626 தூய விண்ணக அன்னை ஆலயம், கல்லங்குழி

  

தூய விண்ணக அன்னை ஆலயம் 

இடம் : கல்லங்குழி 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை

மறைவட்டம் : முளகுமூடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித சூசையப்பர் ஆலயம், மணலிக்கரை 

பங்குத்தந்தை : அருட்பணி. இஞ்ஞாசிமுத்து, OCD

குடும்பங்கள் : 210

அன்பியங்கள் : 8

திருப்பலி நேரங்கள் : 

ஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணி

புதன்கிழமை மாலை 06.00 மணி நவநாள் திருப்பலி 

மாதத்தின் கடைசி புதன்கிழமை மாலை 06.00 மணிக்கு நவநாள் மற்றும் நற்செய்தி கொண்டாட்டம். 

திருவிழா : ஆகஸ்ட் 15 -ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். 

மண்ணின் இறை அழைத்தல்கள்:

1. அருட்பணி. வின்சென்ட் சுகுமார், OCD 

2. அருட்பணி. ஜோஸ், SCJ

3. அருட்சகோதரி. P. மேரி மைக்கிள், CTC

4. அருட்சகோதரி. V. மேரி உஷா, OSB

வழித்தடம் : வேர்க்கிளம்பி -செங்கோடி சாலையில், கல்லங்குழி அமைந்துள்ளது. 

Location map :

https://www.google.com/search?client=ms-android-vivo-rev1...

வரலாறு :

முத்தமிழும், முக்கனியும், முக்கடலும் கொண்ட அழகிய குமரி மாவட்டத்தின், மேற்குப் பகுதியில் வான்தொடும் மரங்களும், தேன் தரும் மலையையும், குளிர்ந்த காற்றை பரவ விடும் அணைகளையும், ஆறுகளையும் உள்ளடக்கிய பசுமை நிறைந்த பகுதியில் உள்ள சிறு ஊர் தான் கல்லும் குழியும் கொண்ட கல்லங்குழி. 

கி.பி 1960 ஆம் ஆண்டு மணலிக்கரை புனித சூசையப்பர் ஆலயத்தை தலைமை ஆலயமாகக் கொண்டு

குமாரபுரம்

சோலாபுரம்

முகிலன்கரை

கல்லறவிளை

இளம்பிலாவிளை

முளவிளை

செட்டிச்சார்விளை

சுவாமியார்மடம்

சுருளக்கோடு

வீரப்புலி 

பெருஞ்சிலம்பு

-ஆகிய கிளைப்பங்குகள் இறைவழிபாட்டுடன், சமூக பொருளாதார பணிகளையும் கார்மெல் சபையினர் செய்து வந்தனர். 

இந்த காலகட்டத்தில் தற்போதைய கல்லங்குழி பங்கிற்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மணலிக்கரை, கல்லறவிளை, இளம்பிலாவிளை ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளில் பங்கேற்று வந்தனர். இவ்வாலயங்களுக்கு மிக நீண்ட தூரம் கல்லங்குழி பகுதி மக்கள் கால்நடையாக நடந்து வருவதை கண்ணுற்ற அப்போதைய மணலிக்கரை பங்குத்தந்தை அருள்பணி. லூக்காஸ் பால் OCD அவர்கள், 1963 ம் ஆண்டு கல்லங்குழியில் தூய விண்ணக அன்னைக்கு ஆலயம் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனை பங்கின் குறிப்பேட்டிலும் குறித்து வைத்தார். 

அவரைத் தொடர்ந்து பணியாற்றிய அருள்பணி. ஜெரோம் OCD அவர்கள் ஆலயம் அமைப்பதற்காக செயல்வடிவம் கொடுத்து, திரு. இராஜமணி அவர்களிடம் 32 சென்ட் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு ஓலை குடிசை அமைத்து  ஞான உபதேசம் (மறைக்கல்வி) கற்பிக்கப்பட்டு வந்தது. 

