770 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொம்பாடி

  

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்

இடம்: கொம்பாடி, கைலாசபுரம் அஞ்சல், ஓட்டப்பிடாரம் தாலுகா, 628301

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: குறுக்குச்சாலை

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அன்னம்மாள் ஆலயம், மணியாச்சி

2. புனித அந்தோனியார் ஆலயம், பாறைக்குட்டம்

3. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொ.தளவாய்புரம்

4. குழந்தை இயேசு ஆலயம், பச்சைபெருமாள் புரம்

பங்குத்தந்தை: அருட்பணி. A. லாசர்

குடும்பங்கள்: 27 (கிளைப்பங்குகள் சேர்த்து 120+)

அன்பியங்கள்: 3 (கிளைப்பங்குகள் சேர்த்து 7)

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

நாள்தோறும் திருப்பலி காலை 05:30 மணிக்கு (செவ்வாய், வியாழன் தவிர்த்து)

திருவிழா: மே மாதம் 08-ம் தேதி

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி.‌ லூர்து மரியநாதர் (late)

2. அருட்பணி. ஜி. சூசைநாதர் (late)

3. அருட்பணி. மரிய வியாகுலம் (late)

4. அருட்பணி. மைக்கிள் (late)

5. அருட்சகோதரி.‌ பெனிட்டா மேரி

6. அருட்சகோதரி. சவரியம்மாள் (செல்லக்குட்டி)

வழித்தடம்: புளியம்பட்டி -கொம்பாடி 15கி.மீ

Location map: https://maps.app.goo.gl/4RnBTan3ezETeBsz6

ஆலய வரலாறு:

ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் அமைந்துள்ள சிற்றூர் தான் கொம்பாடி. இந்தியத் திருநாட்டின் விடுதலை வரலாற்றில் நட்சத்திரங்களாய் விளங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் அரசாண்ட பாஞ்சாலங்குறிச்சி, கப்போலோட்டிய தமிழன் வ.உ‌. சிதம்பரனார் வாழ்ந்த ஓட்டப்பிடாரம், வீரத்திருமகன் வாஞ்சிநாதன் வலம் வந்த மணியாச்சி ஆகியவையெல்லாம் கொம்பாடியைச் சுற்றியிருக்கும் வரலாற்றுச் சின்னங்களாய் விளங்கும் ஊர்கள் ஆகும். 

பெயர்க்காரணம்:

இவ்வூரைச் சுற்றிய காட்டு நிலங்கள் எல்லாம் இன்று வறட்சியாக காணப்படுகிறது. ஆனால் அன்றைய பழங்காலத்தில் இவ்வட்டார நிலமெல்லாம் பருத்தி விளைச்சல் மிகுந்ததாக காணப்பட்டது. மண்ணின் செழுமையில் கொழுமையாக வளர்ந்திருந்த பருத்திச் செடியில், காய்கள் நெருங்கி காய்த்துத் தொங்க, பருத்திச் செடிகள் தள்ளாடி தவிக்குமாம்! சூரிய ஒளிக்கதிர்கள் பருத்தி காய்களை உடைத்துத் தகர்க்க, அவை பறந்து சென்று எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேர் எனக் காணும் பருத்தி பஞ்சுகள் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாகும்.

சிற்றூராய் இருந்ததால் வெடித்துச் சிதறிய பருத்தியை எடுக்க ஆள் கிடைக்காமல் போகுமாம்.‌ இவ்வாறு சிதறிய பஞ்சுகள் மரக் கிளைகளில் தொங்கியபடியே ஆடிக்கொண்டு இருக்குமாம். இந்த காலகட்டத்தில் இந்த ஊர் வழியாக வந்த புலவர் ஒருவர் பருத்தி 'கொம்பாடி'க் கிடக்கிறதே என்று கூறியுள்ளார். அதன் பிறகு ஊர்மக்களாலும் "கொம்பாடி" என அழைக்கப்பட அப்பெயரே நிலைத்தது என்பது செவிவழிச் செய்தி ஆகும்.

இறைத்தொண்டர்களும் ஊர் வாழ்வும்:

இந்தியத் திருநாட்டிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும், ஒளியாம் இயேசு பெருமானை உயர்த்திக் காட்டிய இறைத்தொண்டர்களின் அளப்பரிய பணிகளால், இருண்ட ஊர்கள் ஒளிபெற்றன. வறண்ட ஊர்கள் வளம் பெற்றன. மிதிக்கப்பட்ட மக்களெல்லாம் மதிக்கப்படும் அளவுக்கு எழுச்சி பெற்று வாழ்வு பெற்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுபோல இந்த கொம்பாடி வட்டாரத்திலும் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் அரும் தொண்டாற்றியுள்ளனர். 

காமநாயக்கன்பட்டியைத் தலைமை இடமாகக் கொண்டு மேலை நாட்டு அருட்பணியாளர்கள் இவ்வட்டாரத்திலும் பணியாற்றி வந்தனர்.

மக்கள் கல்வி பெற்று உயர்வு பெறவும், பள்ளிகள், மருத்துவமனைகள் அமைத்தும் அரும்பணியாற்றி வந்தனர். இதன் பயனாக மக்களின் கூட்டம் அதிகரிக்கவே தருவைக்குளம், கயத்தார், கீழமுடிமண் ஆகிய ஊர்களை மையமாகக் கொண்டு புதிய பங்குகள் உருவாகின.

