591 புனித யாகப்பர் ஆலயம், மணப்பாடு


புனித யாகப்பர் ஆலயம் 

இடம் : மணப்பாடு 

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : தூத்துக்குடி 

மறைவட்டம் : மணப்பாடு 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் : 

1. திருச்சிலுவை திருத்தலம், மணப்பாடு 

2. புனித அந்தோனியார் ஆலயம், புதுக்குடியேற்று

3. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், சாமியார்குடியேற்று

4. பரிசுத்த ஆவி ஆலயம், அமராபுரம் 

5. புனித அந்தோனியார் சிற்றாலயம், மணப்பாடு. 

பங்குத்தந்தை : அருள்பணி. முனைவர் லெரின் டிரோஸ் 

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. திலகராஜ் 

குடும்பங்கள் : 750

ஞாயிறு காலை 04.30 மணிக்கு முதல் திருப்பலி. காலை 06.30 மணிக்கு இரண்டாம் திருப்பலி. 

நாள்தோறும் திருப்பலி : காலை 05.45 மணிக்கு. 

திருவிழா : ஜூலை மாதத்தில் பத்து நாட்கள். 

பங்கில் உள்ள கெபிகள் மற்றும் குருசடி:

1. லூர்து மாதா கெபி

2. கிறிஸ்து ராஜா கெபி

3. வேளாங்கண்ணி மாதா கெபி

4. புனித ஜார்ஜியார் கெபி

5. புனித செபஸ்தியார் கெபி 

6. புனித மிக்கேல் அதிதூதர் கெபி,  ஃப்ளவர் தெரு

7. புனித மிக்கேல் அதிதூதர் கெபி, ஆயத்தெரு 

8. திருச்சிலுவை குருசடி.

மணப்பாடு மண்ணின் இறையழைத்தல்கள் :

அருள்பணியாளர்கள்:

1. அருள்திரு. லாரன்ஸ் சேவியர் பர்னாந்து 

2. அருள்திரு. J. L. மிராண்டா, SJ 

3. அருள்திரு. தாமஸ் பர்னனாந்து, SJ

4. அருள்திரு. கிறிஸ்டியன் பர்னாந்து

5. அருள்திரு. நேவிஸ் ரொட்ரிகோ

6. அருள்திரு. பீற்றர் பவுல் சில்வேரா 

7. அருள்திரு. எம்மானுவேல் டயாஸ் 

8. அருள்திரு. பாஸ்கல், OFM

9. அருள்திரு. தொமினிக் டயாஸ், SJ 

10. அருள்திரு. ஜோசப் டயாஸ், SJ

11. அருள்திரு. வின்சென்ட் மிராண்டா, SJ

12. அருள்திரு. எபிசேயுஸ், OFM Cap

13. அருள்திரு. அன்ஸ்லெம் மிராண்டா, SJ

14. அருள்திரு. அப்போலின் மிராண்டா, SJ

15. அருள்திரு. ஜேக்கப் பர்னாண்டோ,  SJ

16. அருள்திரு. விற்றாலிஸ் டயாஸ், SJ

17. அருள்திரு. தீத்தூஸ் பர்னாந்து, SJ

18. அருள்திரு. ஸ்டீபன் கோமஸ் 

19. அருள்திரு. தியோபிலஸ் பர்னாந்து

20. அருள்திரு. ஜோதி பர்னாந்து 

21. அருள்திரு. ஸ்டீபன் பர்னாந்து

22. அருள்திரு. ஆண்ட்ரூ டிரோஸ் 

23. அருள்திரு. டெனிஸ் வாய்ஸ்

24. அருள்திரு. அலாசியுஸ் பர்னாந்து

25. அருள்திரு. S. M. சகாயம்

26. அருள்திரு. அமலன்

27. அருள்திரு. பெர்க்மான்ஸ்

28. அருள்திரு. ஜான் பர்னாந்து (தேலேசால் அதிபர்)

மண்ணின் அருள்சகோதரிகள் :

