புனித வனத்து சின்னப்பர் திருத்தலம்
இடம்: கல்பட்டு, மாம்பழப்பட்டு வழி, கல்பட்டு அஞ்சல், 605302
மாவட்டம்: விழுப்புரம்
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: விழுப்புரம்
நிலை: திருத்தலம்
கிளைப்பங்குகள்:
1. மாம்பழப்பட்டு
2. காடுவெட்டி
3. மழவரயானூர்
4. சிறுவாக்கூர்
5. அருளவாடி
6. T. எடையார்
7. கோழிப்பட்டு
பங்குத்தந்தை: அருள்பணி. A. ஆரோக்கிய சகாய செல்வன்
குடும்பங்கள்: 365
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 06.30 மணி திருப்பலி (கிளைப்பங்கு -காடுவெட்டி)
காலை 08.30 மணி திருப்பலி
மாலை 06.30 மணி ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆசீர்
வாரநாட்களில் திருப்பலி: காலை 05.30 மணி
செவ்வாய் மாலை 06.30 மணி நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் புதன் காலை 05.30 மணி திருப்பலி. மாலை 06.00 மணி திருப்பலி, தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர்
முதல் சனி மாலை 06.00 மணிக்கு மாதா கெபியில்
திருப்பலி
முதல் செவ்வாய் மாலை 06.00 மணி புனித அந்தோனியார் கெபியில் திருப்பலி
பங்குத் திருவிழா: ஜூலை 31 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 08 ஆம் தேதி வரை
ஜனவரி 16 ம் தேதி புனித வனத்து சின்னப்பர் திருவிழா
மே 31 பூ திருவிழா
ஜூன் 13 புனித அந்தோனியார் திருவிழா
ஆகஸ்ட் 15 மாதாவின் விண்ணேற்பு பெருவிழா
சிறப்பு நிகழ்வு: ஒவ்வொரு வருடமும் தவக்காலத்தில் ஐந்தாவது வெள்ளிக்கிழமை மாம்பழப்பட்டில் இருந்து கல்பட்டு வரை, பரிகார சிலுவைப்பாதையானது மறைமாவட்ட, வட்டார அளவில் எல்லா பங்குத்தந்தையர்களும், இறைமக்களும் இணைந்து சிலுவைப்பாதை நடத்துவார்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருள்பணியாளர்கள்:
1. அருள்பணி. P. சின்னப்பன், பெங்களூர்
2. அருள்பணி. G. விசுவாசம், MSFS
3. அருள்பணி. D. வின்சென்ட் தே பவுல், பாட்னா
4. அருள்பணி. C. வல்லபதாஸ், SGC
5. அருள்பணி. A. கிறிஸ்து சவரிராஜ், SJ
6. அருள்பணி. C. நம்பிக்கைராஜ், CP
7. அருள்பணி. V. சம்பத் எழில் தாசன், CRS
அருள்சகோதரிகள்:
1. அருள்சகோதரி. A. அமலராணி, FBS
2. அருள்சகோதரி. A. சாந்தா மரியா, FSAG
3. அருள்சகோதரி. M. ஷகிலா மேரி, FBS
4. அருள்சகோதரி. G. பிரேமா ஜோஸ்பின் மேரி, CSSH
5. அருள்சகோதரி. A. மெட்டில்டா அமலி, SJC
6. அருள்சகோதரி. D. சலேத் மேரி, CSSH
7. அருள்சகோதரி. A. மரியசெல்வி, FSAG
8. அருள்சகோதரி. R. மரியஷீலா ராணி, SJC
9. அருள்சகோதரி. S. அருள்மணி அமலி, DMI
10. அருள்சகோதரி. லௌரா, DMI
11. அருள்சகோதரி மெர்சி, FBS
12. அருள்சகோதரி வின்சி, DMI
13. அருள்சகோதரி. லில்லி தெரேசா, FBS
14. அருள்சகோதரி. ஷாலினி, FBS
வழித்தடம்: விழுப்புரம் -மாம்பழப்பட்டு
Location map: https://goo.gl/maps/SETP5tYCTeBZKhrJ8
வரலாறு:
புனித வனத்துச்சின்னப்பர் திருத்தலமானது, புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டத்தில் கி.பி.1898 ஆம் ஆண்டு உருவான திருத்தலங்களில் ஒன்றாகும். இது தென்னிந்தியாவில் சென்னையில் இருந்து 177 கி.மீ. தூரத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் - திருக்கோவிலூர் நெடுஞ்சாலையில் உள்ள மாம்பழப்பட்டு என்ற ஊரின் தெற்கு திசையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
கல்பட்டு என்ற இவ்வூரானது தெளி, கக்கனூர் போன்ற ஊர்களை போன்று, முகையூர் பங்கின் கீழ் இருந்து வந்தது. அப்போது முகையூரின் பங்கு குருவாக இருந்த அருட்திரு. அந்தோணி அடிகள் காலத்தில் புனித வனத்துச் சின்னப்பர் காட்சி தந்ததின் காரணமாக இத்திருத்தலமானது உதயமானது. பக்தர்கள் பெருங்கூட்டமாக வருவதைக்கண்டு, அருள்திரு. செல்வநாதர் அவர்கள் புதுவை மக்களிடம் சென்று நிதிகள் திரட்டி 1901 ஆம் ஆண்டு முதன் முதலாக திருவிழா நடத்தப்பட்டு, இந்தப் புனித பகுதி திருயாத்திரை தலமாக சிறப்பிக்கப்பட்டது. இத்திருத்தலத்தின் காரணமாக கல்பட்டுக்கு அருகில் உள்ள தெளி என்ற கிராமமானது, கல்பட்டை உள்ளடக்கி தனிப்பங்காக முகையூர் பங்கில் இருந்து கி.பி.1901-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு ஏற்படுத்தப்பட்டது.
