384 புனித சூசையப்பர் ஆலயம், போத்தனூர்


புனித சூசையப்பர் ஆலயம்.

🌺இடம் : போத்தனூர்

🦋மாவட்டம் : கோவை
🦋மறை மாவட்டம் : கோவை
🦋மறை வட்டம் : கோவை

🏵நிலை : பங்குத்தளம்
🏵கிளைப்பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், குறிச்சி

💐பங்குத்தந்தை : அருட்பணி ஜோசப் டேவிட்
💐இணை பங்குத்தந்தை : அருட்பணி இம்மானுவேல் பீட்டர்

🌳குடும்பங்கள் : 1500
🍀அன்பியங்கள் : 54

🔥ஞாயிறு திருப்பலி : காலை 06.00, காலை 07.30, காலை 09.30 (ஆங்கிலம்), மாலை 05.30 மணி மற்றும்
காலை 07.30 மணிக்கு St. Joseph's school - இல் சிறார் திருப்பலி.

🔥நாள்தோறும் திருப்பலி : காலை 06.00 மணி மற்றும் மாலை 06.00 மணிக்கும்.

🔥திங்கள் : காலை 06.00 மணி திருப்பலி மட்டும்.

🔥மாதத்தின் கடைசி திங்கள் கல்லறைத் தோட்டத்தில் மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

🔥மாதத்தின் முதல் வெள்ளி பி. பகல் 03.00 மணிக்கு திருப்பலி, இறை இரக்க நவநாள்.

🎉திருவிழா : மே மாதத்தில் 3 வது வாரம். 9 நாட்கள் நவநாட்கள் 10 வது நாள் திருவிழா.

🍇மண்ணின் மைந்தர்கள் :

💐1. Fr. M. A. ஜார்ஜ் சகாயராஜ்

💐1. Sr. டெல்ஃபின் FSPM
💐2. Sr. I. அந்தோணி சகாயராணி FSPM
💐3. Sr. ஷீத்தல் CSST
💐4. Sr. சொர்னோலியா மெர்லின் செல்வி
💐5. Sr. மேரி லூசியா.

👉வழித்தடம் : போத்தனூர் இரயில் நிலையத்திற்கு அருகில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

🚌பேருந்துகள் : கோவை உக்கடம் - போத்தனூர்.

Location map : St. Joseph's Church
Podanur Main Rd, Church Rd, Podanur, Tamil Nadu 641023
0422 241 1249
https://g.co/kgs/aa28hU

வரலாறு :
*********
🍇துவக்க காலத்தில் தற்போது பங்குத்தந்தை இல்லமாக காணப்படும் அறைவீடு ஆலயமாக இருந்தது. பின்னர் அருட்தந்தை ராபின் சுவாமிகளால் புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டு, பேரருட்தந்தை பார்து (Msgr. Bardou) ஆண்டகையால் கி.பி 1902 ல் அர்ச்சிக்கப் பட்டது. கோவை மேற்றிராசன பங்குடன் இணைக்கப் பட்டு ஞாயிறு தோறும் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. நாளடைவில் இங்கு இரயில்வே தொழிற்சாலை, இரயில் நிலையம் மற்றும் பல அலுவலகங்களும் நிறுவப் பட்டதால் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே 1904 ம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

🍇கி.பி 1919 ல் ஆலயத்திற்கு அழகிய மணிக் கோபுரம் கட்டப்பட்டது. அதில் உள்ள ஆலயமணியை 1921 ல் மதிப்பிற்குரிய எட்வர்ட் பிரைன் குயின் (Edward Brian Quinn) அவர்கள் அன்பளிப்பாக வழங்கினார்.

💐பங்குத்தந்தையரும், ஆலய வளர்ச்சியும் :

🌺அருட்பணி A. லே ப்ரான்சுவா (1904 -1906) : தனிப்பங்காக போத்தனூர் உயர்த்தப்பட்ட போது முதல் பங்குத்தந்தையாக இருந்து சிறப்பாக பணியாற்றினார்.

