை 05.00 மணிக்கு ஜெபமாலை

திருவிழா: மே மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருள்பணி. சிற்றரசு, SDB

2. அருள்பணி. L. ரமேஷ் அந்தோணி

3. அருள்சகோதரி. தமிழரசி

4. அருள்சகோதரி‌. எலிசபெத் ராணி

5. அருள்சகோதரி. ராஜம்மாள்

வழித்தடம்: தேவிகாபுரம் -தூம்பூர் (7கி.மீ)

ஆரணி -தும்பூர் பேருந்துகள்: சத்யா மற்றும் தடம் எண் 16

Location map: Annai Velankanni Church

Arani - Devikapuram Rd, Tamil Nadu 606902

https://maps.app.goo.gl/F2aMKqbk5sHgPWuE7

வரலாறு:

கி.பி 1877 ஆம் ஆண்டு வேளந்தாங்களில் இருந்த அருள்தந்தை தாராஸ் அடிகளாரை, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 12 பெரியவர்கள் சென்று சந்தித்து, தங்கள் பகுதிக்கும் வந்து மறைப்பரப்பு பணியில் ஈடுபடும் படியாக அழைப்பு விடுத்தனர். அருள்தந்தை தாராஸ் அடிகளார் பத்தியாவரம் பகுதியில் மறைப்பணியாற்றியதன் பயனாக தும்பூர் பகுதியிலும் மக்கள் கிறிஸ்தவம் தழுவினர்.

தும்பூர் இறைமக்கள் தொடக்க காலத்தில் ஒரு ஓலைக்குடிசை ஆலயம் அமைத்து, புனித டோமினிக் சாவியோ -வை பாதுகாவலராகக் கொண்டு, இறைவனை வழிபட்டு வந்தனர்.

சேத்துப்பட்டு பங்கின் கிளைப்பங்காக தும்பூர் செயல்பட்டு வந்தது.

கி.பி 1962 ஆம் ஆண்டு பத்தியாவரம் (சேத்துப்பட்டு) பங்குத்தந்தை அருள்பணி. P. J. சேவியர் அவர்களின் முயற்சியால், ஓலைக்கூரை ஆலயம் அகற்றப்பட்டு, ஓடுவேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது.

2002 ஆம் ஆண்டு தச்சம்பாடி பங்கிலிருந்து பிரிந்து தேவிகாபுரம் தனிப்பங்கான போது, தும்பூர், தேவிகாபுரத்தின் கிளைப்பங்காக ஆனது.

தற்போதைய புதிய ஆலயமானது தும்பூர் மண்ணின் மைந்தர் அருள்பணி. ரமேஷ் அந்தோணி அவர்களின் முயற்சியால், நன்கொடையாளர்களின் உதவியுடன் 2013 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவுற்றது இவ்வேளையில் நமக்காக பரிந்து பேசும் அன்னைமாமரியை பாதுகாவலியாகக் கொண்டு, தூய பரிந்துரை மாதா ஆலயம் எனப் பெயர் வழங்க மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களிடம் அருள்பணி. ரமேஷ் அந்தோணி அவர்கள் அனுமதி கோரினார். ஆயரும் அனுமதியளித்தார். 

தூய பரிந்துரை மாதாவின் சுரூபமானது கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டு, இரயில் வண்டியில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆலய அர்ச்சிப்பு விழாவின் முந்தைய நாளில் காட்பாடி இரயில் நிலையத்தில் வந்தபோது சுரூபம் அடங்கிய பார்சலை பெற்றுக் கொள்ள சென்ற வேளையில், பார்சல் காட்பாடி முகவரிக்கு என இருந்தாலும், பெங்களூருக்கு என முத்திரை செய்யப் பட்டிருந்ததால், எவ்வளவு முயன்ற பிறகும் பார்சலை பெற்றுக் கொள்ள இயலவில்லை. இரயில் கிளம்பிச் சென்று விட்டது. மறுநாள் ஆலய அர்ச்சிப்பு.. சுரூபமும் கிடைக்கவில்லை.. அருள்பணி. ரமேஷ் அந்தோணி அவர்களும் கூடவே சென்றவர்களும் செய்வதறியாது திகைத்து நின்றனர்... சுரூபத்தை பெற்றுக் கொள்ள அருள்தந்தையின் கூடவே வந்தவர்களை அந்த இரயிலிலேயே அனுப்பி வைத்தார்..

இருந்தாலும் மன உறுதியுடன் இது உங்கள் ஆலயம், உங்களது சித்தம் எப்படியோ அப்படியே நடக்கட்டும் மாதாவே.. எனக்கூறி ஜெபித்தனர்...  ஆச்சரியம்..! அடுத்த சில மணி நேரத்தில் ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து மாதாவின் சுரூப பார்சல் இறக்கப்பட்டு, பக்தியுடன் பெற்றுக் கொண்டு ஜெபமாலை ஜெபித்தபடியே, அடுத்தநாள் (ஆலய அர்ச்சிப்புநாள்) காலையில் 06.00 மணிக்கு  காட்பாடி இரயில் நிலையம் வந்தனர்..! அனைவரும் ஆனந்தக் கண்ணீருடன் தூய பரிந்துரை மாதாவின் அருளை எண்ணி நன்றி கூறினர்..

இரயில் நிலைய அதிகாரி பிற சமயத்தை சேர்ந்தவர் என்ற போதிலும் தமது 38 வருட பணிக்கால அனுபவத்தில் இதுபோல நடந்தது இல்லை எனவும், மாதா மிகுந்த வல்லமை மிகுந்தவர் எனவும் ஆச்சரியத்துடன் கூறினார்.

30.05.2014 அன்று மேதகு ஆயர் சௌந்தரராஜூ அவர்களால் ஆலயம் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. இந்த நாளிலிருந்து புனித டோமினிக் சாவியோ ஆலயம், தூய பரிந்துரை மாதா ஆலயம் ஆனது. 

தூய பரிந்துரை மாதாவின் பெயரில் விளங்கும் முதல் ஆலயம் என்ற சிறப்பை தும்பூர் ஆலயம் பெற்றது.

புனித அந்தோனியார் கெபி ஒன்றும் தும்பூர் ஆலய வளாகத்தில் உள்ளது.

ஆலய பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. டோமினிக் சாவியோ இளையோர் இயக்கம்

3. மறைக்கல்வி

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. அ. மோட்சநாதன் அவர்கள்

ஆலய வரலாறு மற்றும் புகைப்படங்கள்: மண்ணின் மைந்தர். அருட்பணி. L. ரமேஷ் அந்தோணி அவர்கள்