அருள்திரு. தெணு அடிகள் பணிக்காலத்தில் 1910 ஆம் ஆண்டு ஆலய மணி நிறுவப்பட்டது.
அருள்திரு. சைரேசு அடிகள் திருப்பயணிகள் தங்குவதற்கு சத்திரம் அமைத்தார்.
அருள்தி. கிராவர் அடிகள் தமது தாயிடம் அன்பளிப்பு பெற்று 1936-37 -ல் பங்குத்தந்தை இல்லம் கட்டினார். பாடசாலையையும் உருவாக்கினார்.
அருள்திரு. அந்தோணி பள்ளிப்பரம்பில் அவர்கள் மருத்துவமனையை ஏற்படுத்தினார்.
அருள்திரு. சௌரி அடிகள், ஆலய பழைய ஓடுகளை மாற்றி, புதிய சிமெண்ட் ஓடு போட்டு ஆலயத்தை புதுப்பித்தார். பாடசாலையையும் புதுப்பித்தார்.
அருள்திரு. L. ஜேக்கப் அடிகளார் பணிக்காலத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு மேதகு பேராயர் S. மைக்கேல் அகஸ்டின் அவர்களால் 26.07.1994 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. திருயாத்திரிகர்களுக்கு வசதியாக பழைய ஆலயத்தின் முன் மண்டபம் அமைக்கப்பட்டது. 11 அறைகளும் கட்டப்பட்டன.
மண்ணின் மைந்தர் அருள்திரு. P. சின்னப்பன் அவர்களின் குருத்துவ வெள்ளிவிழா நினைவாக 18.12.1995 ல் புதிய மணிக்கூண்டு கட்டப்பட்டது.
ஆகஸ்ட் முதல் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவானது, 1997 ஆம் ஆண்டு முதல் திருத்தல திருவிழா ஆகஸ்ட் 08-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
பிறகு கி.பி.1998 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தெளி பங்கில் இருந்து பிரிக்கப்பட்டு, கல்பட்டு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்திரு. எலியாஸ் அவர்கள் பணிப் பொறுப்பேற்றார். இந்த நாளில் புனித லூர்து மாதா கெபி மற்றும் புனித அந்தோணியார் கெபியும் பேராயர் S. மைக்கேல் அகஸ்டின் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
திருத்தல நூற்றாண்டு விழா நினைவாக மலை மீது சிறு மலைக்கோயில் கட்டப்பட்டு 08.08.2000 அன்று மேதகு பேராயர் S. மைக்கேல் அகஸ்டின் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புதிய ஆலய பீடத்தின் பின்புறம் மிகவும் அழகுற மிகுந்த வேலைப்பாடுகளோடு அமைத்துக் கொடுத்தவர் அருள்பணி. G. விசுவாசம், MSFS.
மேலும் அருள்பணி. G. விசுவாசம், MSFS அவர்கள் பக்தர்கள் தங்குவதற்காக 7 அறைகள், மற்றும் பங்கின் வளர்ச்சிக்காக 7கடைகளையும் கட்டிக் கொடுத்தார்.
