இடம் : கட்டனூர், இளையான்குடி தாலுகா
மாவட்டம் : சிவகங்கை
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : பரமக்குடி
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய சகாய அன்னை ஆலயம், சாலைக்கிராமம்
பங்குத்தந்தை : அருள்பணி. மா. ரமேஷ்
குடும்பங்கள் : 15
திருப்பலி : மாதத்தில் ஒருநாள்
திருவிழா : மே மாதத்தில்
Location map : https://g.co/kgs/zXi7qd
வரலாறு :
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வடவிருக்கை, திருகள்ளி, வீலிமாத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து மூன்று குடும்பங்கள் கட்டனூர் வந்து குடியேறி வாழ்ந்து வந்தனர்.
இந்த மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக ஓலைக்குடிசை ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. தொடர்ந்து சாலைக்கிராமத்தின் பங்குத்தந்தையர் இவ்வாலய மக்களின் ஆன்மீகத் தேவையை கவனித்து வந்தனர்.
சாலைக்கிராமம் பங்குத்தந்தை அருள்பணி. அமல்ராஜ் அவர்களின் முயற்சியால், கட்டனூரின் 15 குடும்பங்களுக்கும் சொந்தமான நிலத்தை புதிய ஆலயம் கட்டுவதற்கு எழுதிக் கொடுத்தனர். அருள்பணி. அமல்ராஜ் அவர்களின் பணிக்காலத்திலேயே புரிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. போதிய நிதி வசதி இல்லாததால் ஆலய கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க இயலவில்லை. அருள்பணி. மரிய பங்கிராஜ் அவர்களின் முயற்சியால் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1974 ம் ஆண்டு அர்ச்சிக்கப் பட்டது.
2008 ம் ஆண்டிலிருந்து மே மாதம் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாதத்தில் ஒருநாள் திருப்பலி, மே மாதத்தில் திருவிழா, கிறிஸ்துமஸ் திருப்பலி, நவம்பர் 2 ஆத்துமாக்கள் திருப்பலி, நினைவு திருப்பலிகள் சாலைக்கிராம பங்குத்தந்தையர்களால் நிறைவேற்றப் படுகின்றது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. மா. ரமேஷ்