மரியின்ஊழியர் சபை

1. Sr. யூப்ரஸி மேரி 

2. Sr. அல்போன்சா லிகோரி மேரி 

3. Sr. பெர்க்மான்ஸ் மேரி 

4. Sr. ஷந்தால் அருள்மேரி

5. Sr. டெனிஸ் மேரி

6. Sr. ஞானப்பிரகாசம் மேரி 

7. Sr. கொன்ஸகா மேரி

8. Sr. இம்மாகுலேட் மேரி 

9. Sr. பெலிஸித்தால் மேரி 

10. Sr. ஜூலியானா மேரி

11. Sr. ஒடிலியா இருதயமேரி

12. Sr. பிரிப்னேரி மேரி

13. Sr. கசிலியா மேரி

14. Sr. ஜான்தார்க் மேரி 

15. Sr. பெனிற்றோ மேரி 

16. Sr. சலேத் மேரி 

17. Sr. தெயோதோரஸ் மேரி 

18. Sr. மெல்கியோர் மேரி

19. Sr. மெலனி மேரி 

20. Sr. பிளேஸ் பிலிப் மேரி 

21. Sr. அகர்பிட் மேரி

22. Sr. பிளாசியுஸ் மேரி

23. Sr. பிளேசில்லா மேரி 

24. Sr. உத்தரிய மேரி 

25. Sr. பொனிப்பாஸ் மேரி 

26. Sr. ஆஞ்சலிக்கா மேரி 

27. Sr. எஸ்தர் மேரி 

28. Sr. இன்பென்டா மேரி 

29. Sr. அப்போலின் மேரி 

30. Sr. தெரஸிறற்றா மேரி 

31. Sr. நொய்லின் மேரி

32. Sr. அனிற்றோ மேரி

33. Sr. எவாஞ்சலினா மேரி 

34. Sr. கொன்ஸாகா மேரி 

35. Sr. பிரிப்பினா மேரி 

36. Sr. பாத்திமா மேரி 

37. Sr. மார்ஜோரி மேரி

38. Sr. ஜெரால்டின் மேரி 

39. Sr. ஸ்விட்பெட்டா மேரி

40. Sr. லூயிஸா மேரி

41. Sr. லுக்ரேசியா மேரி

புனித சிலுவை சகோதரிகள்:

42. Sr. சேவியர் ரொட்ரிகோ

43. Sr. லூயிஸா ரொட்ரிகோ

44. Sr. எட்விஜ் லியேபன் 

45. Sr. ஒடிலியா பர்னாந்து

46. Sr. இன்பென்ட் பர்னாந்து

ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை

47. Sr. ஒடிலியா 

48. Sr. பெர்க்மான்ஸ் மேரி 

49. Sr. பியாட்ரீசியா மேரி 

50. Sr. ஆஞ்சலிக்கா மேரி

51. Sr. ஜின் தெரஸ் 

52. Sr. ப்ரான்கோயிஸ்

53. Sr. ரோஸ்லின் மேரி

54. Sr. எலிசபெத் ஜெரால்டின்

மரியாயின் பிரான்சிஸ்குவின் மறைபரப்பு சபை:

55. Sr. ரோஸ் பர்னாந்து

56. Sr. ஜெஸ்பர்க் ரொட்ரிகோ 

அப்போஸ்தலிக்க கார்மெல் சபை:

57. Sr. முரீனா 

கார்மெல் சபை:

58. Sr. கான்ஸ்டன்ஸ் 

59. Sr. லெத்தீசியா மேரி

புனித அடைக்கல மாதா சபை :

60. Sr. அம்புரோஸ் மேரி

61. Sr. பெப்ரோனியா மேரி

62. Sr. ஜெம்மா மேரி

63. Sr. ரோஸ்லின் மேரி

64. Sr. வென்சஸ்லாஸ் மேரி

65. Sr. பப்பிஸ்டா மேரி

66. Sr. சில்வெஸ்டர் மேரி

67. Sr. ஒல்கா மேரி

68. Sr. ரோஸ்மேரி 

69. Sr. பெற்றோனிலா மேரி 

70. Sr. தெரஸ் மேரி 

71. Sr. ஜெனிமேரி 

72. Sr. தெயோதோஸ் மேரி

73. Sr. எட்விஜ் கர்வாலோ 

74. Sr. பிளனா கர்வாலோ

75. Sr. கிறிஸ்டி கர்வாலோ

புனித சூசையப்பர் (லயன்ஸ்) சபை:

76. Sr. மைக்கிள் மிரான்டா

பிற சபைகள் (இலங்கை) :