சாட்சியும் மாட்சியும் மற்றும் காணாமல் போன மாடுகளும்:
சுமார் கி.பி. 1898-ம் ஆண்டு கல்பட்டு கிராமத்தை சேர்ந்த கல்யாண ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ஐயர் ஒருநாள் புதர்களிடையே காணாமல் போன மாடுகளை தேடிவந்தபோது. (தற்போதுள்ள பழைய ஆலயத்தை சேர்ந்தார்ப்போல் உள்ள) மலையில் தூப நறுமணமும், மணியோசையும் சிலுவை அடையாளமும் தோன்றி, தோன்றி மறைவது போன்ற காட்சிகளைக் கண்டு வீட்டிற்குச் சென்றார். இரவு நித்திறையில் வெள்ளைக்குதிரையில் துறவி போன்ற ஒருவர் தோன்றி "வனத்துச்சின்னப்பர் நானே! பகலில் காட்சி கண்ட இடத்தில் மாடுகள் கிடைக்கும்" எனக் கூறியதை கனவில் கண்டார். காலையில் எழுந்து கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த சூரப்ப வாத்தியார் குமாரர் கலங்காணிமுத்து என்பவரிடம் சென்று நடந்ததைச் சொன்னார். அவருடன் இன்னும் சிலரும் சென்று அதே மலையில் மீண்டும் அந்த அற்புத காட்சிகளை கண்டதுடன் மாடுகளும் கிடைத்தன. இந்த அதிசயம் நடந்த இவ்விடத்தில் உண்மையிலே புனித வனத்துச்சின்னப்பர் எழுந்தருளியுள்ளார் என்பதை உணர்ந்து மக்கள் மலையடிவாரத்திலுள்ள முட்செடிகளையும், புதற்களையும் சுத்தம் செய்து, மேடையும் அமைத்து சிலுவை ஒன்றை நட்டு மண்கூடு விளக்கேற்றி நாள்தோறும் புனித வனத்துச்சின்னப்பரை வணங்கி பக்தியுடன் வேண்டி பலவிதமான அற்புதங்களையும், வரங்களையும் பெற்றனர். இச்செய்தி எங்கும் பரவி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டு இத்திருத்தலம் நாடி வந்தனர். புனிதரின் மகிமையை திரளான மக்கள் ஒன்று கூடி கொண்டாடினார்கள்.
சிற்றாலயமும் சுரூபம் வந்த வரலாறும்:
பக்திமிக்க பங்கு குருவாக முகையூரில் பணிபுரிந்த அருள்திரு. அந்தோணி அடிகள் காலத்திலே மேற்கூறப்பட்ட புனித வனத்துச்சின்னப்பரின், புதுமை நடைபெற்றது சிறப்பு மிக்க ஒன்றாகும். இவர் புனித வனத்து சின்னப்பருக்கு மகிமை சேர்க்கும் விதத்திலே சிற்றாலயமாக கூரை ஆலயத்தை அமைத்து தந்தார். புனிதரின் சுரூபமானது இல்லாததனால் பக்தர்கள் பார்த்து ஜெபிக்கவும், இவ்வாலயத்தில் வைக்கவும் தந்தையின் முயற்சியால் பிரான்ஸ் தேசத்திலிருந்து புனிதரின் சுரூபம் வரவழைக்கப்பட்டது.
