959 புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், இந்திராநகர் -திருவில்லிபுத்தூர்

       

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்

இடம்: இந்திராநகர் -திருவில்லிபுத்தூர், 626125

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: திருவில்லிபுத்தூர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: திருஇருதய ஆண்டவர் ஆலயம், திருவில்லிபுத்தூர்

பங்குத்தந்தை அருட்பணி. ச. சந்தன சகாயம்

உதவி பங்குத்தந்தை அருட்பணி. அ. செல்வநாயகம், SDM

குடும்பங்கள்: 58

அன்பியங்கள்: 2

ஞாயிறு திருப்பலி காலை 10:30 மணி (மாதத்தின் முதல் ஞாயிறு தவிர்த்து)

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 08-ம் தேதி வரை 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. L. அகஸ்டின்

2. அருட்பணி. C. ரூபன்

3. அருட்சகோதரி. ரோஸ்மேரி, SAT

4. அருட்சகோதரி. S. ஆக்னஸ்

வழித்தடம்: திருவில்லிபுத்தூர் -மதுரை சாலையில், இந்திரா நகர் அமைந்துள்ளது.

Location map:Annai Velankanni Church

https://maps.app.goo.gl/nkJt8jBWYqwmCeRX6

வரலாறு:

காரைக்குடி, இராமநாதபுரம், பரமக்குடி, காளையார்கோவில், சருகணி, தேவகோட்டை போன்ற இடங்களில் இருந்து சில குடும்பங்களும்; இலங்கை, பர்மா அகதிகளான சில  குடும்பங்களும் அரசு நூற்பு ஆலையில் பணிபுரிவதற்காக 1974-75 காலகட்டத்தில் இந்திராநகரில் குடியேறினர். இவர்களில் 15 கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் அடங்குவர்.

கத்தோலிக்க மக்கள் தங்களது ஆன்மீகத் தேவைக்காக திருவில்லிபுத்தூர் இருதய ஆண்டவர் ஆலயம் சென்று வந்தனர். இந்திராநகரில் இருந்து திருவில்லிபுத்தூர் சென்று வர சிரமமாக இருந்ததால், இந்திராநகரில் ஆலயம் ஒன்றை கட்டித் தருமாறு பங்குப்பணியாளர்களிடம் மக்கள் கேட்டுக் கொண்டார்கள். 

அப்போதைய பங்குதந்தை அருட்பணி. ஜேக்கப் மணலா (1976-1984) அவர்கள் பணிக்காலத்தில், இந்திராநகர் மக்கள் நூற்பு ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த மக்களிடம் நிதிகள் திரட்டி, சென்ட் ஒன்றிற்கு ரூபாய் 600 விலையில், 20 சென்ட் நிலத்தினை இந்திராநகர் சாலையோரத்தில் வாங்கி, 1982-ல் அதனை மறைமாவட்டத்தின் பெயரில் எழுதிக் கொடுத்தனர். இந்த நிலத்தில் 1983 ஆம் ஆண்டில் அருட்பணி. ஜேக்கப் மணலா அவர்களின் வழிகாட்டலில் 16"10" அளவிலான ஆலயத்தைக் கட்டி, புனித ஆரோக்கிய மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டு, இந்த ஆண்டு முதன்முதலாக திருவிழா கொண்டாடப் பட்டது.

2005 ஆம் ஆண்டு கல்லறை தோட்டத்திற்கு 40 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, இந்திராநகர் இறைமக்களின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டது. மேலும் ஆலயமும் விரிசல் ஏற்பட்டு காணப்பட்டது. ஆகவே புதிய ஆலயம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அருட்பணி. சேவியர் ராஜ் (2008-2013) காலகட்டத்தில் ஆலயமானது அகற்றப்பட்டு, புதிய ஆலயத்திற்கு 2011 ஆம் ஆண்டு அடித்தளம் போடப்பட்டது.

இந்த காலகட்டத்தில் (2011-2019) வழிபாடு நடத்த 40"20" அளவில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்த ஷெட் மக்களின் ஒத்துழைப்புடன் போடப்பட்டது.

தொடர்ந்து ஏற்பட்ட நிதிநெருக்கடியின காரணமாக ஆலய கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட்டு, பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. 

2018 ஆம் ஆண்டில் பணிப்பொறுப்பேற்ற அருட்பணி. அல்வராஸ் செபஸ்டின் அவர்களின் வழிகாட்டலில், இந்திராநகர் இறைமக்களின் அயராத தன்னலமற்ற முயற்சி, பிற சமய மக்கள், உள்ளூர் வெளியூர் நன்கொடையாளர்கள் உதவியுடன் தற்போதைய ஆலயமானது கட்டி முடிக்கப்பட்டு, 02.03.2019 அன்று மேதகு பேராயர் அந்தோனி பாப்புசாமி D.D. S.T.D, அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பேராலயத்தை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட இந்த அழகிய ஆலயமானது, 8 ஆண்டுகளாக  இந்திராநகர் இறைமக்களின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த இந்திராநகரில் உள்ள (வேளாங்கண்ணி) ஆரோக்கிய மாதா ஆலயம் வாருங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர் திரு. A. அந்தோணிசாமி (எ) பீட்டர்