783 புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், விழுப்புரம்

       

புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம்

இடம்: விழுப்புரம்

மாவட்டம்: விழுப்புரம்

மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விழுப்புரம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித பாத்திமா மாதா ஆலயம், எனதிரிமங்கலம்

2. புனித லூர்து அன்னை ஆலயம், ஆலாத்தூர்

3. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், தும்பூர்

4. புனித அல்போன்சா ஆலயம், சாலாமேடு

5. நன்னாடு

பங்குத்தந்தை: அருட்பணி‌. A. ஆல்பர்ட் பெலிக்ஸ்

குடும்பங்கள்: 800 (கிளைப் பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள்: 22 (பங்கில் மட்டும்)

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 05:30 மணி மற்றும் காலை 08:00 மணி

திங்கள், புதன், வெள்ளி திருப்பலி காலை 06:00 மணி

செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

வியாழன் மாலை 06:00 மணி குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலி

சனி மாலை 06:00 மணி சகாய மாதா நவநாள் திருப்பலி 

திருவிழா: நவம்பர் மாதம் 24-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 03-ம் தேதி வரை.

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணியாளர்கள்:

1. Rev. Fr. ஆரோக்கிய ராஜ், SMA

2. Rev. Fr. விக்டர் ராஜ், HGN

3. Rev. Fr. தியோபில் ஆனந்து, SDB 

அருட்சகோதரிகள்:

4. Rev. Sr. ரீட்டா மேரி, FIHM

5. Rev. Sr. அந்தோணி மேரி ஜெனிபர், MSJ

6. Rev. Sr. T. ரீட்டா மேரி, FSAG

7. Rev. Sr. ஐரின், Holy Cross

8. Rev. Sr. தோமினிக் மேரி, FHM

9. Rev. Sr. ஜோஸ்பின் மேரி (சார்ல்ஸ் பிரோமியோ)

அருட்சகோதரர்கள்:

10. Bro. சவுல் பிளாசியுஸ், FMS

11. Bro. ஜோசப் மெல்கி சரேஜ், FSB

வழித்தடம்: 

விழுப்புரம் -காந்தி சிலையில் இருந்து, வடக்கு நோக்கி ஒரு கி.மீ தூரம் சென்றால் இவ்வாலயத்தை அடையலாம்.

இரயில் வழித்தடம்:

விழுப்புரம் இரயில் நிலையம் அருகில்.

Location map:

https://g.co/kgs/JTdUYt

வரலாறு:

புதுவை -கடலூர் உயர் மறைமாவட்ட த்தில் உள்ள மிகப் பழைமையான பங்குகளில் ஒன்றான விழுப்புரம் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய வரலாற்றைக் காண்போம்...

நங்காத்தூர் பங்கின் ஒருபகுதியான விழுப்புரத்தில், ஆலயத்திற்காக 1854 ஆம் ஆண்டு நிலம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான ஆவணங்களில் 1874 ஆம் ஆண்டில் நிலம் வாங்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது. 

1874 ஆம் ஆண்டில் உள்ள ஆவணங்களில் "அருட்பணி. அருள்மரிநாதர், பங்குத்தந்தை விழுப்புரம் -நங்காத்தூர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. 1878 ஆம் ஆண்டின் ஆவணங்களில் "அருட்பணி. சூசைமரிநாதர் பங்குத்தந்தை விழுப்புரம் " எனவும் உள்ளது. மிகவும் பழைமையான திருமுழுக்கு பதிவேடு "Registre De Baptemes du District de Villupuram" என்ற தலைப்பில் உள்ளது. அதில் 09.05.1878 -இல் சவரிமுத்து என்பவருக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டதிலிருந்து தொடங்குகிறது. 

ஆகவே பங்கிலுள்ள பதிவேடுகளில் படியும், நிலம் வாங்கிய ஆவணங்களின்படியும், 1878 ஆம் ஆண்டு விழுப்புரம் தனிப் பங்காக உயர்த்தப்பட்டுளது எனக் கொள்ளலாம். 

1878 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே ஆலயம் மற்றும் பங்குத்தந்தை இல்லம் ஆகியன கட்டப்பட்டுள்ளன. அருட்பணி. மவுரிஸ் ஹென்றி அவர்கள் (1895-1910) வரை பங்குத்தந்தை யாக நணிபுரிந்து அதிகமான மக்களை கிறிஸ்தவர்கள் ஆக மாற்றியுள்ளார். மேலும் ஆலயத்திற்கும் இரயில் பாதைக்கும் இடையே உள்ள நிலத்தை வாங்கி, கிறிஸ்தவ மக்கள் வசிப்பதற்காக இலவசமாக வழங்கினார்.

1914-1918 ஆண்டுகளில் நடந்த முதல் உலகப் போரின் காரணமாக பிரெஞ்சு நாட்டு மிஷனரி குருக்கள், தங்களது தாய் நாடான பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றனர்.  ஆகவே 1920 ஆம் ஆண்டு வரை பேராயர் மொரேல் அவர்கள் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு நிர்வாகம் செய்தார்.

அருட்பணி. கூசா அவர்கள் (1921-36) வெங்காத்தூரில் உள்ள மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளார். 

