541 புனித செபஸ்தியார் ஆலயம், மாஞ்சோலை

புனித செபஸ்தியார் ஆலயம்

இடம் : மாஞ்சோலை, சாமிநாயகன்பட்டி அஞ்சல், ஓமலூர் தாலுகா.

மாவட்டம் : சேலம்

மறைமாவட்டம் : சேலம்

மறைவட்டம் : சேலம்

நிலை : கிளைப்பங்கு

பங்கு : திரு இருதய ஆண்டவர் ஆலயம், சூரமங்கலம்

பங்குத்தந்தை : அருட்பணி. S. அருளப்பன், சேலம் மறைவட்ட முதன்மை குரு

குடும்பங்கள் : 12

அன்பியம் : 1

ஞாயிறு : மாலை 05.00 மணிக்கு திருப்பலி.

திருவிழா : ஜனவரி மாதம் இறுதி ஞாயிறு.

வழித்தடம் : சூரமங்கலத்திலிருந்து புதுரோடு மற்றும் மூலக்கடை வழியாக 5கி.மீ தொலைவில் மாஞ்சோலை உள்ளது.


வரலாறு :

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் (கி.பி 1905) கடுமையான வறட்சி நிலவியதன் காரணமாகக் காடையான்பட்டி -க்கு அருகிலுள்ள நடுப்பட்டியிலிருந்து, திரு. அந்தோணி -திருமதி. ஆரோக்கியம். குடும்பத்தில் உள்ள 6 உறுப்பினர்கள் மாங்குப்பைக்கு வந்து ஒரு கொட்டகை அமைத்து அதில் வாழத் தொடங்கினர். பொது ஜெப வழிபாட்டிற்காக ஒரு நிலப் பகுதியை நிர்ணயித்தனர். அந்த நிலம் பர்ன் ஸ்டேன்டர்டு (Burn standard & Co sail) கம்பெனியின் நிலம் ஆகும். இந்த கம்பெனியில் பணிபுரிந்த திரு. ஜார்ஜ் (த/பெ திரு சின்னப்பன்) அவர்களும், மாங்குப்பையில் வாழ்ந்த கிறிஸ்தவ மக்களும் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பர்ன் ஸ்டேண்டர்டு கம்பெனி இந்த நிலத்தை ஆலயத்திற்காகவும், ஜெப வழிபாட்டிற்காகவும் கொடுத்தனர். 

22.08.2003 அன்று மல்லூர் தாசில்தார் ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு சேலம் மறைமாவட்ட ஆயர் பெயரில் பட்டா வழங்கியுள்ளார். 

அருட்பணி. S. ஜான் ஜோசப் அவர்கள் சூரமங்கலம் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது, சேலம் மறைமாவட்டத்தின் பவளவிழா நினைவாக, புனித செபஸ்தியார் ஆலயத்தை கட்டி, 26.05.2005 அப்போதைய சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. பின்னர் ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு மாஞ்சோலை எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது. 

அருட்பணி. S. இருதயசெல்வம் அவர்களின் பணிக்காலத்தில் 2014 ல் ஆலயத்தின் முன்புறம் சிமென்ட் பேவர் தளம் போடப்பட்டது. 2017 ல் எஃகு கொடிமரம் நிறுவப்பட்டது. 

புனித செபஸ்தியார் கெபி கட்டப்பட்டு 22.01.2017 அன்று மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. S. ஜான்ஜோசப் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. மேலும் அருட்பணி. S. இருதய செல்வம் அவர்களின் முயற்சியால் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் சுற்றுச் சுவர் கட்டப் பட்டது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் ஆலய உறுப்பினர். 

வரலாறு : பங்கு ஆலய பொன்விழா மலர்.