834 புனித அந்தோனியார் ஆலயம், ஞானப்பிரகாசியார்புரம்

     

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: ஞானப்பிரகாசியார் புரம், திண்டுக்கல், பேகம்பூர் அஞ்சல்

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: திண்டுக்கல்

மறைவட்டம்: திண்டுக்கல்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், சவேரியார் பாளையம்

பங்குத்தந்தை அருட்பணி. அருள் ஜஸ்டின் திரவியம், SDB

தவிப் பங்குத்தந்தையர்கள்:

அருட்பணி. செபாஸ்டின், SDB

அருட்பணி.‌ ஆல்பர்ட், SDB

அருட்பணி. ரொசாரியோ, SDB

குடும்பங்கள்: 200

அன்பியங்கள்: 4

மாதத்திற்கு இரண்டு செவ்வாய்க்கிழமை மாலை 07:30 மணிக்கு திருப்பலி

திருவிழா: பிப்ரவரி மாதத் தொடக்கத்தில்  

வரலாறு:

ஞானப்பிரகாசியார் புரமானது, திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில், வாகனங்களை சோதனை செய்யும், சோதனைச் சாவடியாக அன்றைய காலகட்டத்தில் திகழ்ந்த இடமாகும்.

'சுங்க கேட்' என்று அழைக்கப்பட்ட இந்த இடத்தில், அன்றைய மூத்த குடும்பத்தார்கள் தாங்கள் வழிபாடு செய்ய, ஒரு ஆலயம் வேண்டும் என்று தீர்மானித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போதைய ஆலயம் அமைந்துள்ள இந்த இடத்தில், 1913 ஆம் ஆண்டு சிறுகுடிசை ஆலயம் கட்டப்பட்டது. 

1917 ஆம் ஆண்டு அக்குடிசை ஆலயம் சிறிது மாற்றப்பட்டு, சிலுவையும், பதுவை புனித அந்தோனியாரின் சிறிய சுரூபமும் நிறுவப்பட்டு, தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்தது.

அன்றைய மூத்த குடும்பத்தினர் இரண்டு புனிதர்களின் மீது பற்றுகொண்டு, புனித ஞானப்பிரகாசியார் பெயரில் ஊரையும், புனித அந்தோனியார் பெயரில் ஆலயத்தையும் மாற்றிக் கொண்டனர்.

1932 ஆம் ஆண்டு ஊர்ப் பெரியவர்கள், பொதுமக்களின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் காரைக் கட்டிடமான ஆலயம் கட்டப்பட்டது. 

1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது ஆலயமானது முற்றிலுமாக அகற்றப்பட்டு, தற்போதைய புதிய ஆலயத்திற்கு 28.10.2013 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைய தலைமுறையினரின் கடும் உழைப்பு மற்றும் சேவைகளால் அழகிய ஆலயமானது கட்டப்பட்டு, மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களால் 13.06.2018 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

வழித்தடம்: திண்டுக்கல் -மதுரை சாலையில் ஞானப்பிரகாசியார்புரம் அமைந்துள்ளது.

Location map: St. Antony's Church, Gnanaprakasiyarpuram https://maps.app.goo.gl/4XHgjAerKVWLG3nP6

ஆலய வரலாறு: பங்கு ஆலய வெள்ளிவிழா மலர்

தகவல்கள் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி. செபாஸ்டின், SDB அவர்கள்

புகைப்படங்கள்: ஆலய உறுப்பினர்