மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை : பங்குதளம்
கிளைப்பங்குகள்:
1. கிறிஸ்து அரசர் ஆலயம், கீழபனைக்குளம்
2. புனித அந்தோனியார் ஆலயம், மடத்துவிளை
3. புனித சூசையப்பர் ஆலயம், மேலபனைக்குளம்
4. புனித தோமையார் ஆலயம், தோமையார்புரம் (பேய்குளம்)
5. புனித அந்தோனியார் ஆலயம், பிள்ளையார்குளம்
6. புனித ஞானப்பிரகாசியார் ஆலயம், பிரண்டார்குளம்
7. புனித அந்தோனியார் ஆலயம், செங்குளம்
8. முனைஞ்சிப்பட்டி
பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன்
குடும்பங்கள்: 250
அன்பியங்கள்: 7
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி
நாள்தோறும் திருப்பலி காலை 06:15 மணி
வியாழன் மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி
திருவிழா: நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்பணி. தாமஸ் ராயன், D. S, அமெரிக்கா (தோமையார்புரம்)
2. அருள்பணி. தே. அற்புத சேவியர், தூத்துக்குடி மறைமாவட்டம் (சி.சவேரியார்புரம்)
3. அருட்சகோதரி. தே. அந்தோணி அம்மாள் (ஆன்றோ பியூலா), CTC (சி.சவேரியார்புரம்)
4. அருட்சகோதரி. ச. ஆரோக்கியம்மாள், Cluney (தோமையார்புரம்)
5. அருட்சகோதரி. அ. வென்சிலா, CTC, (சி.சவேரியார்புரம்)
6. அருட்சகோதரி. தே. ஜெனட்மேரி, DSMP, (தோமையார்புரம்)
7. அருட்சகோதரி. S. ஜோஃப்பி, CTC (சி.சவேரியார்புரம்)
8. அருட்சகோதரி. A. செல்வ சந்தியா, FIHM, (சி.சவேரியார்புரம்)
9. அருட்சகோதரி. P. பிரின்சி, FIHM (தோமையார்புரம்)
வழித்தடம் : திருநெல்வேலி -சாத்தான்குளம் செல்லும் வழியில் சி.சவேரியார்புரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
பேய்குளம் -சி.சவேரியார்புரம் 3கி.மீ
Location map: St. Xavier's Church, C.Saveriyarpuram
https://maps.app.goo.gl/A3zgvJP8SAXvMLNh7
வரலாறு:
1861 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தனிப்பங்காக உருவானபோதே, சோமநாதபேரி, சி.சவேரியார்புரம், பேய்குளம் ஆகியவற்றின் சுற்றுவட்டக் கிராமங்கள் அனைத்தும் சாத்தான்குளம் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தன. எனவே சி.சவேரியார்புரம் 150 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியம் மிக்க பங்காக விளங்குகிறது என்பது பெருமைக்குரியது.
சோமநாதபேரி:
01.01.1924 அன்று சாத்தான்குளம் பங்கிலிருந்து பிரிந்து சோமநாதபேரி தனிப்பங்காக உருவானபோது, சி.சவேரியார்புரம் ஆலயமானது சோமநாதபேரியின் கிளைப்பங்காக ஆனது. முதல் பங்குத்தந்தை அருட்பணி. X. கபிரியேல் அடிகள் வேதபோதக பணியில் முன்னின்று உழைத்து, பல ஊர்களை திருமறையில் சேர்த்ததாக கூறப்படுகிறது.
சிந்தாமணி:
1924-ம் ஆண்டு முதல் சோமநாதபேரி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த சிந்தாமணி, 1950 ஆம் ஆண்டு தனிப் பங்காக உருவானபோது, சி.சவேரியார்புரம் ஆலயமானது சிந்தாமணி பங்கின் கிளைப்பங்காக மாற்றம் பெற்றது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. D. ஞானப்பிரகாசம் அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்தினார்.
ஆலயம் கட்டப்பட்ட வரலாறு:
தொடக்க காலத்தில் இந்த ஊர் மக்கள் சவேரியார்புரத்திற்கும், பிரண்டார்குளத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள நிலப்பரப்பில், மக்கள் தங்களது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தனர். திடீரென ஏற்பட்ட காலரா என்ற கொள்ளை நோயினால் பலபேர் இறந்து போயினர். எஞ்சியிருந்த மக்கள் அந்த இடத்தை விட்டு விட்டு தற்போது வாழ்ந்து வருகிற இடத்தில் குடியேறினர். இருப்பினும் பக்கத்து ஊர்களில் காலராவின் தாக்கம் அதிகரிக்கவே, மக்கள் ஒருவித பய உணர்வுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஊரில் உள்ள நிலக்கிழார் ஒருவர் தமக்கு சொந்தமான இடத்தில் ஓலைக் குடிசையினால் ஆன ஆலயம் அமைத்து, அதில் இரவு நேரத்தில் ஜெபம் செய்து வந்தார். மக்களையும் அந்த ஜெபத்தில் பங்கேற்கச் செய்தார். இதனால் மக்கள் நோய்கள் அண்டாமல் அச்சமின்றி நலமுடன் வாழத் தொடங்கினர்.
