456 திருஇருதய ஆண்டவர் ஆலயம், வளர்புரம்


திருஇருதய ஆண்டவர் ஆலயம்.

இடம் : வளர்புரம்.

மாவட்டம் : காஞ்சிபுரம்.
மறை மாவட்டம் : செங்கல்பட்டு.
மறை வட்டம் : காஞ்சிபுரம்.

நிலை : பங்குத்தளம்.

கிளைப்பங்கு : புனித லயோலா இஞ்ஞாசியார் ஆலயம், நெமிலி.

பங்குத்தந்தை : அருட்பணி. தாமஸ் பிரேம்குமார்.

குடும்பங்கள் : 225
அன்பியங்கள் : 11

ஞாயிறு காலை 07.40 மணிக்கு, திருச்செபமாலை, ஆராதனை திருப்பலி.

வார நாட்களில் காலை 06.30 மணிக்கு திருப்பலி.

வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளியன்று காலை 10.30 மணிக்கு, திருச்செபமாலை, சுகமளிக்கின்ற சிறப்பு தியானம், நற்கருணை ஆராதனை, திருப்பலி நடைபெறும்.

திருவிழா : 

மே மாதம் இறுதி வியாழன் மாலை கொடியேற்றம், வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை விழா மற்றும் சனிக்கிழமை காலையில் திருவிழா திருப்பலியும் மாலையில் தேர்பவனி நடைபெறும்.

மண்ணின் மைந்தர்கள் :

1. ஆயர் P.C. பாலசாமி (late)
2. Fr. M. பாப்பைய்யா (late)
3. Fr. M.அந்தைய்யா (late)
4. Fr. Y.பாப்பைய்யா (late)
5. Fr. S.அந்தைய்யாசாமி (late)
6. Fr. P.C. இன்னைய்யா (late)
7. Fr. P. T. அருளப்பா (late)
8. Fr. P.R. தாமஸ் (late)
9. Fr. G. இருதயராஜ் (late)
10. Fr. G. ஜேசுதாஸ் (late)

11. Fr. C. சின்னப்பா
12. Fr. G. விக்டர்
13. Fr. N.A. சார்லஸ் குமார்
14. Fr. S.X. அமல்ராஜ்
15. Fr. C.J. எட்வர்ட் செல்வராஜ்
16. Fr. அலெக்ஸ் கார்மேல்
17. Fr. பேஜில்
18. Fr. அந்தோணிராஜ்
19. Fr. சார்லஸ்
20. Fr. ஆரோக்கிய ரேமண்ட்
21. Fr. கிறிஸ்டோபர்
22. Fr. தாமஸ் ஜார்ஜ்
23. Fr. அருள்ராஜ்
24. Fr. வின்சென்ட்
25. டீக்கன்.T. செபாஸ்டின்

1. Bro.P.C.பாலசாமி (Late)
2. Bro.M.லூர்துராஜ் (Late)
3. Bro.G.L. ஆல்பர்ட் செல்வராஜ் (Late)

அருட்சகோதரிகள் :

1. Sr.மேரி மைக்கேலினா (late)
2. Sr.C.மேரி ஆட்ரியானா(late)
3. Sr.P.குளோட்டில்டா (late)
4. Sr.அசுந்தா (late)
5. Sr.மரிய கொரட்டி (late)
6. Sr.எப்ரேசியா (late)
7. Sr.அன்னா சேவியர்(late)
8. Sr.தாசில்தா(late)
9. Sr.செலஸ்டின் (late)
10. Sr.செலின் (late)
11. Sr.பிரான்சிஸ்கா (late)
12. Sr.யூஜின் (late)

13. Sr.செசீலியா
14. Sr.சகாய சத்யா
15. Sr.M.J.லீனா மேரி
16. Sr.P.S. சீலியா
17. Sr.P.அல்போன்சா
18. Sr.ஆன்டோ
19. Sr.ஹென்ரீட்டா
20. Sr.S.லீனா சூசை
21. Sr.கரோலின் அனிதா
22. Sr.D.சத்யா மார்த்தாள்
23. Sr.வீனா
24. Sr.டோரா

வழித்தடம் :

பூந்தமல்லி To பேரம்பாக்கம். 91, 91B, 91P, 107, T87, ATH ஹலிமா, பாரதி.

வரலாறு :

பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிவுபடாத சூழலில், நிசாம் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சம் மற்றும் போர் இவற்றின் காரணமாக அங்கிருந்து மூன்று முறை குடிபெயர்தல் நடைபெற்றது. கி.பி. 1786 -ம் ஆண்டில் குண்டூர் பகுதியிலிருந்து 300 குடும்பங்கள் கீழச்சேரி பகுதியில் குடிபெயர்ந்தன. அதைத் தொடர்ந்து வளர்புரம் பகுதியிலும் தெலுங்கு மொழி பேசும் கிறிஸ்தவ மக்கள் குடியமர்ந்தனர்.
வளர்புரத்தை மையமாகக் கொண்டு நெமிலி, தொடுகாடு, நயப்பாக்கம் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் பரவத் தொடங்கினர். பஞ்சம் பட்டினியால் உடைமைகள் அனைத்தையும் இழந்து ஏதுமற்ற அந்நியர்களாக தாங்கள் குடியேறிய இடத்தில் கடவுளும், மறைப்பணியாளர்களுமே துணை புரிந்ததால் இம்மக்களிடத்தில் இறை நம்பிக்கையும், பக்தியும் மேலோங்கி வளர்ந்தது.

