779 புனித பதுவை அந்தோனியார் ஆலயம், கல்பாளையத்தான்பட்டி

    

புனித பதுவை அந்தோனியார் ஆலயம்

இடம்: கல்பாளையத்தான்பட்டி,  பொய்கைப்பட்டி அஞ்சல், 621-306

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: திருச்சி

மறைவட்டம்: மணப்பாறை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி

பங்குத்தந்தை: அருட்பணி. ஜேம்ஸ்

குடும்பங்கள்: 400

கல்பாளையத்தான்பட்டியில் உள்ள ஆலயங்கள்:

1. புனித அந்தோனியார் ஆலயம்

2. புனித செபஸ்தியார் ஆலயம்

3. புனித ஆரோக்கிய மாதா சிற்றாலயம்

4. கிருஸ்தானியம்மாள் ஆலயம் 

மாதத்தில் ஒருமுறை திருப்பலி நடைபெறும்

திருவிழாக்கள்:

புனித பதுவை அந்தோனியார் திருவிழா ஜனவரி 16,17 தேதிகள் நடைபெறும். தற்போது 7 வருடமாக பிப்ரவரி நான்காவது வாரம் நடைபெறுகிறது.

ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் ஏப்ரல் கடைசி வாரத்தில் பரிசுத்த கிருஸ்தானியம்மாள் கோவில் வரலாற்று நாடகம் 4 நாட்கள் நடைபெறும்.

செப்டம்பர் 7 ம் தேதி புனித ஆரோக்கிய அன்னையின் திருவிழா நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. குழந்தை லாரன்ஸ் (late)

2. Fr. வேளாங்கன்னி, SJ

3. Br. ஆண்ட்டோ பிரகாஷ்

4. Sr. எலிசபெத் மேரி, OSM

5. Sr. சகாயமேரி, CFMSS 

6. Sr. லீமா ரோஸி, CIC

வழித்தடம்: மணப்பாறை -துவரங்குறிச்சி வழித்தடத்தில், கல்பாளையத்தான்பட்டி பேருந்து நிறுத்தம்.

Location map: 

புனித அந்தோணியார் தேவாலயம்

https://maps.google.com/?cid=8414453145567365642&entry=gps

வரலாறு:

ஊரின் முன்னோர்கள் டால்மியாபுரம் அடுத்துள்ள சன்னாநல்லூர் என்ற கிராமத்திலிருந்து நடைபயணமாக வந்து புதுப்பட்டியில் தங்கினர். சிறிது காலமே அங்கு வாழ்ந்த அவர்கள் இடம்பெயர்ந்து கல்பாளையத்தான்பட்டியில் குடியேறினர். ஒரே இரவில் கிணறு வெட்டி அதன் மூலம் தண்ணீர் எடுத்து வந்தனர். அந்த ஊர் தான் கல்பாளையத்தான்பட்டி என்று அழைக்கப்படுகிறது.

முன்னோர்கள் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கீற்றுக்கொட்டகையில் ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு நடைபயணமாகச் சென்று நன்கொடை சேகரித்து, 1896 ஆம் ஆண்டு அருள்தந்தை. பத்தியநாதரால் புனித பதுவை அந்தோணியார் கோயில் கட்டப்பட்டது. பின்னர் 2000 ஆம் ஆண்டில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. பழைமையான இந்த ஆலயம் பழுதடைந்துள்ளதால் இதனை அகற்றிவிட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. 

அற்புதங்கள் :

புனித பதுவை அந்தோணியார் பில்லி சூனியம், பிசாசின் பிடியிலிருந்து விடுதலை, குழந்தை வரம் என பல்வேறு அற்புதங்களை வாரி வழங்கும் கோடி அற்புதராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

பரிசுத்த கிறிஸ்தானியம்மாள் ஆலய வரலாறு :

முதன்முதலில் முன்னோர்கள் 1904 ஆம் ஆண்டு ஓட்டுக் கட்டிடத்தில் பரிசுத்த கிறிஸ்தானியம்மாளின் சுரூபம் கொண்டு வந்து வழிபட்டனர். பின் 1992 ஆம் ஆண்டு ஓட்டுக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு கோபுரம் எழுப்பி பரிசுத்த கிறிஸ்தானியம்மாள் கோயில் என தற்போது அழைக்கப்படுகிறது. பரிசுத்த கிறிஸ்தானியம்மாள் நினைவு நுழைவுவாயில் 2010 ஆம் ஆண்டு கல்பாளையத்தான்பட்டி எல்லையில் கட்டப்பட்டு உள்ளது.

நாடகம் மற்றும் அன்னதானம் :

1906 ஆம் ஆண்டுகளில் இருந்து ஈராண்டுகளுக்கு ஒரு முறை பரிசுத்த கிறிஸ்தானியம்மாளின் வரலாற்று சரித்திர நாடகம் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முதல் திங்கள் அன்னதானமும் நடைபெறுகிறது.

ஆரோக்கிய அன்னை ஆலயம் :

நுழைவுவாயிலின் அருகில் ஆரோக்கிய அன்னையின் சிற்றாலயம் ஒன்று கி.பி.1924 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. ஆரோக்கிய அன்னையின் தேர்ப்பவனியானது ஆண்டு தோறும் செப்டம்பர் 7 ஆம் தேதி ஆடம்பர திருப்பலியும் சிறப்புடன் நடைபெறுகிறது.

புனித செபஸ்தியார் கோயில் :

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு செபஸ்தியார் சிலுவைத் திண்ணையானது ஓட்டுக் கட்டிடமாக கட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டு கோபுரம் எழுப்பி இன்றைய செபஸ்தியார் கோயில் உருவாக்கப்பட்டது. இவ்விடம் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் இடமாகத் திகழ்கிறது.

தொடர்ந்து மலையடிப்பட்டி பங்கின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது கல்பாளையத்தான்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய இறைசமூகம்.

தகவல்கள்: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap 

ஆலய புகைப்படங்கள்: கல்பாளையத்தான்பட்டி மண்ணின் மைந்தர்.