91 புனித சவேரியார் ஆலயம், கோணங்காடு


புனித சவேரியார் ஆலயம்

இடம் : கோணங்காடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : ஆன்றனி கோமஸ்.

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை.

குடும்பங்கள் : 1058
அன்பியங்கள் : 17

ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு.

திருவிழா : அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள்.

வரலாறு :

சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்னர் கோணங்காடு கிராமத்தை சார்ந்த இரு வீட்டாரும், பரணமுறி ஊரைச் சார்ந்த ஒரு குடும்பமும் இணைந்து கோணங்காட்டில் ஒரு சிறு குருசடி அமைத்து வழிபட்டு வந்தனர்.

1775 ம் ஆண்டு குளப்பாடு ஊரைச் சார்ந்த திரு குமார பெருமாள் குடும்பத்தார் கோட்டார் பங்குத்தந்தையிடம் திருமுழுக்குப் பெற்று கத்தோலிக்க மறையை தழுவினர். புனித பிரான்சிஸ் சவேரியார் மேல் கொண்ட பக்தியினால் உந்தப் பெற்று தற்போது ஆலயம் அமைந்துள்ள 150 சென்ட் நிலம் மற்றும் ஆலய விளக்கு செலவிற்காக புன்னை மரங்கள் நிறைந்த 35 சென்ட் நிலமும் தானமாக ஆலயத்திற்கு கொடுக்கப்பட்டது.

குருசடியாக கட்டப்பட்ட சிற்றாலமானது பின்னர் இயேசு சபை குருக்களால் ஆர்ச் வடிவில் கட்டப்பட்டு, முதலில் காரங்காடு பங்கின் கிளையாகவும், 1906 ம் ஆண்டு மாங்குழி பங்கின் கிளைப் பங்காகவும் இருந்து வந்தது.

1943 ம் ஆண்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு சிலுவை வடிவில் கட்டப்பட்டது. 30-08-1964 ல் கோணங்காடு தனிப்பங்காக உயர்ந்தது. தற்போதைய ஆலயமானத் 1993 ம் கட்டப் பட்டது ஆகும். தனிப்பங்காக உயர்ந்து சுமார் 54 வருடங்களான புனித பிரான்சிஸ் சவேரியாரை பாதுகாவலாகக் கொண்ட கோணங்காடு பங்கானது பல்வேறு நிலைகளிலும் சிறந்து விளங்குகின்றது.

மேலும் இப்பங்கிலிருந்து பல அருட்சகொதரிகளும், ஆறு அருட்பணியாளர்களும் உருவாகியுள்ளனர். அவர்களின் பெயர்கள்..
1. Fr அல்போன்ஸ்
2. Fr ஜஸ்டஸ்
3. Fr செபாஸ்டியன்
4. Fr ஸ்டான்லி
5. Fr ஆன்றனி ஜெயா
6. Fr சார்லஸ் விஜூ

இவர்களில் Fr Francis Sebastian அவர்கள் குழித்துறை மறை மாவட்டத்தின் 'சிகரம்' இயக்கத்தின் இயக்குனராக இருந்து வழி நடத்தி பல மாணவர்களை பல்வேறு தேர்வுகளுக்கும் சிறப்பாக தயார் செய்து வருகின்றார். Fr Charles Viju அவர்கள் எங்கள் தூயகாணிக்கை மாதாஆலயம் மாதாபுரம் மற்றும் புனித அந்தோணியார் ஆலயம் விழுந்தயம்பலம் ஆலயங்களின் பங்குத்தந்தையாக இருந்து சிறப்பாக வழி நடத்தி இறை பணி செய்து வருகின்றார்.

தினமும் காலை 06.30 மணிக்கும் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 05.30 ற்கு புனித சவேரியார் நவநாள் திருப்பலியும். புதன்கிழமை மாலை 05.30 க்கு தூய லூர்து மாதா நவநாள் மற்றும் வியாழக்கிழமைகளில் மாலை 05.30 க்கு புனித யூதா ததேயுஸ் நவநாள் திருப்பலியும் சிறப்பாக நடைபெறுகின்றது.