463 புனித யூதா ததேயு ஆலயம், பேளுக்குறிச்சி


புனித யூதா ததேயு ஆலயம்

இடம் : பேளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி அஞ்சல், சேந்தமங்கலம் தாலுக்கா, 637402

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம், சேந்தமங்கலம்

பங்குத்தந்தை : அருட்பணி. வேதநாயகம், (கப்புச்சின் சபை)

குடும்பங்கள் : 15
அன்பியம் : 1

திருப்பலி நேரங்கள் :

மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் ஞாயிறு : காலை 11.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : அக்டோபர் மாதம் 28ம் தேதி.

வழித்தடம் : சேந்தமங்கலத்தில் இருந்து இராசிபுரம் வழியாக 16 கி.மீ தொலைவில் பேளுக்குறிச்சி புனித யூதா ததேயு ஆலயம் உள்ளது.

Location map : Belukurichi Tamil Nadu 637402

வரலாறு :

சேலம் மறைமாவட்டத்தில், சேந்தமங்கலம் பங்கில், பேளுக்குறிச்சி என்கிற சிற்றூரில் அமைந்துள்ளது புனித யூதா ததேயு ஆலயம்.

பேளுக்குறிச்சி கிறிஸ்தவ மக்களின் வேண்டுதலுக்கிணங்க, அன்றைய இராசிபுரம் பங்குத்தந்தை அருட்பணி. இருதயநாதன் அடிகளார் முயற்சியால் புனித யூதா ததேயு ஆலயம் ஒன்று கட்டிமுடிக்கப்பட்டு 25.01.1998 அன்று சேலம் மறைமாவட்ட முதன்மை குரு பேரருட்பணி. பால் அடிகளாரால் அர்ச்சித்து புனிதப்படுத்தப் பட்டது.

இவ்வாலயமானது, 2003 ம் ஆண்டிற்கு முன்பு வரை, இராசிபுரம் தூய லூர்து அன்னை ஆலயத்தின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது.

பிறகு, 2003 ம் ஆண்டு சேந்தமங்கலம் தனிப்பங்காக உயர்த்தப்படவே, பேளுக்குறிச்சி அதன் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.

சேந்தமங்கலத்தின் மூன்றாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. டேவிட் டோமினிக் அவர்களின் பணிக்காலத்தில், இவ்வாலயத்தின் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

பேளுக்குறிச்சி புனித யூதா ததேயு ஆலயமானது 25 -ம் ஆண்டு வெள்ளிவிழாவை நோக்கி சிறப்புற பயணிக்கிறது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. வேதநாயகம் (கப்புச்சின் சபை)