413 ஜெகன்மாதா ஆலயம், கனகம்மாசத்திரம்

  

ஜெகன்மாதா ஆலயம்

இடம் : கனகம்மாசத்திரம், 631204

மாவட்டம் : திருவள்ளூர்
மறை மாவட்டம் : சென்னை -மயிலை உயர் மறை மாவட்டம்
மறை வட்டம் : அல்போன்சாபுரம்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித தோமையார் ஆலயம், நெடும்பரம்
2. புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், ஆற்காடு குப்பம்.

பங்குத்தந்தை : அருட்பணி. M. அந்தோணி தாஸ் (கப்புசின்)

இணைந்து பணிபுரியும் அருட்பணியாளர்கள் :
அருட்பணி. சூசை ராஜா (கப்புசின்)
அருட்பணி. ஜான்சன் (கப்புசின்)

குடும்பங்கள் : 9
அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி: காலை 07.30 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 07.30 மணிக்கு.

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி.

வழித்தடம் :
சென்னை -பூந்தமல்லி -திருவள்ளூர் -கனகம்மாசத்திரம்

சென்னை -திருப்பதி நெடுஞ்சாலை.

Location map : Kanakammachathram Tamil Nadu 631204

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த கனகம்மாசத்திரத்தில், மறை மாவட்ட இளங்குருமடம் ஒன்று இருந்தது. ஆகவே குருக்கள் மற்றும் குரு மாணவர்களின் ஆன்மீகத் தேவைகளுக்கு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

இவ்வேளையில் இப்பகுதியில் வாழும் கத்தோலிக்க குடும்பங்கள் இவ்வாலயம் வந்து திருப்பலியில் பங்கேற்று வந்தனர்.

தற்போது இளங்குருமடம் இங்கு இல்லை. ஆகவே கப்புசின் சபையின் இளங்குரு மாணவர்கள் தங்களது ஆன்மீக தயாரிப்புக்காக தற்காலிகமாகத் தங்கி பயிற்சி பெறுகிறார்கள்.

கனகம்மாசத்திரம் பகுதி அனைத்து வசதிகளும் நிறைந்த முக்கியப் பகுதியில் இருந்ததால், இதனுடன் நெடும்பரம் மற்றும் ஆற்காடு குப்பம் ஆலயங்களையும் கிளைப் பங்குகளாகக் கொண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

கப்புசின் சபை அருட்தந்தையர்கள் இப் பங்குத்தளத்தின் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தி வருகிறார்கள்.

இந்த ஆலயம் மிகச் சிறியதாக காணப்படுவதால், தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. M. அந்தோணி தாஸ் அவர்கள், மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புதிய ஆலயம் விரைவில் துவக்கப்பட்டு அழகியதொரு ஆலயமாக உருவாகிட இறைவனிடம் ஜெபிப்போம்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. M. அந்தோணி தாஸ் (கப்புசின்)