இறைபராமரிப்பு ஆலயம்
இடம் : இட்டகவேலி, குலசேகரம்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : புத்தன்கடை
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய அந்தோணியார் ஆலயம், நாகக்கோடு
பங்குத்தந்தை : அருட்பணி. சுதர்சன்
திருத்தொண்டர் டேனியல் ஆபிரகாம்.
குடும்பங்கள் : 60
அன்பியங்கள் : 3
ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணிக்கு ஜெபமாலை, காலை 06.00 மணிக்கு திருப்பலி.
புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, மாலை 06.30 மணிக்கு நவநாள் திருப்பலி.
திருவிழா : மே மாதம் முதல் வாரத்தில் ஐந்து நாட்கள்.
வழித்தடம் : திருவட்டார் -குலசேகரம் சாலையில் புலியிறங்கி -யிலிருந்து இடது பக்கமாக SMR school சாலையில் அரை கி.மீ சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.
பங்கு வரலாறு :
இட்டகவேலி இறைசமூகம் 60 கத்தோலிக்க குடும்பங்களை கொண்ட ஒரு சிறிய மறைபரப்புத் தளம். 71 ஆண்டுகளுக்கு முன்னர் அருட்பணி. அந்தோனிமுத்து அவர்கள், குலசேகரம் பங்குத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், எமின் தாயார் எனப்படும் வெளிநாட்டு அருட்சகோதரியானவர், இந்த ஊரில் உள்ள மக்களுக்கு தம்மால் இயன்ற பொருள் உதவியும், மன ஊக்கமும் கொடுத்து மக்களை ஒற்றுமையாக வாழ வழி வகுத்தார். அவருடைய முயற்சியாலும் அருட்பணி. அந்தோனிமுத்து அவர்களின் முயற்சியாலும் 04.07.1976 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதுவரை ஒரு சிறு ஓலைக் குடிசையே ஆலயமாக இருந்து வந்தது.
ஜெர்மன் நாட்டவரின் நன்கொடையாலும் பங்கு மக்களின் அயராத உழைப்பாலும் 14.06.1978 அன்று ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இதன் பின் குலசேகரம் பங்கின் கிளைப் பங்காக இறை பராமரிப்பு ஆலயம் (இட்கவேலி) செயல்பட்டது.
அப்போதைய காலத்தில் குலசேகரம் பங்கின் அருட்சகோதரி தெரசம்மாள் அவர்களும் மற்றும் குலசேகரம் பங்கின் ஓரிரு மக்களும் இணைந்து வந்து இறைபராமரிப்பு ஆலயத்தில் ஜெபக்குழுக்களை நடத்தி, மக்களை திருப்பலியிலும் மற்றும் பிற இயக்கங்களிலும் செயல்படத் தூண்டினர். பின்பு 1995 – ம் ஆண்டு குலசேகரம் பங்கில் இருந்து பிரிந்து நாகக்கோடு பங்கின் கிளைப் பங்காக அருட்பணி. ஆண்ட்ரூ செல்வராஜ் அவர்களை முதல் பங்கு தந்தையாக கொண்டு செயல்பட தொடங்கியது.
அருட்பணி. தேவசகாயம் அவர்கள் பங்குப்பணியாளராக இருக்கும் கால கட்டத்தில் ஆலயத்திற்கு பின்புறம் 20 சென்ட் நிலம் வாங்கப்பட்டது.
அதன்பின் அருட்பணி. மார்ட்டின் அவர்கள் பங்குப் பணியாளராக இருக்கும் போது ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு 25-ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் வெள்ளிவிழா நினைவு கலையரங்கம் கட்டி எழுப்பட்டது. அப்போது தான் ஆலய பக்க சுவரும் கட்டி எழுப்பப்பட்டது.
தொடர்ந்து அருட்பணி. எக்கர்மன்ஸ் மைக்கிள் அவர்களது பணிக்காலத்தில் அருட்பணியாளர் இல்லம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
தற்போது மக்களுடைய கூட்டுமுயற்சியாலும் அயராத உழைப்பாலும் நிறைவான நன்கொடையாலும் புதிய ஆலய கட்டுமானப் பணியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
"தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்: எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்." -எசாயா 66:13
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. சுதர்சன் அவர்கள்.