விழுப்புரத்திற்கு பார்சலில் வந்த புனித வனத்துச்சின்னப்பர் சுரூப பெட்டியை ஏற்றி வந்த புகைவண்டி மாம்பழப்பட்டு இரயில் நிலையம் வந்து நின்றது. பிறகு மீண்டும் புறப்பட ஆரம்பித்தபொழுது புகைவண்டி இயங்கவில்லை இரயில் இயக்குனர்கள் என்ன காரணம் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பெட்டியிலும் சோதனை செய்தார்கள். பின்பு பார்சல் பெட்டி அருகில் சென்ற போது அருகில் உள்ள பகுதிக்கு வந்த பார்சல்களை இறக்கி வைத்தார்கள் அந்த பார்சலில் முகையூர் பங்கு என்ற பெயரிலே பார்சல் ஒன்று இருப்பதை பார்த்து இறக்கிவைத்தார்கள். அப்போது திடீரென இரயில் இயங்கத் தொடங்கிவிட்டது. இந்த மகிழ்ச்சியிலேயே மீண்டும் புனித வனத்துச்சின்னப்பரின் சுரூபம் உள்ள பார்சல் பெட்டியை புகைவண்டியிலேயே ஏற்றி புறப்பட ஆரம்பித்தபொழுது புகைவண்டி புறப்படவில்லை. எனவே இரயில் இயக்குனர்கள் அதிசயமாக பார்த்தார்கள். எனவே அந்த பார்சல் பெட்டியை மாம்பழப்பட்டு இரயில் நிலையத்திலேயே இறக்கி வைத்துவிட்டு முகையூர் பங்குத்தந்தையிடம் இச்சம்பவத்தை அறிவித்தார்கள். இதனைக் கேட்ட பங்குத்தந்தை அருள்திரு. அந்தோணி அடிகள் அந்தப்பார்சலை முகையூருக்கு மாட்டுவண்டியில் கொண்டுவரும்படி வண்டியோடு ஆட்களை அனுப்பி வைத்தார். மாட்டுவண்டியில் அந்த பார்சலை ஏற்றிவைத்து முகையூருக்கு ஓட்டிச்செல்ல முயன்றபொழுது அந்த வண்டிமாடு அங்கு செல்ல வில்லை. பிறகு மாடுகள் போகின்ற போக்கிலே விட்டுவிட்டார்கள். அது நேராக கல்பட்டுக்கு வந்து கூரை ஆலயத்தின் முன்புற வாசலில் வந்து நின்றது. பின்பு எல்லோரும் அந்த பெட்டியை திறந்து சுரூபத்தை மகிழ்ச்சியோடு தூக்கி வந்து இந்த கூரை ஆலயத்தில் வைத்து வழிபட்டு புனித வனத்து சின்னப்பரின் பெருமையை புகழ்ந்து பேசினார்கள்.
திருத்தலத்தில் உள்ள நிறுவனங்கள்/ இல்லம்:
1. ஆர்.சி. தொடக்கப்பள்ளி, சிறுவாக்கூர்
2. சிறுமலர் மருத்துவமனை
3. அடைக்கல அன்னை சபை கன்னியர் இல்லம்
திருத்தல பங்கேற்பு அமைப்புகள்:
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. பாடகற்குழு
4. பீடச்சிறுவர்கள்
5. இளைஞர் இளம் பெண்கள் இயக்கம்
திருத்தலத்தில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
(முகையூர் பங்கிலிருந்து)
1. அருள்பணி. அந்தோனி (1897-1905)
(தெளி பங்கிலிருந்து)
2. அருள்பணி. செல்வநாதர் (1901-1905)
3. அருள்பணி. ரெனு (1906-1909)
4. அருள்பணி. சைரேசு (1909-1915)
5. அருள்பணி. மரிய சௌரிநாதர் (1915-1919)
6. அருள்பணி. ஸ்தனிஸ்லாஸ் (1919-1921)
7. அருள்பணி. லமாத் (1921-1922)
8. அருள்பணி. சக்கரையாஸ் (1922-1933)
9. அருள்பணி. கிராவர் (1933-1942)
10. அருள்பணி. மரியதாஸ் (1942-1944)
11. அருள்பணி. இராஜரத்தினம் (1944-1946)
12. அருள்பணி. அபிரகாம் (1946-1948)
13. அருள்பணி. சூசைநாதர் (1948-1954)
14. அருள்பணி. V. P. அந்தோணிசாமி (1954-1960)
15. அருள்பணி. அந்தோணி பள்ளிப்பரம்பில் (1960-1972)
16. அருள்பணி. சௌரி (1972-1977)
17. அருள்பணி. கையோ (1978-1982)
18. அருள்பணி. மரியநாதர் (1982செப்-நவ)
19. அருள்பணி. அம்புரோஸ் (1982டிச -1983ஜன)
20. அருள்பணி. ஜான் ஜேம்ஸ் (1983-1988)
21. அருள்பணி. டேவிட் (1988-1989)
22. அருள்பணி. L. ஜேக்கப் (1989-1994)
23. அருள்பணி. R. எலியாஸ் (1994-1998)
(கல்பட்டு தனிப்பங்கானது முதல்)
1. அருள்பணி. R. எலியாஸ் (1998-2002)
2. அருள்பணி. K. A. இயேசு நசரேன் (2002-2006)
அருள்பணி. S. ஆனந்த ராஜ், (உதவிப் பங்குத்தந்தை)
3. அருள்பணி. S. ரிச்சர்ட் (2006-2009)
4. அருள்பணி. M. ராபர்ட் (2009-2014)
5. அருள்பணி. A. ஆரோக்கிய தாஸ் (2014-2016)
6. அருள்பணி. A. ஆரோக்கிய சகாய செல்வன் (2016 முதல்..)
வரலாறு: திருத்தல வரலாற்று மலர்
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்