890 புனித லொயோலா இஞ்ஞாசியார் திருத்தலம், நென்மேனி

   

புனித லொயோலா இஞ்ஞாசியார் திருத்தலம்

இடம்: நென்மேனி, சாத்தூர் தாலுகா, நென்மேனி அஞ்சல், 626202

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: இயேசுவின் திருஇருதய ஆலயம், சாத்தூர் 

பங்குத்தந்தை அருள்பணி. பா. காந்தி

தொடர்புக்கு: +91 99943 00675

குடும்பங்கள்: 2

மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை குணமளிக்கும் நற்கருணை வழிபாடு, திருப்பலி. தொடர்ந்து அன்னதானம்.

திருவிழா: ஜூலை மாதம் 30, 31

வரலாறு:

1770 -ஆம் ஆண்டு ஆங்கிலேயப் போர்வீரர்கள் நென்மேனி கிராமத்தில், புனித இஞ்ஞாசியார் சுரூபங்களை விட்டுச் சென்றதாகவும், அச்சுரூபங்களை வைத்து கூரைக்கோவில் கட்டியதும், பின் உயிருக்குப் போராடிய ஆங்கிலேய படைவீரன் இஞ்ஞாசியாரிடம் வேண்டியதால் பூரண குணம் பெற்றதும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

முதன்முதலாக 1889-ஆம் ஆண்டு இயேசு சபை அருட்பணியாளர் ஜெ.பி திரிங்கால்

அடிகளார் குருக்களோடும், கிறிஸ்தவர்களோடும் திருயாத்திரையாகச் சென்று புனித இஞ்ஞாசியார் திருவிழாவினை தேர்ப்பவனியுடன் ஆடம்பரமாகக் கொண்டாடினார்கள்.

1898-ஆம் ஆண்டு கூரைக் கோவிலையொட்டி தற்போதுள்ள ஓடு வேய்ந்த ஆலயம் கட்டி அர்ச்சிக்கப்பட்டது. இந்த ஆலயம் புனித இஞ்ஞாசியார் பெயரில் அமைந்துள்ள பழைமையான கத்தோலிக்க ஆலயங்களில் முக்கியமானது.

விழாக்காலங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகமாக வரவே, ஓடு வேய்ந்த ஆலயத்திற்கு அருகில் 28.06.2018-ல் எழில் மிகுந்த நிலையில் புதிய ஆலயம் கட்டி அர்ச்சிக்கப்பட்டது.

22.07.2022-ல் புதிய கொடிமரம் நிறுவி அர்ச்சிக்கப்பட்டது.

மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை நற்கருணை வழிபாடும் திருப்பலியும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகிறது. புனிதரின் பரிந்துரையால் எண்ணற்ற புதுமைகள் நாள்தோறும் நிறைவேறி வருகின்றதால், திருத்தலத்தை நாடி ஏராளமான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வருகை தருகின்றனர்.

திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் 30,31 தேதிகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. குறிப்பாக காமநாயக்கன்பட்டி, சாத்தூர், பாம்பன், இராமேஸ்வரம், புலையனார்கோட்டை, முப்பையூர் என்று பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வருகை தருகின்றனர். 

வழித்தடம்: 

சாத்தூர் -இருக்கன்குடி -நென்மேனி. சாத்தூரிலிருந்து 12கி.மீ தொலைவில் நென்மேனி அமைந்துள்ளது. 

Location map: St. Ignatius Church

https://maps.app.goo.gl/GcLgCPtFAPAY3oPi6

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. பா. காந்தி அவர்கள்.