484 புனித இஞ்ஞாசியார் ஆலயம், மின்னாம்பள்ளி


புனித இஞ்ஞாசியார் ஆலயம்

இடம் : மின்னாம்பள்ளி, மின்னாம்பள்ளி அஞ்சல், 636106

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஆவியார் ஆலயம், அக்ரஹாரம்.

பங்குத்தந்தை : அருட்பணி. பிலவேந்திரம்

குடும்பங்கள் : 6
அன்பியம் : 1

மாதத்தின் முதல் செவ்வாய் : மாலை 06.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜூலை மாதத்தில் புனித இஞ்ஞாசியார் திருவிழா.

வழித்தடம் : அக்ரஹாரம்- (சேலம்-ஆத்தூர் சாலையில்)- 1.5 கி.மீ தொலைவில் மின்னாம்பள்ளி உள்ளது.

ஆலய வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன், மின்னாம்பள்ளியில் புனித இஞ்ஞாசியரை பாதுகாவலராகக் கொண்டு ஓடு போட்ட ஆலயம் கட்டப்பட்டு, மக்கள் இறைவனை வழிபட்டு வந்தனர்.

பங்கில் உள்ள பாதி மக்கள் மின்னாம்பள்ளி ஊரைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இப்பகுதியில் இடையூறுகள் அதிக அளவில் இருந்த நிலையில், மக்கள் அனைவரும் பங்கு ஆலயமான அக்ரஹாரத்திற்கு குடிபெயர்ந்தார்கள்.

மின்னாம்பள்ளியில் புதிய ஆலயம் எழுப்ப திட்டமிடப்பட்டு, அருட்பணி. துரைராஜ் (2007-2012) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் பாதி அளவில் கட்டப்பட்டது.

தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்பணி. ஜான் ஆரோக்கியராஜ் (2012-2017) அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு 04.11.2012 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. பிலவேந்திரம் அவர்கள் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிலவேந்திரம் அவர்கள்.