443 புனித அந்தோணியார் தேவாலயம், கிறிஸ்துவிளாகம்

  

புனித அந்தோணியார் தேவாலயம்

இடம் : கிறிஸ்துவிளாகம், மேல தெருக்கரை, கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் -1

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : மார்த்தாண்டம் 

மறைவட்டம் : நாகர்கோவில் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்குகள் :

1. அமல உற்பவ மாதா ஆலயம், ஆனைப்பொற்றை

2. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், இறச்சகுளம்

3. புனித ஜார்ஜியார் ஆலயம், குலசேகரம்புதூர்

பங்குத்தந்தை : அருட்தந்தை. வில்பிறைட் 

குடும்பங்கள் : 80

அருள் வாழ்வியங்கள் (அன்பியம்) : 4

ஞாயிறு காலை 06.15 மணி காலை ஜெபம், 06.45 மணி திருப்பலி. 

செவ்வாய் மாலை 06.00 மணி ஜெபமாலை, 06.30 மணி திருப்பலி. 

சனி மாலை 06.00 மணி மாலை ஜெபம், 06.30 மணி திருப்பலி. 

மாதத்தின் முதல் வெள்ளி காலை 10.00 மணிக்கு உபவாச கூட்டம், திருப்பலி, நேர்ச்சை கஞ்சி. 

மாதத்தின் கடைசி சனிக்கிழமை மாலை 06.15 மணிக்கு மாலை ஆராதனை, திருப்பலி, நற்கருணை ஆராதனை. 

திருவிழா: ஜூன் மாதம் 05 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்சகோதரி. அனிலா கிறிஸ்டி, DM

2. அருட்சகோதரி. மரிய கிரேஸி, DM

வழித்தடம் : நாகர்கோவில் -வெட்டூர்ணிமடம் -டவுண் இரயில் நிலையம். 

வரலாறு :

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், மேலத் தெருகரை இயற்கை வளம் சூழ்ந்த அழகிய பகுதியாகும். இப்பகுதியில் அமைந்துள்ள அருள் வரங்களை அள்ளித் தருகின்ற புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயத்தின் வரலாற்றைக் காண்போம். 

ஆலய தொடக்கம் :

தொடக்க காலத்தில் நாஞ்சில் நாட்டுக்கு சொந்தமான இயற்கை சூழலும், நெல்விவசாயமும் இப்பகுதியில் காணப்பட்டதால், களியக்காவிளை அருகேயுள்ள கிராத்தூர், மரியகிரி போன்ற இடங்களில் இருந்து கிறிஸ்தவ குடும்பங்கள் மேலத் தெருகரை பகுதியில் குடியேறினர். 

தொடக்கத்தில் (1978 ஆண்டுவாக்கில்) மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், திருப்பலி மலங்கரை கத்தோலிக்க குருக்களால் நடத்தப்பட்டு வந்தது.

1979 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புனித அந்தோனியாரை பாதுகாவலராகக் கொண்டு சிறு ஓலைக் குடில் ஆலயம் கட்டப்பட்டு, திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

இவ்வாலய வளர்ச்சிக்கு முக்கிய காரரணமாக திகழ்ந்தவர் மறைந்த ஆயர் மேதகு லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகை எனபது என்றென்றும் நினைவு கூறத் தக்கது. 

பின்னர் இரண்டாம் கட்டமாக ஓலைக்குடிசை ஆலயம் மாற்றப்பட, ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. பங்கின் வெள்ளிவிழாவை முன்னிட்டு அருட்தந்தை. வர்கீஸ் பணிக்காலத்தில் தற்போதைய ஆலயம் 2003 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 

ஆலய வளர்ச்சி :

ஆலய வளர்ச்சிக்கு இங்கு பணிபுரிந்த பங்குத்தந்தயர்களும், அருட்சகோதரிகளும் முக்கியப் பங்கு வகித்தனர். 

