281 தூய சகாய மாதா ஆலயம், படப்பை


தூய சகாய மாதா ஆலயம்

இடம் : படப்பை

மாவட்டம் : காஞ்சிபுரம்
மறை மாவட்டம் : செங்கல்பட்டு
மறை வட்டம் : தாம்பரம்

பங்குத்தந்தை : அருட்தந்தை L . தாஸ்

நிலை : பங்குதளம்
கிளை : தூய விண்ணரசி மாதா ஆலயம், ஆரம்பாக்கம்

குடும்பங்கள் : 400
அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 08.30 மணி மற்றும் மாலை 05.00 மணிக்கும்

திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் திருப்பலி : மாலை 06.30 மணிக்கு

மாதந்தோறும் 24-ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு செபமாலை, திருப்பலி, தேர்பவனி, நற்கருணை ஆராதனை மற்றும் அன்பின் விருந்து நடைபெறும்.

திருவிழா : மே 24-ஆம் தேதியை மையமாகக் கொண்ட ஐந்து நாட்கள்.

வரலாறு :

பல்லாவரம் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி பெர்னாந்தீஸ் அவர்கள் ஆரம்பாக்கம் கிராமத்தை தத்தெடுத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முனைந்தனர். கிறிஸ்தவ குடும்பங்களுக்கு ஒளியூட்டி வழிகாட்டிய அருட்தந்தையவர்கள் திருச்சபையின் விழுதுகள் எங்கும் பரவ வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, சிறுமாத்தூர் மற்றும் இன்று இவ்வாலயம் அமைந்துள்ள அதனஞ்சேரி-படப்பை ஆகிய இடங்களை வாங்கினார்.

அருட்தந்தையின் மறைவுக்குப்பின் தாம்பரம் பங்கில் இணைக்கப்பட்டு, போக்குவரத்தை காரணம் காட்டி தர்காஸ் பங்குடன் இணைக்கப்பட்டது. மக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே 1968-ஆம் ஆண்டு இப்போதுள்ள ஆரம்பாக்கம் ஆலயம் அன்றைய சென்னை-மயிலை பேராயர் மேதகு ஆர். அருளப்பா அவர்களால் கட்டப்பட்டு திறப்பு விழாவின் போது கோவளம் பங்குடன் இணைக்கப்பட்டது.

பால் நெல்லூர் பங்கின் கிளைப்பங்காக இருந்த எறையூர் கிராம மக்கள், தங்களுக்கு தனிப் பங்கு வேண்டும் எனக்கோரினர். எனவே 17-01-1972 அன்று படப்பை, ஓட்டேரி, முடிச்சூர், மணிமங்கலம், ஆரம்பாக்கம், சிறுவாத்தூர் ஆகிய கிளைப்பங்குகளுடன் எறையூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

கோவளம் பங்கில் இணை பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஜி. எம். ஜோசப் (1972-1980) முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். இத்தனை கிளைப்பங்குகளும் படப்பையை மையமாகக் கொண்டிருந்ததால், படப்பையில் ஓர் ஆலயம் கட்ட ஆவல் கொண்டு கிறிஸ்தவர்களின் சகாய அன்னைக்கு ஆலயம் கட்டப்பட்டு 28-02-1974 அன்று பேராயர் ஆர். அருளப்பா அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

அருட்தந்தை ஜி. எம் ஜோசப் அவர்களின் முயற்சியால் சகாய அன்னைக்கு பீடமும், மணிக்கூண்டு கட்டி அதில் சகாய அன்னை சொரூபமும் வைக்கப்பட்டது.

அருட்தந்தை பி. செபாஸ்டின் (1980-81) எறையூர் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

அருட்தந்தை சி. சின்னப்பா (1981-1986) பணிக்காலத்தில் மே மாதம் 24-ஆம் தேதி படப்பை தூய சகாய அன்னை ஆலய திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அருட்பணி பெர்னார்ட் லாரன்ஸ் (1988) தாம்பரத்தில் தங்கியிருந்து இறை பணி செய்தார்.

அருட்பணி ராஜா விக்டோரியா (1989-1996) பணிக்காலத்தில் 1992- ல் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.

அருட்பணி அமல்ராஜ் (1996-1998) அவர்கள் பணிக்காலத்தில் ஆலய மதிற்சுவரில் வேளாங்கண்ணி மாதாவிற்கு அழகிய கெபி கட்டப்பட்டது.

அருட்பணி சார்லஸ் கென்னடி (1998-2002) படப்பையில் தங்கி (எறையூர் பங்காக ஏற்றுக்கொண்டு) பணிபுரிந்து பங்கு ஒரு குடும்பம் என்ற உணர்வை ஏற்படுத்த அவ்வப்போது விழாக்கள் நடத்தி பங்கு மக்களின் ஒற்றுமையை ஓங்கச் செய்தார். இதன் விளைவாக அன்பியங்கள் உருவாயின.

அருட்பணி பவுல் ஜான் G. R (2002-2008) படப்பை பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். ஆயர் அனுமதியுடன் எறையூர் பங்கை படப்பை பங்காக மாற்றினார். பங்கின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2007 ல் எறையூர் பங்கு தனியாக பிரிக்கப்பட்டு கிளெரெசியன் சபை குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது.

08-12-2005 அன்று ஆயர் நீதிநாதன் ஆண்டகை புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போட்டார்கள். மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் சிறப்பாக கட்டப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா பேராயர் A. M சின்னப்பா (சென்னை -மயிலை), மேதகு ஆயர் நீதிநாதன் (செங்கல்பட்டு), மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் (கும்பகோணம்) ஆகிய மூன்று ஆயர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் தனிச்சிறப்புகள் :

ஆலய உச்சியில் 15 அடி உயரம் கொண்ட இயேசுவின் சொரூபம்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தியானநிலையில் உள்ள இயேசுவின் சொரூபம்.

அருட்பணி T. S பால்ராஜ் (2008-2010) பணிக்காலத்தில் ஒவ்வொரு மாதமும் 24 -ஆம் தேதி அன்னையின் சிறப்பு நவநாளாக சிறப்பித்து, எண்ணற்ற மக்களை ஆலயம் நோக்கி வரச் செய்தார்.

மேலும் பல்வேறு முழுஇரவு செபம் போன்றவையும் நடத்தப்பட்டு இவ்வாலயம் நாடி வரும் அனைத்து மக்களும் நலம் பெற்று செல்கின்றனர்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி ஜெயக்குமார் அவர்கள்.

வழித்தடம் :

தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில், தாம்பரத்தில் இருந்து15 கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து பேருந்துகள் 79, 583, 579