புனித சந்தியாகப்பர் ஆலயம்
இடம்: ரோச்மாநகர், கன்னிராஜபுரம் அஞ்சல்
மாவட்டம்: இராமநாதபுரம்
மறைமாவட்டம்: சிவகங்கை
மறைவட்டம்: இராமநாதபுரம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்கு: புனித அன்னாள் ஆலயம், நரிப்பையூர்
பங்குத்தந்தை: அருட்பணி. S. அமல்ராஜ்
குடும்பங்கள்: 320 (பங்கு 250, கிளைப்பங்கு 70)
அன்பியங்கள்: 16
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி
நாள்தோறும் திருப்பலி காலை 05.45 மணி
வியாழன் மாலை 06:00 மணிக்கு புனித சந்தியாகப்பர் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்
திருவிழா: செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நிறைவு பெறும் வகையில் பத்து நாட்கள்.
வழித்தடம்: சாயல்குடி -நரிப்பையூர் -கன்னிராஜபுரம் -ரோச்மாநகர்
Location map:
St. James Church
39WP+726, Rochmanagar, Kannirajapuram, Tamil Nadu 623135
https://maps.app.goo.gl/N9pACtvpBUF6rLLy9
வரலாறு:
ரோச்மாநகர் கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் மன்னார் வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கன்னிராஜபுரம் பஞ்சாயத்தை சேர்ந்தது இந்த கடற்கரை கிராமம். மேலும் இந்த கிராமமானது இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள் அனைவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு (1904-1905) தாய்க்கிராமமாகிய மூக்கையூரிலிருந்து மீன்பிடி தொழில் செய்வதற்காக கடற்கரையில் வந்து குடியேறியவர்கள் தான் ரோச்மாநகர் மக்கள். இந்த கிராமத்தில் உள்ள 99% மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவர்.
தூத்துக்குடி மறைமாவட்ட முதல் ஆயர் மேதகு திபுர்சியுஸ் ரோச் அவர்கள், இம்மக்கள் வீடுகட்டி குடியேற 5 ஏக்கர் நிலம் வாங்கி இலவசமாக கொடுத்துள்ளார். ஆகவே ஆயர் ரோச் அவர்களின் பெயரால் "ரோச்மாநகர்" என பெயர் பெற்றது.
தூய யாக்கோபு (சந்தியாகப்பர்) ஆலயம்:
கிறிஸ்தவர்களாகிய இக்கிராம மக்கள் கடவுளை நாள்தோறும் வழிபடுவதற்கு ஓர் ஆலயம் கட்ட விரும்பினார்கள். இந்து சகோதரர் ஒருவர் கொடுத்த இடத்தில் 1914-1915 ஆம் ஆண்டில் தூய யாக்கோபுவின் பெயரால் ஒரு சிற்றாலயம் அமைக்கப்பட்டு, மூக்கையூர் பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது. மூக்கையூர் பங்கு அப்போது தூத்துக்குடி மறைமாவட்டத்தின் கீழ் இருந்தது.
ரோச் மாநகரில் தற்போது உள்ள பழைய ஆலயம் அருட்பணி. பங்கிராஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அருட்பணி. ஜோடிரோஸ் அவர்களால் கட்டுமானப் பணிகள் தொடரப்பட்டது. பின்னர் மதுரை உயர் மறைமாவட்டத்தின் அருட்பணி. மரிய திரவியம் அவர்களால் பணிகள் தொடரப்பட்டு, அருட்பணி. எஸ். எம். செல்வராஜ் அவர்களால் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 20.09.1978 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
தூய யாக்கோபு ஆலயம் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு பெற்ற வேளையில், ஆலயம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, 02.10.2008 அன்று அப்போதைய சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புதிய ஆலயம் (2021):
பழைய ஆலயம் பழுதடைந்த நிலையில் இருந்ததாலும், ஆலய முகப்பு சாலையோரம் அமைந்திருந்ததாலும், குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், இடநெருக்கடி ஏற்பட்டு இறைமக்கள் ஆலயத்திற்கு வெளியே நின்று திருப்பலியில் பங்கேற்று வந்ததாலும், புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்பணி. S. அமல்ராஜ் அவர்களின் தலைமையில், அதற்கான பணிகளைத் தொடங்கும் வண்ணம் 18.01.2018 வியாழக்கிழமை அன்று புதிய ஆலயத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு, மறைமாவட்ட பொருளாளர் அருட்பணி. மி. சந்தியாகு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இறைமகன் இயேசுவின் ஆசியோடும், அற்புதர் சந்தியாகப்பரின் வழித்துணையோடும், ரோச்மாநகர் பங்கு மக்களின் கடின உழைப்போடும், உலகெங்கும் உள்ள மக்களின் பேராதரவோடும் பிரமாண்டமான அழகிய புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, 23.09.2021 வியாழக்கிழமை மேதகு ரோச் ஆண்டகையின் ஆயர் திருநிலைப்பாட்டு நாளில், சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு முனைவர் செ. சூசை மாணிக்கம் அவர்களால் திறந்து அர்ச்சிக்கப்பட்டது. அன்றிலிருந்து ரோச்மாநகர் மக்கள் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ள மக்களின் வருகையானது அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை எண்ணி உள்ளம் பூரிப்படைகிறது.
