597 புனித சூசையப்பர் ஆலயம், நரசிங்கபுரம்


புனித சூசையப்பர் ஆலயம் 

இடம் : நரசிங்கபுரம், நரசிங்கபுரம் அஞ்சல், சேத்துப்பட்டு தாலுகா, 606902

மாவட்டம் : திருவண்ணாமலை 

மறைமாவட்டம் : வேலூர் 

மறைவட்டம் : சேத்துப்பட்டு 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : புனித அந்தோனியார் ஆலயம், வீரசம்மனூர் 

பங்குத்தந்தை : அருள்பணி. இ. அந்தோனி செல்வராஜ் 

குடும்பங்கள் : 292 (182+110)

அன்பியங்கள் : 11 (8+3)

திருவழிபாட்டு நிகழ்வுகள் :

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணி

வாரநாட்களில் திருப்பலி : காலை 06.30 மணி

செவ்வாய் மாலை 06.30 மணிக்கு திருப்பலி (கிளைப்பங்கு) 

சிறப்பு நிகழ்வுகள் :

முதல் ஞாயிறு : குழந்தைகளுக்கு திருமுழுக்கு திருப்பலியில் வழங்கப்படும் 

முதல் புதன் : மாலை 06.30 மணி -புனித சூசையப்பர் தேர்பவனி மற்றும் திருப்பலி 

முதல் வெள்ளி : மாலை 06.30 மணி - இறையிரக்க செபமாலை, நற்கருணை ஆராதனை, திருப்பலி

முதல் சனி : மாலை 06.30 மணி - புனித மரியன்னை தேர்பவனி, திருப்பலி

முதல் வெள்ளி நீங்கலாக மற்ற வெள்ளிக்கிழமைகளில்  திருப்பலிக்கு முன் காலை 06.00 மணிக்கு இறையிரக்க செபமாலை, நற்கருணை ஆசீர்வாதம்.

திருவிழா : 

மார்ச் 10 ம் தேதி கொடியேற்றம் 

மார்ச் 18 ம் தேதி நற்கருணைப் பெருவிழா 

மார்ச் 19 ம் தேதி பாதுகாவலர் பெருவிழா 

மார்ச் 20 ம் தேதி கொடியிறக்கம். 

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருள்சகோதரர். மரியதாஸ், SDB 

2. அருள்பணி. கிருபாகரன், SDB 

3. அருள்பணி. பிச்சைமுத்து, SDB 

4. அருள்பணி. பவுலரசு, (Vellore) 

5. அருள்பணி. தாமஸ் இளங்கோ, (Archdiocese of Chennai)

6. அருள்சகோதரி. ஜேனட் மேரி, FSJ (கிளைப் பங்கை சேர்ந்தவர்) 

7. அருள்பணி. மாறன், (Vellore) (கிளைப்பங்கை சேர்ந்தவர்) 

8. அருள்பணி. சேவியர் கலைவாணன், VC 

9. அருள்பணி. பிரசன்னா, HGN 

10. அருள்பணி. இன்பென்ட்ராஜ், M. Ss. Cc

11. அருள்பணி. தினேஷ், (Vellore) 

12. அருள்பணி. சேகர், SDB

வழித்தடம் : போளூர் - தேவிகாபுரம் -நரசிங்கபுரம்.

ஆரணி -நரசிங்கபுரம் (ஆரணியிலிருந்து தேவிகாபுரம் செல்லும் சாலை)

Location map : 

https://g.co/kgs/bzkpcJ

வரலாறு :

அருள்பணி. தாராஸ் அடிகளாரின் நற்செய்திப் பணியின் விளைவாக 1878 ஆம் ஆண்டு முதல் நரசிங்கபுரத்தில் மக்கள் கிறிஸ்தவ மறையில் இணைந்தனர். நரசிங்கபுரமானது 1882 ஆம் ஆண்டு முதல் பத்தியாவரம் பங்கின் கிளைப் பங்காக இருந்து வந்துள்ளது. 

சுமார் 1920 ஆண்டுவாக்கில் சிறு ஓலைக்குடிசை ஆலயம் கட்டப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது. 1920 ஆம் ஆண்டில் இங்கு இயங்கிக் கொண்டிருந்த RCM தொடக்கநிலைப் பள்ளி (ஈராசிரியர் பள்ளி) அரசு அங்கீகாரம் பெற்றது. 

12.07.2008 அன்று தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருள்பணி. A. சாமுவேல் அவர்கள் பணி பொறுப்பேற்றார். 

தற்போதைய புதிய ஆலயத்திற்கு 08.11.2012 அன்று அடிக்கல் போடப்பட்டு, ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 18.03.2015 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :

1. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

2. மரியாயின் சேனை 

3. அசிசி (பஜனை) சபை

4. பீடப்பணியாளர் இயக்கம் 

துறவற இல்லம்:

திருஇருதய சகோதரர்கள் சபை

அமலராக்கினி இல்லம்

அமலிவனம் 

சூசைநகர் அஞ்சல்

திருவண்ணாமலை 

632326.

பங்கிலுள்ள நிறுவனங்கள் :

RCM தொடக்க நிலைப்பள்ளி (ஈராசிரியர் பள்ளி)

அமலராக்கினி விழியிழந்தோருக்கான மேல்நிலைப்பள்ளி

அமலராக்கினி விழியிழந்தோருக்கான உள்விடுதி

அமலராக்கினி மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம். 

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருள்பணி. A. சாமுவேல் (2008-2009)

2. அருள்பணி. S. ரிச்சர்ட் பெரைரா (2009-2016)

3. அருள்பணி. I. அந்தோனி செல்வராஜ் (2016 முதல் தற்போது வரை..) 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. I.  அந்தோனி செல்வராஜ்.