658 புனித அருளானந்தர் ஆலயம் பனிதிவயல்

  

புனித அருளானந்தர் ஆலயம் 

இடம் : பனிதிவயல், இளையான்குடி தாலுகா 

மாவட்டம் : சிவகங்கை 

மறைமாவட்டம் : சிவகங்கை 

மறைவட்டம் : பரமக்குடி 

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம் 

பங்குத்தந்தை : அருள்பணி. மா. ரமேஷ் 

குடும்பங்கள் : 21

திருப்பலி : மாதத்தில் ஒருநாள் 

திருவிழா : மே மாதம் மூன்றாவது வாரத்தில் சனி, ஞாயிறு.

வழித்தடம் : சாலைக்கிராமம் -பனிதிவயல். 

வரலாறு :

வயல் முழுவதும் பனை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் பனைவயல் என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி "பனிதிவயல்" என்று பெயர் பெற்றது. 

அருள்பணி. Pignol அவர்களால் ஆலயத்திற்கு 1953 ஆம் ஆண்டு அடித்தளம் போடப்பட்டு, அருள்பணி. மரிய பங்கிராஜ் (1974-1980) அவர்கள் பணிக்காலத்தில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. 

2007ம் ஆண்டு தனிநபரின் நன்கொடையால் ஆலய தரைக்கு Tiles போடப்பட்டது. 

கிறிஸ்துமஸ் திருப்பலி, இறந்தோர் திருப்பலி, தவக்கால திருப்பலி, மக்களின் தேவைக்காக அழைக்கும் போது திருப்பலி, மாதத்திற்கு ஒருநாள் திருப்பலி என்று திருப்பலி சாலைக்கிராமம் பங்குத்தந்தை அவர்களால் ஒப்புக் கொடுக்கப் படுகிறது. மேலும் நற்செய்திப் பணியாளர் ஒருவரால்  ஆலய மணி அடித்து, காலையும் மாலையும் செபம் செபிக்கப்படுகிறது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மா. ரமேஷ்