214 புனித தோமையார் ஆலயம், தென்மயிலை நகர்


புனித தோமையார் ஆலயம்

இடம் : தென்மயிலை நகர், வேம்பார்.

மாவட்டம் : தூத்துக்குடி
மறை மாவட்டம் : தூத்துக்குடி

ஆயர் : மேதகு ஸ்டீபன் அந்தோணி பிள்ளை
பங்குத்தந்தை : அருட்பணி C. ஜார்ஜ் ஆலிபன்

நிலை : பங்குதளம்

சிற்றாலயங்கள் :

1. புனித அந்தோணியார் ஆலயம், கடற்கரை, வேம்பார்
2. தூய சவேரியார் ஆலயம், சவேரியார்புரம் (அக்கரை), வேம்பார்
3. தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், மாதாநகர்(சுனாமிநகர்), வேம்பார்

கிளை:

தூய இராயப்பர் ஆலயம், இராயப்பன்செவல், வேம்பார்

குடும்பங்கள் : 1200
அன்பியங்கள் : 13

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு
மாலை 06.00 மணிக்கு செபமாலை நற்கருணை ஆசீர்.

தினமும் காலை 06.00 மணிக்கு திருப்பலி மாலை 06.30 மணிக்கு செபமாலை

வியாழன் மாலை 06.00 மணிக்கு செபமாலை புனித தோமையார் நவநாள், திருப்பலி

திருவிழா : டிசம்பர் மாதம் 12-ம் தேதி கொடியேற்றம் 21-ம் தேதி தூய தோமையார் பெருவிழா என பத்து நாட்கள்.

வேம்பார் வரலாற்று சிறப்புகள் :

1765 -ம் ஆண்டு வேம்பாரில் குடியேற்றம்

1860- ம் ஆண்டு தூய தோமையாருக்கு முதல் ஓலைக் குடில் ஆலயம்.

1890- ம் ஆண்டு தூய தோமையாருக்கு சிற்றாலயம்

1919- ம் ஆண்டு தூய தோமையார் ஆலய அர்ச்சிப்பு.

1925- ம் ஆண்டு ஆலயத்திற்கு முதல் கோபுரம்

1935- ம் ஆண்டு தூய தேவ அன்னைக்கு திருத்தேர்

1947- ம் ஆண்டு தனிப்பங்காக அறிவிப்பு

1981- ம் ஆண்டு அக்கரை, புனித சவேரியாருக்கு சிற்றாலயம்

2010 -ம் ஆண்டு தூய தோமையாருக்கு திருத்தேர்.

2012- ம் ஆண்டு தேவ அன்னைக்கு பொற்கிரீடம்

2014-ம் ஆண்டு தூய தோமையாருக்கு தங்கத்தில் ஈட்டி

2016 -ம் ஆண்டு கடற்கரை புனித அந்தோணியாருக்கு திருத்தேர்.

2016 -ம் ஆண்டு புதிய, பங்குத்தந்தை இல்லம்.

2017 -ம் ஆண்டு மே 07- ம் தேதி எழில் மிகு புதிய ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

2017- ம் ஆண்டு புனித தோமையாரின் புனிதப் பண்டம். புனிதப்படுத்தி நிறுவியவர். மேதகு பேராயர் A. M சின்னப்பா (சென்னை-மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர்)

2018 -ம் ஆண்டு தூய தோமையார் ஆலய நூற்றாண்டு விழா & நூற்றாண்டு விழா திருக்கொடிமரம்.

தனித்தன்மைகள் :

இவ்வாலயத்தின் அன்பியங்கள் தூய மாற்கு, தூய மத்தேயு, தூய லூக்கா, தூய யாக்கோபு என நான்கு மண்டலங்களாக உள்ளன.

தூய பீட்டர் நடுநிலைப் பள்ளி, வேம்பார் மற்றும் தூய இராயப்பர் தொடக்கப்பள்ளி, இராயப்பபுரம் ஆகியன சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மரியாயின் ஊழியர் சபை என்கிற அருட்சகோதரிகளின் துறவற சபை சிறப்பாக மறைபணியாற்றி வருகின்றது.

தமிழகத்தின் வடக்கே மயிலாப்பூர், சாந்தோம் புனித தோமையார் ஆலயம் புகழ் பெற்று விளங்குவது போல, தமிழகத்தின் தென்பகுதியில் இவ்வாலயம் புகழ் பெற்று விளங்குவதால் தென்மயிலை புனித தோமையார் ஆலயம் என்கிற சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது.

தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவில் இராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.