629 தூய ஆரோக்கிய அன்னை ஆலயம், தேவிகாபுரம்

     

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் 

இடம் : தேவிகாபுரம், சேத்துப்பட்டு தாலுகா, 606902

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : சேத்துப்பட்டு 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. தூய பரிந்துரை மாதா ஆலயம், தும்பூர் (100 குடும்பங்கள்)

2. தூய அடைக்கல அன்னை ஆலயம், முருகமங்கலம் (100 குடும்பங்கள்)

3. தூய சகாய அன்னை ஆலயம், கொளக்கரவாடி (50 குடும்பங்கள்)

4. புனித அந்தோணியார் ஆலயம், மொடையூர் (50 குடும்பங்கள்)

பங்குத்தந்தை : அருட்பணி. அ. மோட்சநாதன்

குடும்பங்கள் : 110

அன்பியங்கள் : 6

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 07.30 மணி

வாரநாட்களில் திருப்பலி : காலை 06.30 மணி

கிளைப்பங்குகளில் திருப்பலி:

ஞாயிறு காலை 05.30 மணி, 06.30 மணி

திங்கள் மாலை 06.30 மணி மற்றும் செவ்வாய் மாலை 06.30 மணி

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி முதல், செப்டம்பர் மாதம் 08ம் தேதி வரை. 

செப். 05ம் தேதி ஒளியின் விழா

செப். 06ம் தேதி அர்ப்பண விழா

செப். 07ம் தேதி நற்கருணைப் பெருவிழா

செப். 08ம் தேதி பெருவிழா மற்றும் தேர் பவனி.

செப். 09ம் தேதி கொடியிறக்கம். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

அருட்பணியாளர்கள்:

1. அருட்பணி. சிற்றரசு, SDB, தும்பூர் 

2. அருட்பணி. தேவ அன்பு, SDB, முருகமங்கலம்

3. அருட்பணி. வின்சென்ட், வேலூர் ம. மா, முருகமங்கலம் 

4. அருட்பணி. ரமேஷ், வேலூர் ம. மா, தும்பூர் 

5. அருட்பணி. ரவி, SDB, தேவிகாபுரம் 

6. அருட்பணி. வருண், HGN, தேவிகாபுரம் 

7. அருட்பணி. ஆனந்தன், SDM, மொடையூர் 

அருட்சகோதரிகள்:

1. அருட்சகோதரி. தமிழரசி, தும்பூர் 

2. அருட்சகோதரி. மேரி ஷீலா, முருகமங்கலம் 

3. அருட்சகோதரி. எலிசபெத் ராணி, தும்பூர் 

4. அருட்சகோதரி. ரூபா, கொளக்கரவாடி

5. அருட்சகோதரி. ராஜம்பாள், தும்பூர் 

6. அருட்சகோதரி. அமிர்தம்மாள், கொளக்கரவாடி

7. அருட்சகோதரி. அகஸ்டின் பெர்னாண்டஸ், முருகமங்கலம். 

வழித்தடம் : போளூர் -தேவிகாபுரம் 14கி.மீ

சேத்துப்பட்டு -தேவிகாபுரம் 14கி.மீ

ஆரணி -தேவிகாபுரம் 21கி.மீ.

Location map : https://g.co/kgs/PBB4yY

வரலாறு :

கி.பி 1877 ஆம் ஆண்டு வேளந்தாங்களில் இருந்த அருட்தந்தை தாராஸ் அடிகளாரை, சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த 12 பெரியவர்கள் சென்று சந்தித்து, தங்கள் பகுதிக்கும் வந்து மறைப்பரப்பு பணியில் ஈடுபடும் படியாக அழைப்பு விடுத்தனர். தேவிகாபுரத்திலிருந்து பூங்காவனம் என்பவர் அர்ப்பண உணர்வோடு தலைவராக இருந்து செயல்பட்டு, தாராஸ் அடிகளார் இந்தப் பகுதியில் மறைப்பணியாற்ற உதவினார். 

