607 புனித பாத்திமா அன்னை ஆலயம், நாகூர்

       

புனித பாத்திமா அன்னை ஆலயம் 

இடம் : நாகூர் 

மாவட்டம் : நாகப்பட்டினம் 

மறைமாவட்டம் : தஞ்சாவூர் 

மறைவட்டம் : நாகப்பட்டினம் 

பங்குத்தந்தை : அருள்பணி. A. ஜெர்லின் கார்ட்டர் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் : 10

1. பூதன்குடி

2. வெள்ளப்பாக்கம் 

3. உத்தமசோளபுரம் 

4. உக்கூர் 

5. தெத்தி 

6. தேவன்குடி 

7. மத்தியகுடி 

8. உத்தூர் 

9. வங்காரமாவடி

10. திட்டச்சேரி

குடும்பங்கள் : 350 (கிளைப்பங்குகள் சேர்த்து)

அன்பியங்கள் : 4

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு காலை 08.00 மணிக்கு செபமாலை, 08.30 மணிக்கு திருப்பலி 

நாள்தோறும் திருப்பலி காலை 06.00 மணிக்கு 

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு ஆராதனை, திருப்பலி. 

மாதத்தின் முதல் சனி மாலை 06.00 மணிக்கு தேர்பவனி, மாதா மன்றாட்டு, திருப்பலி. 

திருவிழா : மே மாதம் 13 ம் தேதி கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் கொண்டாடப்படும். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்சகோதரி. சந்தணமேரி, MMS 

2. அருள்சகோதரி. மிசிகா, MMS

வழித்தடம் : சென்னை -நாகப்பட்டினம் சாலையில், நாகூரில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

Location map :

https://g.co/kgs/ktj1FV

வரலாறு :

நாகூர் புனித பாத்திமா அன்னை ஆலயமானது உரோமை மறைபரப்புப்பணி மையத்தின் உதவியுடன் கட்டப்பட்டு, 13.12.1995 அன்று நாகை தூய லூர்து அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்பணி. பா. சேவியர் அவர்களால் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து காரியூர் பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது. 

01.03.2001 அன்று ஆலய மணிக்கூண்டு கட்டப்பட்டது. 

2009 ம் ஆண்டு தஞ்சை மறைமாவட்ட ஆயர் மேதகு தேவதாஸ் அம்புரோஸ் அவர்களால் நாகூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. சக்கரியாஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினார். 

இரண்டாவது பங்குத்தந்தையாக அருள்பணி. A. ஜெர்லின் கார்ட்டர் அவர்கள் 2015 ஆம் ஆண்டு பணிப் பொறுப்பேற்றார்.

பங்குத்தந்தை அருள்பணி. A. ஜெர்லின் கார்ட்டர் அவர்களின் முயற்சி மற்றும் நன்கொடையாளர் உதவியுடன் புதிய கொடிமரம் வைக்கப்பட்டு, நாகப்பட்டினம் மறைவட்ட முதல்வர் பேரருள்பணி. K. செல்வம் செபஸ்டின் மற்றும் பட்டுக்கோட்டை மறைவட்ட முதல்வர் பேரருள்பணி. S. மரியசூசை ஆகியோரால் 13.05.2016 அன்று புனிதம் செய்யப்பட்டது. 

மேலும் பங்குத்தந்தை அருள்பணி. A. ஜெர்லின் கார்ட்டர் பணிக்காலத்தில் புனித பாத்திமா கலையரங்கம் கட்டப்பட்டு, 19.11.2017 அன்று அவராலேயே திறந்து வைக்கப்பட்டது.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. திருவழிபாட்டுக்குழு

2. இயேசுவின் இளைஞர் இயக்கம் 

3. மறைக்கல்வி

4. புனித பியோ பீடச்சிறார்

5. பாடகற்குழு 

6. மரியாயின் சேனை 

7. பங்குப்பேரவை.

புனித பாத்திமா அன்னையின் ஆலயம் வாருங்கள்.. அன்னையின் வழியாக இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்..