77. Sr. பெல்லா மொறாய்ஸ்

78. Sr. நேவிஸ் மொறாய்ஸ்

79. Sr. வின்சென்ட் தே பவுல் 

80. Sr. நேவிஸ் ரொட்ரிகோ

81. Sr. ஜோன்டி ஆர்க் 

82. Sr. கருணை பர்னாந்து 

83. Sr. அற்புதமேரி

84. Sr. இருதயமேரி

85. Sr. பேட்டியம்மாள் மேரி

86. Sr. தாயம்மாள் 

87. Sr. ஜெயசீலி மேரி 

88. Sr. பிலோமின் மேரி.

Location map : 

St.James Church 

Manapad, Tamil Nadu 628209

https://g.co/kgs/rgbu3n

வரலாறு :

இனிதான கடல் அலையையும், இதம் தரும் கடல் காற்றையும், கற்றறிந்த அறிஞர் பெருமக்களையும் தன்னகத்தே கொண்ட தனிச்சிறந்த கடற்கரை ஊர் தான் மணப்பாடு. தென்கடலோரம் அமைந்த இத்திருநகர் திருமறைப் பெரியோர்களான புனித சவேரியார், தேம்பாவணி காவியம் தந்த வீரமாமுனிவர் ஆகியோருக்கு உறைவிடம் தந்த புண்ணிய பூமி தான் மணப்பாடு. 

மணப்பாட்டில் முதல் முதலாக புனித சவேரியார் கி.பி 1544 -ல் புனித யாகப்பருக்கு கூரை ஆலயம் கட்டினார். ஆனால் வெகுகாலமாக இந்த ஆலயம் நிலைத்து நிற்கவில்லை. காரணம்  திருவிதாங்கூர் மன்னரின் படைகளும், நாயக்கரின் படைகளும் நெருப்பினால் அழித்து விட்டதாக வரலாற்று செய்தி கூறுகிறது. 

புனித சவேரியாருக்கு பின்னர் பணிபுரிந்த அருட்தந்தை. ஹென்றி ஹென்றிக்ஸ் அவர்கள் 1558 ஆம் ஆண்டவாக்கில் ஆலயம் கட்டினார். 

பின்னர் மணப்பாட்டில் பரலோக மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இருந்ததாக இயேசு சபை அறிக்கை (Schurhammer ||| 342) கூறுகிறது. ஆனால் 1695 ஆம் ஆண்டில் இவ்வாலயம் டச்சுக்காரர்களால் வாணிபக் கிடங்காக மாற்றப்பட்டது. இதனால் 137 ஆண்டுகள் மணப்பாட்டின் பங்கு ஆலயமாக இருந்த ஆலயம் அழிந்து போனது. 

இன்றைய புனித யாகப்பர் ஆலயம் :

மணப்பாடு பரலோக மாதா பங்கு ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இடம் மறுக்கப்பட்டதால் புனித யாகப்பர் பெயரில் ஒரு சிற்றாலயம் அந்த மக்களுக்காக 1600 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக (Besse -398) அறிக்கை கூறுகிறது. 

மணப்பாட்டின் இரண்டாவது ஆலயமான பரலோக மாதா ஆலயம் டச்சுக்காரர்களால் வாணிபக் கிடங்காக மாற்றப்பட்ட பின்னர், அங்கிருந்த புனித யாகப்பர் சிற்றாலயமே 1708 ஆம் ஆண்டு பங்கு ஆலயமாக விரிவாக்கப்பட்டு, பரலோக அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டதாக இயேசு சபை அறிக்கை கூறுகிறது. 

விரிவாக்கம் செய்யப்பட்ட பங்கு ஆலயம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட, இயேசு சபை அருள்பணியாளர் அந்தோனி துவார்த்து அடிகளாரால் 1745 ம் ஆண்டு பணிகள் துவக்கப் பட்டு நிறைவு பெற்றதாகவும், இதுவே புனித யாகப்பர் ஆலயம் எனவும் ஆவணங்கள் கூறுகின்றன. 