அருட்பணி. மெட்டி அவர்கள் 1908 ஆம் ஆண்டு வேதியருக்காக பயிற்சிப் பள்ளியை விழுப்புரத்திற்கு மாற்றினார். அதன் பின்னர் அருட்பணி. கவான் டஃபி அவர்கள் 1923 ஆம் ஆண்டு இப்பயிற்சி பள்ளியை திண்டிவனத்திற்கு மாற்றினார்.

1939 ஆம் ஆண்டு இப்பங்கிலிருந்து பிரிந்து, விழுப்புரம் கிறிஸ்து அரசர் ஆலயம் தனிப்பங்காக ஆனது. 1973 ஆம் ஆண்டு செங்காடு தனிப்பங்கானது. 

பழைய ஆலயத்தின் நூற்றாண்டு நினைவாக தற்போதைய ஆலயத்திற்கு 1978 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 02.12.1986 அன்று பேராயர் செல்வநாதர் ஆண்டகை அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. இவ்வாலயமானது அருட்பணி. சவுரி அடிகளாரால் (Rev. Fr. E. Showry) கட்டப்பட்டது.

பங்கில் உள்ள பள்ளிக்கூடம்:

புனித பிரான்சிஸ் சவேரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி

பங்கின் கெபிகள்:

1. புனித லூர்து மாதா கெபி

2. புனித அந்தோனியார் கெபி

3. அற்புத குழந்தை இயேசு கெபி

பங்கில் உள்ள அருட்சகோதரிகள் இல்லங்கள்:

1. இதய அன்னை சபை

2. Carmalite Sisters of Saint Theresa Provincialate,

3. St Ann’s Sisters of Madhavaram, Idhaya Kudil convent (Csst)

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புக்கள்:

1. மரியாயின் சேனை (ஆண்கள் &பெண்கள்)

2. மறைக்கல்வி

3. பாடகற்குழு

4. பீடச்சிறார்

5. மகளிர் குழுக்கள்

6. பெயிண்டர் சங்கம்

7. புனித வின்சென்ட் தே பவுல் சபை

8. சகோதர வாழ்வு சங்கம்

9. பங்குப் பேரவை

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Rev. Fr. Souce Marinader (1878-1881)

2. Rev. Fr. Maisdon Pierre (1882-1883)

3. Rev. Fr. Aroul Marie (1883-1895)

4. Rev. Fr. Maurice Henri (1895-1905) & (1909-1910)

5. Rev. Fr. Queran Jean (1905-1906)

6. Rev. Fr. Antoine Bonnefond (1906 6months) 

7. Rev. Fr. Aeyres Bernard (Martial) (1907-1909)

8. Rev. Fr. Marie Raphael (1910 2months)

9. Rev. Fr. Boudoul Jean Francois (1910-1914)

10. Rev. Fr. Cussac Arsene (1914-1915) (1921-1930)& (1931-1936)

11. Rev. Fr. Peyroutet Lazare (1930-1931) (Asst PP 1929-1930) 

12. Rev. Fr. Campuzan Francois (1931)

13. Rev. Fr. Morel Elie (1915-1920) 

14. Rev. Fr. Trideau Julien Victor (1938-1939)

15. Rev. Fr. Cailleault Henri (1939-1940) (1970-1977)

16. Rev. Fr. D. Arokiasamy (1941-1943)

17. Rev. Fr. Montfort (1943-1957)

18. Rev. Fr. A. Mariasusai (1957-1977)

19. Rev. Fr. E. Showry (1977-1987)

20. Rev. Fr. S. Christopher (1987-1989)

21. Rev. Fr. A. Melchizedech (1990-1991)

22. Rev. Fr. L. Vincent (1992-1993)

23. Rev. Fr. M. Lourdusamy (1997-2006)

24. Rev. Fr. Antony Roche (2006-2008)

25. Rev. Fr. K. P. Delamourd (2008-2013)

26. Rev. Fr. F. Henry Ezhil Maran (2013-2015)

27. Rev. Fr. A. Albert Felix (2015 to till today...)

பங்கில் பணிபுரிந்த உதவிப் பங்குத்தந்தையர்கள்:

1. Rev. Fr. Peyroutet Lazare (1929-1930)

2. Rev. Fr. Arputham (1934)

3. Rev. Fr. Ryan (1934)

4. Rev. Fr. Renoux Maximin Celestin

5. Rev. Fr. M. Julien Benedict (1977)

6. Rev. Fr. N. Belevendiran (1988 Jan -1990Jan)

7. Rev. Fr. Antony Lourduraj (1992)

8. Rev. Fr. F. Henry Ezhil Maran (2008)

9. Rev. Fr. Lourdu Jeyaseelan (2009)

10. Rev. Fr. Allwin Anbarasu (2010-2011)

11. Rev. Fr. M. Gaspar (2011-2012)

12. Rev. Fr. Arokia John Robert (2012-2013)

13. Rev. Fr. V. S. Dominic Savio (2013-2014)

14. Rev. Fr. Deivanayagam (2014-2015)

15. Rev. Fr. G. Sagayanathan (2015-2016)

16. Rev. Fr. B. Samuel (2016-2017)

17. Rev. Fr. Jeeva (2018-2021)

18. Rev. Fr. Johnson Maria Joseph (2021 June -December)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ஆல்பர்ட் பெலிக்ஸ் அவர்கள்.