திரு இருதய சகோதரர்கள் சபையை நிறுவிய அருட்பணி. கௌசானல் அடிகளார் காமநாயக்கன்பட்டிக்கு செல்லும் வழியில் கொம்பாடி வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரையும், அவருடன் வந்தவர்களையும் வரவேற்று சுவையான உணவு கொடுத்து கொம்பாடி மக்கள் உபசரித்துள்ளனர்.‌ உண்டு மகிழ்ந்த கௌசானல் அடிகளார், மக்களை பாராட்டி, ஆங்காங்கே பணிபுரிந்த கத்தோலிக்க அருட்பணியாளர்களுக்கு சமையல் பணியாளராக பலரையும் அனுப்பி வைத்ததால், பலர் படிக்கவும் வாழ்வு பெறவும் வழி செய்து கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

பிரெஞ்சு நாட்டவரான அருட்பணி. அம்புரோஸ் மொன்சாகா 1868 ஆம் ஆண்டு இவ்வட்டாரம் வந்து இறையன்புப் பணியை சிறப்புற செய்துள்ளார். அவரது அரும்பணியால் இப்பகுதி மக்கள் இறையன்பை உணர்ந்ததோடு, இனிய நல்வாழ்வையும் பெற்றனர்.

ஆலயம்:

1870 ஆம் ஆண்டு கொம்பாடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் கட்டப்பட்டது.

24.06.1918 அன்று அருட்பணி. அம்புரோஸ் மொன்சாகா அடிகளார் இறைவனடி சேர்ந்தார். அவரது கல்லறை கொம்பாடியில் உள்ளது.

1939 ஆம் ஆண்டு கொம்பாடி தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. மரிய அடைக்கலம் (1939-41) அவர்கள் பணிப் பொறுப்பேற்று வழிநடத்தினார். இவரது பணிக்காலத்தில் பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது.

அருட்பணி. அலாய்சியஸ் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் உள்ள கெபி கட்டப்பட்டது.

அருட்பணி. ரெய்னால்டு மிசியர் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு, 21.03.1991 அன்று மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. எஸ். பிரான்சிஸ் அடிகளார் பணிக்காலத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 08.05.2003 அன்று திறந்து வைக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு நிலம் வாங்கப்பட்டு, துறவற சபை சகோதரிகள் தங்கி பணியாற்ற பணிமடம் கட்டப் பட்டது.

அருட்பணி. சகாய லூட்ரின் பணிக்காலத்தில் ஆலய வெளிப்புற சுவர் பழுது பார்க்கப்பட்டு, ஆலயத்தினுள் தரைக்கு மார்பனேட் கற்கள் பதிக்கப்பட்டன. 

08.05.2011 அன்று மக்களின் ஒத்துழைப்புடன் புதிய தேர் உருவாக்கப்பட்டது.

29.04.2014 அன்று புதிய கொடிமரமானது  ஆலயத்தின் முன்புறம் உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு பேரருட்திரு.‌ ஜெரால்டு குரூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு ஆலய (தனிப்பங்கு) பவளவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கொம்பாடி பங்கின் கிளைப்பங்குகளான அந்தோணியார் புரம், ஞானப்பிரகாசியார்புரம், புதுக்கோட்டை, மில்லர்புரம், புதியம்புத்தூர் ஆகியன பின்னர் தனிப்பங்குகளாக உயர்வு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கில் உள்ள கெபிகள்:

தூய லூர்து மாதா கெபி

தூய ஆரோக்கிய மாதா கெபி

பள்ளிக்கூடங்கள்:

1. புனித மிக்கேல் தொடக்கப்பள்ளி, கொம்பாடி

2. ஆர்.சி தொடக்கப்பள்ளி, மணியாச்சி

Succession of parish priests:

1. Rev.Fr. Adikalam (1939 -1941)

2. Rev.Fr. Maria Joseph (1941 –1944)

3. Rev.F. Maria Manikam (1944 –1954)

4. Rev.Fr. Periyanayagam (1954 –1957)

5. Rev.Fr. Aloysius Fdo (1957 –1967)

6. Rev.Fr. Mariadas (1967)

7. Rev.Fr. Karunakaran Gomez (1967 –1970)

8. Rev.Fr. Irudayaraj Fdo V. (1970 –1973)

9. Rev.Fr. Joseph Rathinaraj Fdo (1973 –1975)

10. Rev.Fr. Raja Bose (1975 - 1978)

11. Rev.Fr. Victor T. (1978 - 1982)

12. Rev.Fr. Antony Robert (1982 -1986)

13. Rev.Fr. Sengolemany (1986 -1987)

14. Rev.Fr. Rainald Missier (1987 - 1992)

15. Rev.Fr. Segaran (1992 - 1993)

16. Rev.Fr. Victor Salomon (1993 –1998)

17. Rev.Fr. Leo Jeyaseelan (1998 –2001)

18. Rev.Fr. Francis (2001–2006)

19. Rev.Fr. Sahaya Lourdin (2006 –2009)

20. Rev.Fr. Maria Antony Savarimuthu (2009– 2014)

21. Rev.Fr. Joseph Ladislaus (2014 -2019)

22. Rev.Fr. Lazar (2019 ...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. லாசர் அவர்கள் மற்றும் மண்ணின் மைந்தர் அருட்பணி. மரியதாஸ் லிப்டன் (கொ.தளவாய்புரம்)