1855 முதல் 1906 வரை புனித யாகப்பர் ஆலய பங்குத்தந்தையாக இருந்த இயேசு சபையின் லூயிஸ் லாசூஸ் அடிகளார், காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு அன்றைய பங்கு ஆலயத்தை விரிவாக்கம் செய்ய ஆய்வுகளும், கலந்தாலோசனைகளையும் மேற்கொண்டார். 

1920 ஜூன் மாதம் 30-ம் தேதி அப்போதைய பங்குத்தந்தை இயேசு சபையைச் சேர்ந்த அருட்தந்தை . பிளாசியூஸ் டெலிங்கர் அடிகளாரால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. 

பணிகள் நிறைவு பெற்று 12.09.1929 அன்று மேதகு ஆயர் அலெக்ஸாண்டர் சூளப்பரம்பில் (கோட்டயம்), மேதகு ஆயர் அகுஸ்தீன் பெசாந்தியா SJ (திருச்சி), மேதகு ஆயர் திபூர்சியஸ் ரோச் SJ (தூத்துக்குடி), மேதகு ஆயர் பீட் பெக்மியர் OSM (கண்டி, இலங்கை), மேதகு ஆயர் கொஸ்டன் ரொபீஷியேஷ் SJ (திரிகோணமலை, இலங்கை) ஆகிய ஐந்து ஆயர்களால் அர்ச்சித்து திருநிலைப் படுத்தப்பட்டது. 

ஆலயத்தின் அமைப்பு :

சிலுவை வடிவிலான ஆலயத்தின் நெடுங்கரம் 176 1/2 அடி. குறுக்குகரம் 108 அடி. கரங்களின் அகலம் 36 அடி. சுவர்களின் கனம் 5 அடி (ஆக சுவர்களின் கனத்தால் அகலம் 36+5+5=46 அடி). இருபக்க கோபுரங்களின் உயரம் 130 அடி. முகப்பின் நடுஉயரம் 75 அடி. பலிபீட விதானம் (Dome) உள்ளே 90 அடியும், வெளியே 110 அடியும் உயர்ந்துள்ளது. ஆலயத்தின் கதவுகள் 12, ஜன்னல்கள் 12, 6அடி குறுக்களவுள்ள ரோஜாக்கள் 35, 20 அடி உயரமும் 12 அடி அகலமும் கொண்ட பக்கத்துப் பீடங்கள் 4 உள்ளன. 

பங்கின் பொன்விழா 1979 ஆம் ஆண்டு கொண்டாடப் பட்டது. 

பவளவிழா 2004 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது. 

கல்லூரி :

கி.பி 1695 அல்லது 1699 ல் இயேசு சபையின் "பெரிய கல்லூரி" (Coligium Maximum) நிறுவப்பட்டது. 

பங்கின் கல்விக் கூடங்கள் :

1. கி.பி 1941 ஆம் ஆண்டில் அருள்பணி. சூலப்பரம்பில் அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்டு ஒரு செகன்டரி ஆங்கிலப்பள்ளி துவக்கப்பட்டது. அருள்பணி. திருக்குடும்பதாசன் தல்மெய்தா அவர்களால் 1942 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியானது. 

2. புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி :

அருள்பணி. திருக்குடும்பதாசன் தல்மேய்தா அவர்களால் 1944 ல் இப்பள்ளி துவக்கப் பட்டது. முதல் தலைமையாசிரியை அருள்சகோதரி. ஹில்டா மேரி ஆவார். 

3. புனித வளன் தொடக்கப்பள்ளி:

புனித வியாகுல மாதா சபை கன்னியர்களால் 1886 ஆம் ஆண்டு புனித வளன் தொடக்கப்பள்ளி உதயமானது. 1909 ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு அரசு அங்கீகாரம் கிடைத்தது. 

4. நல்லாயன் தொடக்கப்பள்ளி, அமராபுரம் :

பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி பெறவேண்டும் என்பதற்காக  அருட்தந்தை. ஜோசப் மஸ்கிரனாஸ் அவர்களால் 1986 ஆம் ஆண்டு இப்பள்ளி துவக்கப் பட்டது. 

புனித வியாகுல அன்னை அருட்சகோதரிகள் இல்லம் (Servite convent) : 

இச்சபை அருட்சகோதரிகள் கல்விப் பணியிலும், ஆலய வழிபாட்டிற்கும் உதவியாக இருந்து வருகின்றனர்.  