🦋அருட்பணி C. பெத்திக் (1906- 1935) : இவர் போத்தனூர் பங்குத்தந்தையாக மட்டுமல்லாமல் மேட்டுப்பாளையம், சொரனூர் ஆகிய ஊர்களில் இருந்த இரயில்வே கிறிஸ்தவ தொழிலாளர்களை வழிநடத்தி வந்தார். 1919 ல் மணி கோபுரம் கட்டினார். ஆலயத்தை விரிவாக்கம் செய்தார். மேட்டுப்பாளையத்தில் புனித அந்தோணியார் ஆலயத்தை கட்டினார். கிறிஸ்து பிறப்பின் செய்தியை மக்களிடையே பரப்ப ஜாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் இணைத்து 'உலக இரட்சகர் சங்கீத சபா' -வை 1909 ல் ஏற்படுத்தி, சபாவிற்கு ஒரு கொடியையும் மந்திரித்து வழங்கினார். 29 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி போத்தனூரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

🏵அருட்பணி S. அம்புறோஸ் (1935-1950): பங்கு மக்களின் நலனுக்காக மூன்று வீடுகள் கட்டினார். 1943 ல் காணிக்கை மாதா கன்னியர் மடம் ஆரம்பிக்கப்பட்டு, தாய் சேய் நல மருத்துவ விடுதி நிறுவப்பட்டது. லூர்து மாதா கெபி கட்ட அடிக்கல் நாட்டினார். போத்தனூரின் கிளைப்பங்காக இருந்த மேட்டுப்பாளையம் 1947 ல் தனிப்பங்கானது.

🌸அருட்பணி S. மரியசூசை (190-1966): 1954 ல் தமிழ் பாடகற்குழு துவக்கப்பட்டது. லூர்து அன்னை கெபி கட்டி முடிக்கப்பட்டு 21-08-1960 அன்று மேதகு ஆயர் சவரிமுத்து ஆண்டகையால் அர்ச்சிக்கப் பட்டது. 1966 ல் பெங்களூரில் இருந்து வந்த உலக இரட்சகர் சபையின் சகோதரர் ஜான்சன் அந்தோனி அவர்களால் சகாய மாதா நவநாள் துவக்கப்பட்டது.

🦋1966 காலகட்டத்தில் அருட்பணி R. செல்வராஜ், அருட்பணி A. பிரான்சிஸ் ஜோசப், அருட்பணி C. S மதலைமுத்து ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர்.

🌹அருட்பணி A. சின்னசாமி (1966-1973): புனித சூசையப்பர் இளைஞர் இயக்கத்தை ஆரம்பித்தார். ஆலயத்தின் வலப்புறமும் இடப்புறமும் வாயிற்கதவுகளை அமைத்தார்.

🍎அருட்பணி K. P வின்சென்ட் (1973-1975) : ஆலய பலிபீடம் பழுது பார்க்கப்பட்டு அழகு படுத்தப்பட்டது. குடும்ப அட்டைகள் வழங்கப் பட்டு பங்கின் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது.

🍊அருட்பணி A. J வில்சன் (1975-1980) : பாடகற் குழுவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டார். புதிய இசைக் கருவிகளை வாங்கினார்.

🍇அருட்பணி A. ஆசீர்வாதம் (1980-1987) : ஆலயத்தில் அலங்கார மின்விளக்குகள், மின்விசிறிகள் அமைத்து அழகூட்டினார்.

🌷அருட்பணி M. குருசாமி (1987-1989) : மக்களிடையே இறை விசுவாசத்தை அதிகரிக்கும் பொருட்டு விவிலிய வகுப்புகளைத் துவங்கினார். மறைக்கல்வியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.

🌸அருட்பணி M. பயஸ் சவரிமுத்து (1989- 1993) : ஆலயத்தின் முன்புறம் மற்றும் பின்புறமும் மதிற்சுவர் கட்டினார். கல்லறைத் தோட்டத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டினார். கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தினார்.

🌺அருட்பணி M. தாமஸ் (1993-1997) : ஆலயம் பழுதடைந்த நிலையில் இருந்ததாலும், பங்கு மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் ஆலயத்தை விரிவாக்கம் செய்ய முயற்சிகள் மேற்கொண்டு அடிக்கல் போட்டு, பங்கு மக்களிடம் முதற்கட்டமாக நிதி சேகரித்தார்.