1978 ஆம் ஆண்டில் பங்கை ஆரம்பித்த அருட்தந்தை. லாரன்ஸ் தோட்டம் (பின்னாளில் ஆயராக திருநிலைப் படுத்தப் பட்டவர்), அருட்தந்தை. கோசி வர்கீஸ் (தற்போதைய மாவேலிக்கரை ஆயர்), அருட்தந்தை. சேவியர் ஞாயப்பள்ளி கிராத்தூர் பங்கிலிருந்து வந்து திருப்பலி நிறைவேற்றினார். 

அடிப்படை வசதிகளை அமைத்தவர் அருட்தந்தை. மரிய அற்புதம் அவர்கள். 

அருட்தந்தை. செலஸ்டின் 

அருட்தந்தை. வர்கீஸ் 

அருட்தந்தை. வர்கீஸ் நடுதலா 

அருட்தந்தை. பிலிப் தயானந்த் 

அருட்தந்தை. தாமஸ் ஊனம்பறக்கல்

அருட்தந்தை. பீட்டர் பெனடிக்ட் ராஜன் ஆகியோர் ஆலய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினர். 

அருட்தந்தை. பீட்டர் பெனடிக்ட் ராஜன் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய கோபுரம், அன்னை மரியாள் குருசடியும் அமைக்கப் பட்டது. புனித அந்தோனியாரின் திருப்பண்டம் கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெற்றார். இவ்வாறு அருட்தந்தையின் பணிக்காலத்தில் பங்கில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றதால், இவரது பணிக்காலம் கிறிஸ்து விளாகம் பங்கின் பொற்காலம் எனப்படுகிறது. 

தொடர்ந்து  அருட்தந்தை. இராபர்ட், அவரைத் தொடர்ந்து அருட்தந்தை மரிய ஜாண் ஆகியோர் சிறப்பாக பணியாற்றினர். தற்போது அருட்தந்தை வில்பிறைட் அவர்கள் பங்கினை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்கிறார். 

புனித அந்தோணியாரின் அழியாத தோல் :

புனித அந்தோணியார் இறந்து 362 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கல்லறையை திறந்த போது புனிதரின் நாக்கு மற்றும் உடலின் தோல் பகுதிகள் அழியாமல் இருந்தன. அவை பதுவா நகரில் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

10.01.2012 அன்று பதுவா நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதரின் அழியாத தோல்பகுதி (திருப்பண்டம்), மார்த்தாண்டம் ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் நிரந்தரமாக அர்ச்சித்து ஆலயத்தில் வைக்கப் பட்டது. 

ஆலயத்தில் செவ்வாய் தோறும் மாலை 06.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் நடைபெறுகிறது. மேலும் ஜூன் 13 ம் தேதி புனிதரின் திருப்பண்டம் தேரில் ஊர்வலமாக கொண்டுவரப் பட்டு அனைவரும் வழிபடுவதற்கும், முத்தம் செய்து இறையாசீர் பெறுவதற்கும் அனுமதிக்கப் படுகிறது. இந்த புனித நிகழ்வில் குமரி மாவட்டம் மட்டுமின்றி, கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் வந்து பங்கேற்று, புனிதரின் வழியாக இறைவனின் ஆசீர்வாதங்களை பெற்றுச் செல்கின்றனர். 

வேண்டுதல் விண்ணப்பங்கள் :

மக்கள் தங்களின் குறைகளையும்,வேண்டுதல்களையும் ஆலயத்தின் விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். இவர்களுக்காக செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் நவநாளில் ஜெபிக்கப் படுகிறது. தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நவநாள் ஜெபத்தில் கலந்து கொண்டு, ஏராளமான இறை மக்கள் புனிதரின் பரிந்துரையால் எண்ணற்ற ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

தகவல்கள்: முன்னாள் பங்குதந்தை அருட்பணி. S. இராபர்ட் அவர்கள்.

கூடுதல் தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. வில்பிறைட் அவர்கள்.