அருட்தந்தை தாராஸ் அடிகளார் 1887 ம் ஆண்டில் தேவிகாபுரத்தில் 145, கொளக்கரவாடியில் 66 கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்களுக்கு திருமுழுக்கு வழங்கியுள்ளார். தொடர்ந்து கொளக்கரவாடி மலையில் தங்கியிருந்து, தேவிகாபுரத்து மக்களுக்கு கிறிஸ்துவ மறையை போதித்தார். 

தேவிகாபுரமானது 1882 ம் ஆண்டு முதல் பத்தியாவரத்தின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 1920 ம் ஆண்டு சிறு ஓலைக்குடிசை ஆலயம் கட்டப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. 

1930 ம் ஆண்டு R.C.M தொடக்கப்பள்ளியும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது தேவிகாபுரம், முருகமங்கலம் மற்றும் மொடையூர் ஆகிய இடங்களில் ஈராசிரியர் பள்ளியாக R.C.M தொடக்கப் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

தேவிகாபுரம், 1950 ம் ஆண்டு முதல் தச்சம்பாடி பங்கின் கிளைப் பங்காக  ஆனது. 1978 ம் ஆண்டு அப்போதைய தச்சம்பாடி பங்குத்தந்தை அருட்பணி. அமிர்தநாதன் அவர்கள், தேவிகாபுரத்தில் மூவொரு கடவுளுக்கு கருங்கற்களால் ஆன ஆலயம் ஒன்றைக் கட்டினார். இந்த ஆலயம் தான் இன்று வரை கம்பீரமாக ஒளி வீசி நிற்கின்றது. பின்னர் ஆலயமானது தூய ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டது. 

2002 ம் ஆண்டு தச்சம்பாடியிலிருந்து பிரிந்து, தேவிகாபுரம் தனிப்பங்காக உருவெடுத்தது. 

மக்களின் ஜெப தேவைகளுக்காக ஆலயத்தின் முன்புறம் அன்னைக்கு கெபி, கல்வாரி மலைக்குன்று, ஆகியவை கட்டப்பட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டு அருட்பணி.செ. பிரான்சிஸ் அவர்கள், ஆண்டவர் மலையில் இயேசுவின் பாடுகளின் சிலுவைப்பாதை நிலைகள், திருப்பலி நிறைவேற்ற மலையில் ஒரு சமதளம், மலையடிவாரத்தில் செபக்கூடம் என பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செய்து மக்களின் ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்தினார்.

2008 ம் ஆண்டு கிளைப்பங்கான மொடையூரிலும், 2014 ம் ஆண்டு தும்பூரிலும், 2017 ம் ஆண்டு கொளக்கரவாடியிலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. 

சிறப்பு நிகழ்வுகள் :

முதல் ஞாயிறு : ஆண்டவர் மலையில் திருப்பலி 

முதல் செவ்வாய் : புனித அந்தோணியார் நவநாள் 

முதல் வெள்ளி : நற்கருணை ஆராதனை 

முதல் சனிக்கிழமை தூய ஆரோக்கிய அன்னையின் நவநாள், அன்னையின் தேர்பவனி 

மற்ற சனிக்கிழமைகளில் இடைவிடா சகாய அன்னை நவநாள் 

மாதத்தின் 7ம் தேதி திருமணி ஆராதனை

மாதந்தோறும் அமாவாசை இரவு சிறப்பு நற்செய்தி கூட்டம்.

விழாக்கள் :

மூவொரு கடவுள் பெருவிழா 5 நாட்கள் 

இறை இரக்க ஆண்டவர் பெருவிழா. பெரிய வெள்ளி முதல் உயிர்ப்பு  2ம் ஞாயிறு வரை. 

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. மரியாயின் சேனை

2. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

3. இளையோர் இயக்கம்

4. பீடச்சிறுவர் 

5. பாடகற் குழுவினர்

பங்கில் உள்ள நிறுவனங்கள் :

குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 

நிர்மலா மருத்துவமனை 

துறவற இல்லம் : 

புனித யோசேப்பின் குளூனி அருட்சகோதரிகள்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. ஜெயசீலன் (2002-2006)

2. அருட்பணி. பிரான்சிஸ் (2006-2013)

3. அருட்பணி. மார்ட்டின் 2013-

4. அருட்பணி. அ. மோட்சநாதன் (2013 முதல் தற்போது வரை..)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. அ. மோட்சநாதன்.