423 புனித அந்தோணியார் அருட்தலம், பள்ளிபாளையம்


புனித அந்தோணியார் அருட்தலம்.

இடம் : பள்ளிபாளையம்

மாவட்டம் : நாமக்கல்
மறை மாவட்டம் : சேலம்
மறை வட்டம் : திருச்செங்கோடு

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித இஞ்ஞாசியார் ஆலயம், ஈகாட்டூர்
2. புனித மரியன்னை ஆலயம், மாதாபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி. ஆனந்தராஜ்

குடும்பங்கள் : 198
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

திங்கள், புதன், வியாழன் திருப்பலி : காலை 06.00 மணிக்கு.

செவ்வாய் காலை 11.00 மணிக்கு நவநாள், செபமாலை, திருப்பலி , நற்கருணை ஆசீர். மாலை 06.30 மணிக்கு செபமாலை, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறும்.

வெள்ளி : மாலை 06.30 மணிக்கு இறை இரக்கத்தின் நவநாள் திருப்பலி.

பிரதி மாதம் முதல் செவ்வாய் காலை 10.30 மணிக்கு புனித அந்தோணியார் தேர்பவனி. தொடர்ந்து காலை 11.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள், ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெறும்.

திருவிழா : மே மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை.

வழித்தடம் : சேலம் -திருச்செங்கோடு வழியாக ஈரோடு செல்லும் சாலையில் பள்ளிபாளையம் புனித அந்தோணியார் அருட்தலம் அமைந்துள்ளது.

பேருந்துகள் : கிருஷ்ணா, பூபாலன் SKT, SMBS, RMBS, MRN, SNB, MSR

வரலாறு :

பள்ளிபாளையம் ஊரில் புதிய ஆலயமானது கட்டப்பட்டு 30.05.2004 அன்று அர்ச்சிக்கப் பட்டது. அர்ச்சிப்பு நாளிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை SPB காலனி பங்கின் கிளைப் பங்காக இருந்தது.

பின்னர் பள்ளிபாளையம், மாதாபுரம், தொட்டிப்பாளையம், ஆலம்பாளையம், அலமேடு, காவேரி R. S, வசந்த நகர், ஈகாட்டூர், கலியனூர், ஆவத்திப்பாளையம், ஒட்டமெத்தை, அக்ரஹாரம், வெடியரசம்பாளையம் மற்றும் வெப்படை ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 01.07.2008 அன்று புதிய பங்காக பள்ளிப்பாளையம் உதயமானது. முதல் பங்குத்தந்தை அருட்பணி அருள் பிரான்சிஸ் சேவியர்.

தொடர்ந்து அருட்பணி. சகாயராஜ் அவர்கள் பொறுப்பேற்று வழி நடத்தினார்கள்.

2018 ஆம் ஆண்டு முதல் அருட்பணி. ஆனந்தராஜ் அவர்கள் பொறுப்பேற்று ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

புனித அந்தோணியாரின் வழியாக அற்புதங்கள் நாள்தோறும் நடந்து வருவதால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து ஜெபித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

தனிச்சிறப்பு : நம்பிக்கையின் பாதையில் 500 -வது வார நவநாளைக் கடந்து செல்கிறது பாதுகாக்கும் பள்ளிபாளையம் இறைசமூகம்.