ரோச்மாநகர் பங்கு:
ரோச்மாநகர் கிராமம் உருவான நாள் முதல் மூக்கையூர் பங்கின் கிளைக் கிராமமாக இருந்து வந்தது. மூக்கையூர் பங்கு முதலில் தூத்துக்குடி மாவட்டத்திலும், பின்னர் மதுரை உயர் மறைமாவட்டத்திலும் இருந்தது. 1987 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மறைமாவட்டத்தை சார்ந்துள்ளது.
ரோச்மாநகர் இறைமக்களின் ஆன்மீகத் தேவையை முன்னிறுத்தி மூக்கையூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, சிவகங்கை மறைமாவட்டத்தின் 63-வது பங்காக முன்னாள் மறைமாவட்ட ஆயர் மேதகு. எஸ். எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் 2005 மே மாதம் அறிவிக்கப்பட்டது. ஆயர் மேதகு செ. சூசை மாணிக்கம் அவர்கள் 04.08.2005 அன்று ரோச்மாநகரை தனிப் பங்காக உயர்த்தினார். முதல் பங்குப்பணியாளராக அருட்பணி. சூ. ஜேம்ஸ் அந்துவான் தாஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். நரிப்பையூர் புனித அன்னாள் ஆலயமானது, ரோச் மாநகரின் கிளைப்பங்காக உள்ளது.
ரோச்மாநகர் தோன்றிய 100 ஆம் ஆண்டு நினைவாக, பங்குத்தந்தை அருட்பணி. S. R. ஜஸ்டின் திரவியம் பணிக்காலத்தில், கடற்கரையில் தூய மிக்கேல் அதிதூதர் கெபி கட்டப்பட்டு, அருட்பணி. S. அருள்தாஸ், (இயக்குநர் டாசோஸ் திருச்சி) அவர்களால் 29.04.2017 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
பங்கில் உள்ள அன்பியங்கள்:
1. புனித மரிய வியான்னி அன்பியம்
2. புனித பியோ அன்பியம்
3. புனித சவேரியார் அன்பியம்
4. புனித அருளானந்தர் அன்பியம்
5. புனித யாக்கோபு அன்பியம்
6. புனித தோமா அன்பியம்
7. புனித மிக்கேல் அன்பியம்
8. புனித அந்தோனியார் அன்பியம்
9. புனித சிறுமலர் அன்பியம்
10. புனித அசிசியார் அன்பியம்
11. புனித யோவான் அன்பியம்
12. புனித லூர்து அன்னை அன்பியம்
13. புனித செபஸ்தியார் அன்பியம்
14. புனித அன்னை தெரசாள் அன்பியம்
15. புனித வளன் அன்பியம்
16. புனித ஆரோக்கிய அன்னை அன்பியம்
பங்கில் உள்ள பக்தசபைகள்:
1. யாகு மறைக்கல்வி மன்றம் (யாகு= யாகப்பரின் பெயர் சுருக்கம்)
2. பீடப்பூக்கள்
3. இயேசுவின் கண்மணிகள் இயக்கம்
4. அமல அன்னை இளம் பெண்கள் இயக்கம்
5. ஜான்பால் இளைஞர் இயக்கம்
6. குடும்ப நலவாழ்வு பணிக்குழு
7. பாடகற் குழுக்கள்
8. புனித வின்சென்ட் தே பவுல் சபை
9. அன்பியங்கள்
10. பங்குப்பேரவை
11. கிராம நிர்வாகக் குழு
திரு இருதய புதல்வியர் சபை அருட்சகோதரிகள்:
கிராம மக்களின் நலனுக்காக மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. S. ஜேம்ஸ் அந்துவான் தாஸ் (2005-2010)
2. அருட்பணி. ஜான் கென்னடி (2010-2011)
3. அருட்பணி. ஜெகநாதன் (2011-2012)
4. அருட்பணி. S. R. ஜஸ்டின் திரவியம் (2012-2017)
5. அருட்பணி. S. அமல்ராஜ் (2017 முதல்..)
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. இ. பினோட்டன், சிவகங்கை மறைமாவட்டம்
2. அருட்சகோதரி. சுவன்சியா, அமல அன்னையின் மறைபரப்பு சபை
3. அருட்சகோதரி. மரிய ஃபிலோ, திருஇருதய சபை
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. S. அமல்ராஜ் அவர்கள்.