அதன் பின்னர் 08.12.1968 அன்று அன்னையின் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடந்து வந்தன. ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 19.02.1973 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. அன்றைய நாளில் கல்லங்குழியைச் சேர்ந்த  அன்னையின் பக்தர்கள் 93 பேர்களுக்கு திருமுழுக்கு வழங்கப்பட்டது. ஆலயம் அர்ச்சிக்கப் படும் போது கல்லறவிளை ஆலயத்திலிருந்து வழங்கப்பட்ட பாத்திமா அன்னை சுரூபம் இருந்தது. பின்னர் ஆயர் அவர்களால் தற்போதைய விண்ணக அன்னையின் சுரூபம் வழங்கப்பட்டது. 

அருள்பணி. ஸ்டீபன் மேரி OCD அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். அப்போது ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

Kottar Social Service Society (KSSS):

Child Health Program என்ற திட்டத்தின்கீழ் என்ற 1977 ம் ஆண்டு  கல்லங்குழியில் KSSS தொடங்கப்பட்டது. இதன்மூலமாக மக்களுக்கு உணவு பொருட்கள்  வழங்கியதோடு, இந்நிறுவனத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் வீடுவீடாக சென்று அத்தியாவசிய மருந்து பொருட்களை வழங்குவது, நல் ஆலோசனை வழங்குவது போன்ற பணிகளையும் செய்து வந்தனர். 1993 ல் மறைமாவட்டம் இத்திட்டத்தை கைவிட்டது. 

தமிழக கார்மெல் சபை பொறுப்பில் கல்லங்குழி:

ஆன்மீகப் பணிகளோடு சமூகப் பணிகளாக ஏழைகளுக்கு வீடு கட்டி தருதல், வீடுகள் பராமரிக்க உதவுதல், மருத்துவ உதவிகள் போன்ற பணிகளை செய்து வந்த கேரளாவைச் சேர்ந்த மஞ்ஜூமெல் மறைமாநில கார்மெல் சபை அருட்பணியாளர்களான சிட்டஸ், ஸ்டீபன் மேரி, மைக்கிள், சேவியர் போன்றவர்கள் சிறப்பாக செய்து வந்த தங்களது பணிகளை 1991 ஆம் ஆண்டு தமிழக கார்மெல் சபையினரிடம் வழங்கினர். அதுவரை மலையாள மொழியில் நடத்தப்பட்டு வந்த திருப்பலி, இதன்பிறகு தமிழில் நிறைவேற்றப்பட்டு வந்தது. தமிழக கார்மெல் சபையின் முதல் பங்குத்தந்தையாக கல்லங்குழி பங்கில் அருள்பணி. ஆல்பர்ட் OCD அவர்கள் பொறுப்பேற்றார். இவரது பணிக்காலத்தில் 1991 ம் ஆண்டு பங்குப்பேரவை அமைக்கப்பட்டது. ஆலய கோபுரத்தில் பெரிய மணி பொருத்தப்பட்டது. 

தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமானது அருட்பணி. கிறிஸ்துதாஸ் OCD பணிக்காலத்தில் 30.03.1995 அன்று வாங்கப்பட்டது. 

மணலிக்கரை பங்கின் கிளைப் பங்குகளிலேயே கல்லங்குழி பங்கில் தான் 2001 ஆம் ஆண்டு முதன் முதலாக சமபந்தி விருந்து (அன்புவிருந்து)  தொடங்கப்பட்டது. 

அருட்பணி. பீட்டர் ஜூலியன் OCD பணிக்காலத்தில் ஆலய நுழைவாயில் கட்டப்பட்டு, 28.03.2004 அன்று மணலிக்கரை தலைமைப் பணியாளர் அருட்பணி. பெரியநாயகம் OCD அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

அருட்பணி. வின்சென்ட் OCD பணிக்காலத்தில் 2008 ம் ஆண்டு கல்லறைத் தோட்டத்திற்கு நிலம் வாங்கப்பட்டது. மேலும் தூய விண்ணக அன்னைக்கு 5 நாட்கள் நடத்தப்பட்டு வந்த திருவிழா, 2009 ஆம் ஆண்டு முதல் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு, தேர்பவனியும் நடத்தப்பட்டது. தெரிசனங்கோப்பு ஆலயத்திலிருந்து தேர் நன்கொடையாக வழங்கப்பட்டது. 