விடுதிகள்:

1. புனித வளன் மாணவர் உள்விடுதி (1943)

2. புனித வளன் மாணவியர் உள்விடுதி (1959)

பங்கின் அன்பு மற்றும் சமூக நிறுவனங்கள்:

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை ஏழைச் சிறார் இல்லம் (1959)

2. மணவை நூல் நிலையம். 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. ஐந்து திருக்காய கொம்பீரியர் சபை (1725)

2. அமலோற்பவ மாதா சபை (1900)

3. திருக்குடும்ப சபை (1904)

4. பாலர் சபை (1941)

5. நற்கருணை வீரர் சபை (1941)

6. ஜெப அப்போஸ்தலர் சபை (1941)

7. மரியாயின் சேனை (1941)

8. புனித வின்சென்ட் தே பவுல் சபை (1975)

9. கோல்பின் இயக்கம் (1989)

10. மறைக்கல்வி. 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

கி.பி 1791 முதல் 1812 வரை 12 இயேசு சபை குருக்கள். 

முதலில் பணியாற்றியவர் அருள்திரு. மெனசஸ், SJ 

இறுதியாக பணியாற்றியவர் அருள்பணி. ஜோக்கிம் மனுவேல் கொரைரா, SJ

இயேசு சபையினர் மீண்டும் வந்தபின் :

கி.பி 1838 முதல் 1922 வரை பணியாற்றியவர்கள் 22 இயேசு சபை குருக்கள் :

முதலில் பணியாற்றியவர் அருள்திரு. அலெக்ஸாண்டர் மார்ட்டின், SJ 

அருள்திரு. லாசூஸ், SJ (1886-1906)

அருள்திரு. ஜான்ஜிட், SJ (1906-1909)

அருள்திரு. அந்தோனி தியரிடிக், SJ (1909-1913)

அருள்திரு. பிளாசியுஸ் டெலிங்கர், SJ (1913-1922)

தூத்துக்குடி மறைமாவட்டம் உருவான பின்னர் :

1. அருள்திரு. கஸ்பார் ரோச் (1923-25)

2. அருள்திரு. A.M.J. மரிய சூசைநாதர் (1925-29)

3. அருள்திரு. அம்புரோஸ் மிஸியர் (1929-36)

4. அருள்திரு. அந்தோனி பர்னாந்து (1936-39)

5. அருள்திரு. பெனடிக்ட் பர்னாந்து (1939-42)

6. அருள்திரு. மத்தேயு பர்னாந்து (1942-44)

7. அருள்திரு. தாசன் தல்மெய்தா (1944-51)

8. அருள்திரு. சுவக்கீன் பர்னாந்து (1951-71)

9. அருள்திரு. சார்லஸ் பர்னாந்து (1971-72)

10. அருள்திரு. ஜோய் டிரோஸ் (1972-74)

11. அருள்திரு. பவுல் ராபின்ஸ்டன் (1974-79)

12. அருள்திரு. ஜான் சேவியர் (1979-82)

13. அருள்திரு. ஸ்டீபன் தாஸ் (1982-85)

14. அருள்திரு. ஜோசப் மஸ்கிரனாஸ் (1985-89)

15. அருள்திரு. S. மரியதாஸ் (1989-93)

16. அருள்திரு. செட்ரிக் பிரிஸ் (1993-94)

17. அருள்திரு. D. S. அல்போன்ஸ் (1994-99)

18. அருள்திரு. M. G. ஞானப்பிரகாசம் (1999-2003)

19. அருள்திரு. பென்சிகர் (2003 ஜூன் முதல் டிசம்பர் வரை பொறுப்பு) 

20. அருள்திரு. சேவியர் ஜார்ஜ் (2003-2008)

21. அருள்திரு. ஜெயஜோதி (2008)

22. அருள்திரு. தெயோபிலஸ் (2008-2013)

23. அருள்திரு. இருதயராஜ் (2013-2018)

24. அருள்திரு. முனைவர். மரிய ஜான் கோஸ்தா (2018-2019)

25. அருள்திரு. லெரின் டிரோஸ் (2019 முதல் தற்போது வரை)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. லெரின் டிரோஸ் அவர்களின் வழிகாட்டுதலில், பங்கு உறுப்பினர்.