இறைவனின் கருணையாலும் தங்களின் கடின உழைப்பாலும் படிப்படியாக உயர்ந்த தெலுங்கு மொழி பேசும் கிறிஸ்தவ மக்கள் அரசிடமிருந்து விவசாய சலுகைகள் பெற்றுக் கொள்ள மறைப்பணியாளர்கள் பெரிதும் உதவினர்.

சென்னை மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருந்த வளர்புரத்தில் முதல் ஆலயம் 1830 -ல் கட்டத் தொடங்கப்பட்டு 1850-ல் முடிக்கப்பட்டது. இடைப்பட்ட 1845 -ம் ஆண்டில் வளர்புரம் பங்காக அறிமுகப்படுத்தப்பட்டது. 1859 -ல் திரு கிளிசன் எடுத்த கணக்கெடுப்பின்படி 508 கிறிஸ்தவ மக்கள் வளர்புரத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

வளர்புரம் பங்கானது 1886-ம் ஆண்டு முதல் பத்ருவாதோ நிர்வாகத்திற்குட்பட்ட மயிலை மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. வளர்புரம் பங்கு வரலாற்றின் அதிக காலம், அதாவது 30 ஆண்டுகள் அருட்பணியாற்றிய அருட்தந்தை லோபோ அவர்களின் பணி சிறப்பு மிக்கதாகும்.
1985-ம் ஆண்டில் அருட்தந்தை திவ்யநாதன் அவர்கள் வளர்புரத்தில் மற்றொரு ஆலயம் ஒன்றை எழுப்பினர். 2002 ஜூலை முதல் வளர்புரம் பங்கு செங்கல்பட்டு மறைமாவட்டத்தின் கண்காணிப்பில் வந்தது. 2012-ம் ஆண்டில் அருட்தந்தை. ஜோசப் செங்கோல் IVD. அவர்கள் இப்போதிருக்கும் ஆலயத்தை நிர்மாணித்தார்.

வளர்புரம் பங்கிலிருந்து இதுவரை 25 அருத்தந்தையர்களும், 3 அருட்சகோதரர்களும், 24 அருட்சகோதரிகளும், உருவாகியுள்ளனர்.

ஆந்திராவில் நெல்லூர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய, மேதகு ஆயர் P.C. பாலசாமி அவர்கள் வளர்புரம் பங்கைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஆன்மீக வளர்ச்சியில் வளர்புரம் பங்கு பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

ஏழ்மையிலும் வறுமையிலும் உழன்ற வளர்புரம் மக்கள் விவசாயத்தின் வேரும் இன்று ஊரைச் சுற்றி அமைந்துள்ள தொழிற்கூடங்கள், பொறியியல் கல்லூரிகள் வரவால் வளர்ச்சி கண்டுள்ளனர். இறைவனைப் பற்றிக்கொண்டு வாழும் வாழ்கையும், உழைக்கத் தயங்காத உள்ளமும் கொண்டிருப்பதால் வளர்புரம் மக்கள் வரலாறு கண்டிருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

இறைவனின் திருவருளால் இறைமக்களின் ஆன்மீகம் மற்றும் வாழ்க்கை நிலைகளில் வளர்ச்சியின் பெருமிதம் நிறைந்துள்ள வளர்புரம் பங்கு நூற்றாண்டைக் கடந்த பவளவிழா காண்கிறது. இந்த அரிய விழாவினை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பித்து மகிழ்வோம்.

சென்னை மயிலை மறை மாவட்டத்தின் கீழ் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. (1845-1922)
2. அருட்தந்தை. பி. காமா (1923-1930)
3. அருட்தந்தை. ஸ்டான் (1930)
4. அருட்தந்தை. அற்புதம் (1930-1931)
5.அருட்தந்தை. சி.ஜி. கார்வாலோ (1931)
6. அருட்தந்தை. பிரிண்டோ (1931)
7. அருட்தந்தை. ஏ.எஸ். ராயன் (1931)
8. அருட்தந்தை. கோலாண்ட் (1931)
9. அருட்தந்தை. நாசரத் (1931-1933)
10. அருட்தந்தை. அருள் (1933)
11. அருட்தந்தை. ஜீயோ பெர்னான்டஸ் (1933-1935))
12. அருட்தந்தை. பெராய் (1935-1936)
13. அருட்தந்தை. ஏ. மாசஸ்கேரன்ஸ் (1936-1937)
14. அருட்தந்தை. சால்டன்டா (1937--1939)
15. அருட்தந்தை. லோபோ (1939-1368)
16. அருட்தந்தை. அந்தோணிதாஸ் (1968-1971)
17. அருட்தந்தை. எம். லூயிஸ் (1971-1975)
18. அருட்தந்தை. ஜேகப் தாமஸ் (1975-1980)
19. அருட்தந்தை. திவ்யநாதன் (1980-1988)
20. அருட்தந்தை. எம். ஏ. வின்சென்ட் (1988-1992)
21. அருட்தந்தை. அமல்ராஜ் (1992-1995)
22. அருட்தந்தை. தானிஸ்லாஸ் (1995-1998)
23. அருட்தந்தை. குஞ்சரகாட் (1998-2002)

செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் கீழ் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :

1. அருட்தந்தை. அகஸ்டின் தேவதாஸ் (2002-2007)
2. அருட்தந்தை. ஜோசப்செங்கோல் ஐ.வி.டி (2007-2013)
3. அருட்தந்தை. லியோ எட்வின் (2013-2018)
4. அருட்தந்தை. தாமஸ் பிரேம்குமார் (2018 முதல் தற்போது வரை).

தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் பங்கு உறுப்பினர்.