💐அருட்பணி C. S மதலைமுத்து (1997-2001) : ஜெபமாலையின் முக்கியத்துவத்தையும் அன்னை மரியாளின் மீது மக்களுக்கு விசுவாசத்தைமும் ஏற்படுத்தினார். புனித சூசையப்பர் நவநாள் துவங்கினார். இதனை அருட்சகோதரர் கிறிஸ்டோபர் ரோச் அவர்கள் உருவாக்கினார். அருட்பணி தாமஸ் அவர்கள் துவக்கிய ஆலய விரிவாக்கப் பணிகளை சிறப்பாக வழிநடத்தி, அழகிய ஆலயத்தை 20-12-2000 அன்று கட்டி முடித்தார்.
பிஷப் அம்புறோஸ் சமூகக்கூடம் கட்டினார்.
கிளைப்பங்கான குறிச்சியில் புனித அந்தோணியார் ஆலயத்தை புதுப் பொலிவுடன் மாற்றியமைத்தார்.
குழந்தை இயேசு மற்றும் ஆரோக்கிய அன்னை கெபிகளை கட்டினார்.
தையல் பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவினார். ஆலயத்தின் வலப்புறத்தில் கலைக்கூட மேடை ஒன்றை நிறுவினார். கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நிறைவேற்ற சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். இவ்வாறு பல்வேறு வகையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார்.

🌺அருட்பணி I. ஜார்ஜ் ரொசாரியோ ( 2001-2004 ) :
அன்பியங்களை சீரமைத்து ஆலய நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட உதவினார்.

🌸அருட்பணி கனகராஜ் (2004-2007)
🍇அருட்பணி பங்கிராஸ் (2007-2012)
🌸அருட்பணி ஜோசப் பெலிக்ஸ் (2012-2013)
🍇அருட்பணி புஷ்பநாதன் (2013-2015)
🌸அருட்பணி ஜோசப் டேவிட் (2015 முதல் தற்போது வரை..)

🕯போத்தனூர் ஆலய அமைப்புகள், சபைகள் :

🔥அன்பியங்கள் : நானே உலகின் ஒளி என்னும் கிறிஸ்துவின் வாக்கு உலக மக்களை வழிநடத்துவது போல இம்மக்களை வழிநடத்தும் வண்ணம் பல ஒளி கொண்ட அன்பியங்களாக ஏற்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாக அன்பியங்களின் பெயர்கள் : இதய தீபம், நேர்மை தீபம், நம்பிக்கை தீபம், ஆரோக்கிய தீபம், நட்பு தீபம், அறிவு தீபம், அமைதி தீபம்........ என 54 அன்பியங்களின் பெயர்களும் தீபம் என்ற பெயரில் உள்ளன.

🌷பங்குப் பேரவை:
🌷புனித வின்சென்ட் தே பவுல் சபை :
🌷மரியாயின் சேனை (ஆண்கள்) :
🌷மரியாயின் சேனை (பெண்கள்) :
🌷கத்தோலிக்க சங்கம் :
🌷இளைஞர் இயக்கம் :
🌷கோல்பிங் இயக்கம் :
🌷மறைக்கல்வி ஆசிரியர் குழு :
🌷அன்னை வேளாங்கண்ணி நற்பணி மன்றம் :
🌷புனித சூசையப்பர் பஜனைக்குழு : -போன்ற அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

🦋தற்போது பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் டேவிட் மற்றும் இணை பங்குத்தந்தை அருட்பணி இம்மானுவேல் பீட்டர் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதலில், போத்தனூர் புனித சூசையப்பர் இறைசமூகம் சிறப்பாக இறை திட்டத்தின் படி உயர்வு பெற்று வருகிறது.

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜோசப் டேவிட் அவர்களின் அனுமதியுடன் இணை பங்குத்தந்தை அருட்பணி இம்மானுவேல் பீட்டர் அவர்கள்.