காலப்போக்கில் ஆலயத்திற்கென்று ஒதுக்கப்பட்ட அந்த இடமானது மறைமாவட்டத்திற்கு எழுதிக் கொடுக்கப்பட்ட நிலையில், 1920 ஆம் ஆண்டு புனித சவேரியாரை பாதுகாவலராகக் கொண்டு ஓட்டு கட்டிடத்தால் ஆன சிற்றாலயம் கட்டப்பட்டது. அவ்வேளையில் இங்கு 700 கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. அக்காலத்தில் இங்கு சாலை வசதி கிடையாது. ஆகவே திருவிழா, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு பங்குத்தந்தையர்களை வில்வண்டியில் அழைத்து வருவது வழக்கமாக இருந்தது. எனவே திருப்பலி என்பது எப்போதாவது ஒருமுறை நடைபெறுகின்ற ஒரு நிகழ்வாக இருந்தது.
தொடர்ந்து ஆலய வழிபாடுகளில் மக்களின் பங்கேற்பு அதிகமானதால் ஆலயத்தில் இடவசதி பற்றாக்குறை ஏற்பட்டது. ஆகவே 1985 ஆம் ஆண்டில் அருள்பணி. தனிஸ்லாஸ் பர்னாந்து அவர்களால் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டு, தரையில் மொசைக் கற்கள் பதிப்பிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டது.
சி.சவேரியார்புரம் தனிப்பங்கு:
சிந்தாமணி பங்கின் கிளைப்பங்காக இருந்த போது திருமண உத்தரவு வாங்கவும், திருமுழுக்கு சான்றிதழ் பெறவும், பல தேவைகளுக்காக பங்குத்தந்தையை சந்திக்கவும் இங்கிருந்து மிதிவண்டியிலோ அல்லது கால்நடையாகவோ தான் இறைமக்கள் சென்று வந்தனர். இந்த சிரமத்தை மாற்ற, அப்போது சிந்தாமணி பங்குத்தந்தையாக பணிபுரிந்து வந்த அருள்பணி. J. எட்வர்ட் அவர்களின் ஒத்துழைப்புடன் தனிப்பங்காவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பயனாக அப்போதைய ஆயர் மேதகு S. T. அமலநாதர் அவர்களால் 21.11.1999 அன்று சி.சவேரியார்புரம் பங்கு உருவாக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அப்போது சிந்தாமணி பங்குத்தந்தையாக பணிபுரிந்து வந்த அருள்பணி. J. எட்வர்ட் அவர்களே பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய ஆலயம்:
பழைய ஓட்டுக் கட்டிடத்தால் ஆன சிற்றாலயம் அரை நூற்றாண்டைக் கடந்த நிலையில் சேதமடைந்து, மழைநீர் கசிவு ஏற்பட்டது. ஆகவே புதிய ஆலயத் தேவையை கருத்தில் கொண்டு பங்குதந்தை அருள்பணி. சகாய ஜஸ்டின் அவர்களது பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 02.12.2013 அன்று மேதகு ஆயர் இவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2024-ம் ஆண்டு பங்கின் வெள்ளிவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:
பாலர்சபை
நற்கருணை வீரர் சபை
சவேரியார் இளைஞர் சபை
அமலோற்பவ மாதா இளம்பெண்கள் சபை
திருக்குடும்ப சபை
சூசையப்பர் சபை
கல்வி நிறுவனங்கள்:
ஆர்.சி நடுநிலைப்பள்ளி, சி.சவேரியார்புரம்
புனித அலாய்சியஸ் தொடக்கப்பள்ளி, பிரண்டார்குளம்
பங்கில் உள்ள துறவற இல்லம்:
புனித பிரான்சிஸ்குவின் தூய இதய மரியன்னை சபை (FIHM)
பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர் பட்டியல்:
1. அருள்பணி. எட்வர்ட் (1999-2005)
2. அருள்பணி. ஆரோக்கியதாஸ் (2005-2010)
3. அருள்பணி. சகாய ஜஸ்டின் (2010-2015)
4. அருள்பணி. பீட்டர் பாஸ்டியன் (2015-2020)
5. அருள்பணி. ரெமிஜியுஸ் S. லியோன் (2020…..)
தகவல்கள்: பங்குதந்தை அருள்பணி. ரெமிஜியுஸ் ச. லியோன் அவர்கள்.
ஆலய வரலாறு: பங்கின் வெள்ளி விழா மலர் 2024.
புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர் திரு. மரிய அந்தோணி அவர்கள்.