பங்குத்தந்தை அருட்பணி. வின்சென்ட் OCD முன்னிலையில், மணலிக்கரை தலைமைப் பணியாளர் அருட்பணி. அனஸ்தாஸ் OCD அவர்களால் 15.08.2010 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடித்தளம் அமைக்கும் பணியை அன்பிய மக்கள் இணைந்து செய்தனர். 

பின்னர் அருள்பணி. ராயப்பன் OCD  அவர்கள் பணிக்காலத்திலும், அருட்பணி. ஆரோக்கியசாமி OCD பணிக்காலத்திலும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

தொடர்ந்து பொருளாதார நெருக்கடி காரணமாக வேலைகள் தடைபட்ட வேளையில் பொறுப்பேற்ற அருட்பணி. பால் ஆண்ட்ரூஸ் OCD அவர்களின் அயராத முயற்சி, உழைப்பு மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெரோம் தாஸ் அவர்களால், 15.08.2018 அன்று அர்ச்சிக்கப் பட்டது. பின்னர், மணலிக்கரை தலைமைப் பணியாளர் அருட்பணி. மரிய டேவிட் OCD அவர்களால் 24.07.2020 அன்று ஆலய முன் கோபுரம் அர்ச்சிக்கப் பட்டது. 

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. அருட்பணிப்பேரவை

2. அன்பியங்கள் 

3. மறைக்கல்வி மன்றம் 

4. இளைஞர் இயக்கம் 

5. மரியாயின் சேனை 

6. கிராம முன்னேற்ற சங்கம் 

7. சிறுவழி இயக்கம் 

8. பாலர்சபை 

9. பாடகற்குழு 

10. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் 

11. திருவழிபாட்டுக் குழு

12. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

13. தொழிலாளர் இயக்கம் 

14. கார்மெல் 3ம் சபை

அன்பியங்கள்:

1. புனித மத்தேயு 

2. புனித மாற்கு 

3. புனித விண்ணக அன்னை 

4. புனித சவேரியார் 

5. புனித சிறுமலர் 

6. புனித யோவான் 

7. புனித அல்போன்சா

8. புனித யூதா ததேயு 

ஆகிய 8 அன்பியங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. 

பங்கில் பணியாற்றிய கார்மேல் பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. சிஸ்டஸ் OCD

2. அருட்பணி. ஸ்டீபன் மேரி, OCD

3. அருட்பணி. சேவியர், OCD

4. அருட்பணி. ஆல்பர்ட், OCD

5. அருட்பணி. கிறிஸ்துதாஸ், OCD

6. அருட்பணி. கிறிஸ்டோபர், OCD

7. அருட்பணி. சார்லஸ், OCD 

8. அருட்பணி. பீட்டர் ஜூலியன், OCD 

9. அருட்பணி. ஆன்றனி ஜோசப், OCD 

10. அருட்பணி. ஜான் ஜூலியட், OCD 

11. அருட்பணி. வின்சென்ட், OCD 

12. அருட்பணி. இராயப்பன், OCD 

13. அருட்பணி. ஆரோக்கியசாமி, OCD

14. அருட்பணி. பால் ஆண்ட்ரூஸ், OCD 

15. அருட்பணி. இஞ்ஞாசிமுத்து, OCD (தற்போது)

பங்கில் பணியாற்றிய கார்மெல் அருட்சகோதரிகள்:

Sr. றேபர்டா, 

Sr. செபில்ஸ், 

Sr. ரொமானோ, 

Sr. பெல்சி, 

Sr. மெல்பி, 

Sr. அனக்குலேட், 

Sr. கார்மெல், 

Sr. சாந்தி, 

Sr. மோடஸ்டா, 

Sr. ரோஸ்மேரி, 

Sr. மேரி, 

Sr. ஞானசெல்வம், 

Sr. புஷ்பவாணி, 

Sr. செலின்கலா, 

Sr. ரெஜி, 

Sr. ஜாய்ஸ், 

Sr. செலின்கலா 

Sr. ரெஜின் தெரஸ் மேரி

மற்றும் பல அருட்சகோதரிகள்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. இஞ்ஞாசிமுத்து OCD

ஆலய வரலாறு : ஆலய அர்ச்சிப்பு விழா மலரில் இருந்து தொகுக்கப்பட்டது.